’இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்’ என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் - முன்னுரையில் ஜெயமோகன்நனவிடைதோய்தல் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வியுற்றேன். Nostolgia என்பார்கள் ஆங்கிலத்தில். பழைய நினைவுகளை அல்லது அனுபவங்களை அசைபோடுதல். சினிமாவில் கொசுவத்தி சுழற்றுவார்கள். தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று சொல்லுவார்கள். பொதுஜன உதாரணம் என்றால் சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
நனவிடைதோய்தல் எழுதுதல் தனிக்கலை. அது எல்லோருக்கும் நன்றாக வாய்த்துவிடுவதில்லை. இது எல்லோருக்கும் சாத்தியம்தான். எழுத்து சாத்தியப்படுபவனுக்கு மட்டும் தனிரூட்டிலா வாழ்க்கை நடக்கிறது? தத்தமது தோழமை வட்டத்தில் விழிவிரியப் பகிருவதுடன் நிறைந்து போகின்றது இங்கே பலரது நனவிடைதோய்தல்கள். எழுத வாய்த்தவன் வார்த்தைகளில் அதைக் கொஞ்சம் தன் சரக்கையும் சேர்த்துவிட்டுத் தோய்த்துவிட முடிகிறது.
சினிமா ஃப்ளாஷ்பேக் கொசுவத்தி சுருட்டல்கள் ஒருவகை நனவிடைதோய்தல்தான். எழுத்தில் இல்லாத ஒரு வசதி சினிமாவில் உண்டு. எழுத்தைப் பொருத்தவரையில் நனவிடைதோய்தல் என்பது non fiction ஆதலால் சம்பவத்தைச் சுற்றி எழுப்பப்படும் எழுத்தில் நனவிடைதோய்பவர் தான் பார்த்தவைகளை, அனுபவித்தவைகளைத் தாண்டி கொஞ்சமே கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்க்க அனுமதி தருகிறான் வாசகன். அதுவும் கூட சம்பவமானது நனவிடைதோய்பவரின் பார்வை வட்டத்திலிருந்து விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேணும். காட்சிகளில் ரொம்பவும் கற்பனையை ஓட்ட முடியாது. ஏனென்றால் நனவிடைதோய்வதன் அவுட்லைனைச் சுற்றித்தான் காட்சி அமையும். வசனங்களில் சுதந்திரம் தாண்டவம் ஆடலாம். ஓரிரு மறக்கமுடியாத மனதில் தேங்கிப் போன வார்த்தைகள் தவிர்த்து வசனமானது வரிக்கு வரி அல்லது வார்த்தைக்கு வார்த்தை நம் நினைவில் இருப்பது சாத்தியமில்லை. சினிமாவில் அப்படியில்லை. ஃப்ளாஷ்பேக்குபவர் தான் பார்க்காத கவுண்டமணி - செந்தில் அல்லது வடிவேலு காமெடிகளையும் இடைச்செருக இயலும்.
சொல்வனத்தில் கருப்பு நகரம் என்று ஒரு நனவிடைதோய்தல் பதிவு எழுதியபோதுதான் இந்த வார்த்தையை அறிந்தேன். இப்போது கருப்புநகரம் வாசிக்கையில் இன்னமும் நிறைய சொல்லியிருக்கலமோ என்று தோன்றுகிறது. பெட்ரோல் தேடி அன்று அலைந்ததுவும், மூலக்கடை சச்சின் போஸ்டர்களும், தேடினது கிடைக்காமல் நா வரளத் திரும்பினதுவும், அந்தத் துலுக்கான லுக்கில் இருந்த பயலுடனான சந்திப்பு, சம்பவம், வசனம் எல்லாமும் நிஜம். மற்ற சேர்க்கைகள் எல்லாம் நான் அடித்துவிட்ட சரக்கு.
சினிமா ஃப்ளாஷ்பேக் கொசுவத்தி சுருட்டல்கள் ஒருவகை நனவிடைதோய்தல்தான். எழுத்தில் இல்லாத ஒரு வசதி சினிமாவில் உண்டு. எழுத்தைப் பொருத்தவரையில் நனவிடைதோய்தல் என்பது non fiction ஆதலால் சம்பவத்தைச் சுற்றி எழுப்பப்படும் எழுத்தில் நனவிடைதோய்பவர் தான் பார்த்தவைகளை, அனுபவித்தவைகளைத் தாண்டி கொஞ்சமே கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்க்க அனுமதி தருகிறான் வாசகன். அதுவும் கூட சம்பவமானது நனவிடைதோய்பவரின் பார்வை வட்டத்திலிருந்து விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேணும். காட்சிகளில் ரொம்பவும் கற்பனையை ஓட்ட முடியாது. ஏனென்றால் நனவிடைதோய்வதன் அவுட்லைனைச் சுற்றித்தான் காட்சி அமையும். வசனங்களில் சுதந்திரம் தாண்டவம் ஆடலாம். ஓரிரு மறக்கமுடியாத மனதில் தேங்கிப் போன வார்த்தைகள் தவிர்த்து வசனமானது வரிக்கு வரி அல்லது வார்த்தைக்கு வார்த்தை நம் நினைவில் இருப்பது சாத்தியமில்லை. சினிமாவில் அப்படியில்லை. ஃப்ளாஷ்பேக்குபவர் தான் பார்க்காத கவுண்டமணி - செந்தில் அல்லது வடிவேலு காமெடிகளையும் இடைச்செருக இயலும்.
சொல்வனத்தில் கருப்பு நகரம் என்று ஒரு நனவிடைதோய்தல் பதிவு எழுதியபோதுதான் இந்த வார்த்தையை அறிந்தேன். இப்போது கருப்புநகரம் வாசிக்கையில் இன்னமும் நிறைய சொல்லியிருக்கலமோ என்று தோன்றுகிறது. பெட்ரோல் தேடி அன்று அலைந்ததுவும், மூலக்கடை சச்சின் போஸ்டர்களும், தேடினது கிடைக்காமல் நா வரளத் திரும்பினதுவும், அந்தத் துலுக்கான லுக்கில் இருந்த பயலுடனான சந்திப்பு, சம்பவம், வசனம் எல்லாமும் நிஜம். மற்ற சேர்க்கைகள் எல்லாம் நான் அடித்துவிட்ட சரக்கு.
சரி, கதைக்கு வருவோம். நான் வாசித்தவரையில் நனவிடைதோய்தல் ஸ்பெஷலிஸ்டுகள் சுஜாதாவும், ஜெயமோகனும்தான். எஸ்.ரா.’வையும் சிலர் குறிப்பிடுகிறார்கள். நான் எஸ்.ரா. அதிகம் வாசித்ததில்லை. (ஏய்யா! உனக்கு சுசாதாவையும் செயமோகனையும் தவிர வேறேதும் தெரியாதாய்யா என்ற கூக்குரல்கள் கேட்கின்றன. ஓகே ஓகே - என்னத்த செய்ய... நீங்கதான் யாரையும் சஜஸ்டறது?)
ஜெயமோகனின் லாசரா குறித்த சாய்வு நாற்காலி என்னும் பதிவின் ஒரு பத்தியைப் பாருங்களேன்.
லா.ச.ரா ரசத்தை மிக விரும்பிச் செய்வார் என்றார் நண்பர். மைசூர் ரசம், பன்னீர் ரசம், எலுமிச்சை ரசம்,நெல்லிக்காய் ரசம் எனப் பலவகைகளில் செய்வார். சமையல் செய்ததைப் பற்றிச் சொல்லும்போது ‘இன்னிக்கு ஒரு ரசம் வச்சேன் பாரு..’ என்றுதான் சொல்வார். உணவில் ரசம் சுவையாக ஆவதற்கு ஒரு வயது தேவைப்படுகிறது. இளமையில் அடர்த்தியான புரதமும் கொழுப்பும் கொண்ட உணவுகளை நாக்கு விரும்புகிறது. வயிற்றின் அனல் அணைய ஆரம்பிக்கும்போது நாக்கு மணத்தை மட்டுமே முக்கியமாக நினைக்க ஆரம்பிக்கிறது. அப்போதுதான் ரசத்தின் அருமை தெரியவரும்.
நான் மேலே அண்டர்லைன் பண்ணியிருக்கும் எக்ஸ்ட்ரா பிட்’தான் ஒரு சாதாரணனிடமிருந்து ஒரு எக்ஸ்பர்ட் எழுத்தாளனை நனவிடைதோய்தல் பதிவில் தனியே அடையாளம் காட்டுகிறது.
‘வாழ்விலே ஒருமுறை’ - இருபது அத்தியாயங்கள் கொண்ட புத்தகம். ஒரு எழுத்தாளனின் இருபது வகை அனுபவங்கள், பார்வைகள், கருத்துகள், ரசனைகள் மீது நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது புத்தகம்.
புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன் படிக்கக் கையில் எடுத்தேன். ஒரு துன்பியலான அனுபவம் நேர்ந்த நாள் அது. பசித்துக் களைத்திருந்த நேரத்தில் பண்ண நேர்ந்த ஒரு கொடுமையான விமானப் பயண அனுபவத்தின் இடையே முதல் மூன்று அத்தியாயங்களைப் படித்திருந்தேன்.
.....“வாழ்விலே ஒரு முறை” “கண்ணீரில்லாமல்” இரண்டையும் கையிலெடுத்து இன்க்கி பின்க்கி பான்க்கி போட்டு, “கண்ணீரில்லாமல்” புத்தகத்தை கைப்பைக்குள் சொருகினேன்......
.....விசிறி சாமியார் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிளைப் பரிசளிக்க, எனக்கு வயிற்றின் அமிலக் கரைசல் மறுபடி நினைவுக்கு வர...
.....இப்போது ஜெயமோகன் வீட்டிற்குள் குட்டிப்பையன் மனோஜ் வந்து ஃப்ரிட்ஜ் உள்ளே இருந்த சிப்ஸ் வாங்கித் தின்றான். அடுத்த அத்தியாயத்தில் யாரேனும் ஏதேனும் தின்றால், நான் ஜன்னல் வழியே குதித்துவிடும் அபாயம் கருதி புத்தகத்தை மூடி உள்ளே வைத்தேன்.....
அப்போது மூடி வைத்த புத்தகத்தை இப்போது மறுபடி வயிறு முட்டத் தின்று களைத்திருந்த நாளொன்றில் படிக்கக் கையில் எடுத்தேன்.
திருவண்ணாமலையில் விசிறி சாமியாரை பவா’வுடன் சென்று சந்திக்கிறார் ஜெமோ. சாமியாரிடம் கேள்விகள் பலவற்றை முன்வைக்கிறார். பாண்டிச்சேரி அன்பர் கேட்ட கேள்விகளின் ரகம் அல்ல அவை என்றாலும், விசிறி சாமியாரைச் சீண்டிப்பார்க்க வல்ல அத்தனை ரகக் கேள்விகளும் அதில் அடக்கம். அத்தனை கேள்விகளுக்கும் குதூகலமான சிரிப்புடன், பிரியமான புன்னகையுடன், குறும்பு கொப்பளிக்க பதில் தருகிறார் விசிறி சாமியார்.
“சிரிக்கத் தெரியாதது ஆன்மிகமே அல்ல; சுய எள்ளல் ஆன்மிகத்தின் அடிப்படைகளுள் ஒன்று”, என்று இங்கே குறிப்பிடுகிறார் ஜெமோ. புதுவை அன்பருக்கு விசிறி சாமியார் லெவலில் பதில் சொல்லியிருந்தால்.... சரி வேண்டாம் விடுங்கள், அது முடிந்து போன சமாச்சாரம் :)
ஆசீரானை அப்பு அடித்து வீழ்த்திய அவதாரம் பதிவை நான் முன்னரே ‘குமுதம்’ தீராநதியில் வாசித்ததுண்டு.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எதிரே (பாரிமுனை) ஒரு காட்சி. ஆறரை அடி உயரத்தில் ஒரு மனிதர். உருண்டு திரண்ட தேகம். நம் சினிமாக்களில் வரும் அடியாட்களையொத்த தோற்றம். அவர் எதிரே நம் நடிகர் தனுஷுக்கு சித்தப்பா மகன் போல் தோற்றம் கொண்ட ஒரு ஒல்லிப்பிச்சான் மனிதர். அந்த உயர்ந்த மனிதரை விட ஒன்றரை அடி உயரக் குறைச்சல் வேறு. இந்த ஒல்லிப்பிச்சான் மனிதர் உயர்ந்த மனிதரை பொளந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார். எம்பிக் குதித்து முகத்தில் குத்துகளைச் சராமாரியாக வைக்கிறார். உயர்ந்த மனிதர், “அண்ணே! வேணாண்ணே! இனி இப்டி நடக்காதுண்ணே”, எனக் கெஞ்சுகிறார். அந்த உயர்ந்த மனிதர் ஓங்கி ஒரு அப்பு அப்பினால் ஒல்லிப்பிச்சான் தாங்க மாட்டாரல்லவா, இந்த மனிதர் ஏன் இப்படிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் என யோசித்தேன் அப்போது.
அடிப்பதற்கான வலு உடலில் இருந்து கிடைப்பதில்லை என்பதுவே இங்கே எளிய நிஜம். ’அவதாரம்’ வாசித்தபோது அந்த ராஜா அண்ணாமலை மன்ற நினைவுதான் தோன்றியது எனக்கு.
"ஆதி" புராணத்தில் ஜெமோ முன்வை க்கும் அனுபவம் மிக உக்கிரமானது முடிவுக்கு முந்தைய பத்தியை வா சிக்கும்போது என்னையறியாமல் அதன் உக்கிரம் தாளாமல் முகத்தை தன்னிச்சையாக நான் அஷ்டகோணலாக மாற்றியதை பின்னரே உணர்ந்தேன்.
பொதுவாக ஜெமோ எழுத்தில் இசை குறித்து நான் ஏதும் வாசித்ததில்லை (அல்லது வாசித்த நினைவில்லை). இசை பற்றி விஸ்தாரமாக எழுதுபவருமல்ல ஜெமோ. ஆகவே அவர் எழுதிய ”மகாராஜாவின் இசை” ஒரு அரிய பதிவு எனவே சொல்லலாம்.
இந்தப் புத்தகத்தில் கிடைக்கும் ஜெமோ’வின் ஆத்தெண்ட்டிக் நெடிய பதிவுகள் பலவற்றையும் விட இடையிடையே படிக்கக் கிடைக்கும் “களம்”, “தேசம்”, “குதிரைவால் மரம்”, “சாப்ளின்” ஆகிய சின்னஞ்சிறு அனுபவங்கள் விஷய கனம் மிக்கவை.
ஜெயமோகன் எழுத்துகளை ஏற்கனவே வாசித்துள்ளவர்களுக்கு இந்த அனுபவங்களும், பார்வைகளும் ஒரு டைரிக்குறிப்பினைப் புரட்டுவது போல, ஒரு சுவாரசியமான அனுபவம். ஜெயமோகனை முதல்முறை வாசிப்பவர்களுக்கு அவர் எழுத்து பற்றிய ஒரு அழுத்தந்திருத்தமான கோட்டினைக் காட்டும் நல்ல நூல்.
வாழ்விலே ஒரு முறை | ஜெயமோகன் | அனுபவக் கட்டுரைகள் | கிழக்கு பதிப்பகம் | 126 பக்கங்கள் | விலை ரூ. 80/-
‘
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மகிழ்ச்சியான செய்திதான்.
Deleteஆம்னிபஸ்ஸின் ஆரம்ப நாட்கள் முதல் ஊக்குவிப்பளித்த நீங்களும் உங்களைப் போன்றவர்களுமே எங்களுக்கு முக்கியமானவர்கள்.
நன்றி.
வாழ்விலே ஒரு முறைங்கற தலைப்பைப் பார்த்ததும் "அசோகமித்திரன்" அவர்களின் நூல் என்று நினைத்தேன். ஜெய்மோகனும் அதே தலைப்பில் எழுதி உள்ளது இப்போத் தான் தெரியும். நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteதொடர
ReplyDeleteஜெமோ தனது தளத்தில் நாவல் கோட்பாடு, வாழ்விலே ஒரு முறை ஆகிய இரண்டு புத்தகங்களின் ஆம்னிபஸ் மதிப்புரைகளுக்கும் லிங்க் கொடுத்துள்ளார். (http://www.jeyamohan.in/?p=36881) இவை இரண்டுக்கும் இடையில் (தொடர்ச்சியாக) வெளியிடப்பட்டுள்ள சொல்முகம் மதிப்புரையை விட்டுவிட்டார்! நான் அதில் இரோம் ஷர்மிளா இடுகை பற்றி விவாதத்தைப் பின்னூட்டமாக எழுப்பிய (சூழலைக் கெடுத்தது?) தான் காரணமாக இருக்குமோ?!
ReplyDeleteஐயோ சரவணன்...
Deleteஆம்னிபஸ் புத்தக வாசிப்பு நமக்குக் கொடுக்கும் அறிவுத் தூண்டுதலையும் உணர்வுத் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக இருக்கும் தளம். இதில் எழுதுவது நாங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க ஒரு தூண்டுதலாக இருக்கிறது.
பலரும் தங்களுக்கு நிறைவளித்த புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார்கள். அந்த வகையில்தான் இந்தப் பதிவும். ஏறத்தாழ இங்கிருக்கும் எல்லா பதிவுகளும் இது போல்தான் இருக்கும்.
புத்தகத்தைப் பற்றி எதுவுமே சொல்லாமல் திரும்பத் திரும்ப இங்கும் பிற பதிவுகளிலும் ஜெயமோகனின் ஆளுமை சார்ந்த விமரிசனங்களையே பின்னோட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களே, இதெல்லாம் ஊரறியாத ரகசியங்களா? பொது வாசகர்களே இணையத்தில் பல இடங்களில் எதிர்கொண்ட விமரிசனங்கள் இவை, ஜெயமோகன் வாசகர்களுக்கும் புதிதல்ல.
இதை எல்லாம் இங்கு எழுதுவதால் ஆம்னிபஸ் தளத்தின் உள்ளடக்கத்தை நீங்கள் எந்த வகையிலாவது உயர்த்துவதாக நினைக்கிறீர்களா? அல்லது, பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை எழுதும் உங்களைப் பற்றிதான் இதை வாசிப்பவர்கள் உயர்வாக நினைப்பார்கள் என்று கருதுகிறீர்களா?
நீங்கள் வாசித்த, ரசித்த புத்தக்த்தைப் பற்றி எழுதி அனுப்புங்கள் - நன்றாக இருந்தால் இடுகையிடுகிறோம். தமிழில் எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள் கவனப்படுத்தப்படாமல், பேசப்படாமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றையாவது இங்கு அறிமுகப்படுத்தினால் பயனிருக்கும். இது வேண்டாமே, ப்ளீஸ்? ஜெயமோகன் என்ன விமரிசிக்கப்படாதவரா, இல்லை வாசிக்கப்படாதவரா? நீங்களும் ஜெயமோகனை மட்டும் முக்கியமாக நினைத்துப் பேசுபவர்களின் கூட்டத்தில் நின்றுவிடப் போகிறீர்களா? யோசித்துப் பாருங்க.
நன்றி.
அதாவது பாஸ், சிறப்புப் பதிவராக கோபி வந்ததால் நான் எதையோ கேட்டு வைக்க, கிரி நான் குறிப்பிட்ட இடுகைக்கு லிங்க் கேட்டு பதிலும் சொல்ல, அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு, தவிர்க்க இயலாமல் சற்று விவாதம் நீணஃடு விட்டது!
Deleteஅத்துடன் போயிருக்க வேண்டியது... ஜெ தனது லிங்கில் அந்த ஒரு பதிவை மட்டும் சாய்ஸில் விட, என்னால் கீபோர்டை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை :-))
மற்றபடி, இந்தத் தளத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பற்றி அருட்பா மருட்பாவோ, நீயா நானாவோ நடத்துவதில் எனக்கும் துளியும் விருப்பம் இல்லை.
So, no more negative or positive or neutral comments about JeMo here. bye!
நல்லா விவாதிக்கிறீங்க சரவணன், நன்றி. :)
Deleteஅதாவது சரவணன்....
Delete”சொல்முகம் பதிவுல...”
நான் ஒண்ணு ரெண்டு மூணுன்னு வரிசையிட்டு இப்படி கேட்க...
நீங்கள் சொல்வது:
1) மணிப்பூர் (சுற்றுலா?) சென்று வந்த...
2) ஒரு மலையாளக் கவிஞரின் அனுபவங்களைக் கேட்டதிலேயே
3) அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும்,
நீங்க அஸால்ட்டா....
//கிரி, ஜெ. தானே மணிப்பூர் 10 ஆண்டுகளுக்கு முன் சென்று வந்திருப்பதாகக் கூட சொல்லியிருக்கிறார்தான். நான் கேட்பது,//
முதல் ரெண்டு கேள்வியை, உங்ககிட்ட பதில் இல்லாததால, “அப்பட்டமா” கடந்து போயிட்டா அது சரி....
ஆனா, ஜெயமோகன் சொல்முகம் பதிவைப் படிச்சிருக்கலாம், படிக்காம போயிருக்கலாம், படிச்சிருந்தாலும் உங்க, எங்க பின்னூட்டங்களைப் பார்த்திருக்கலாம், பார்க்காமலும் போயிருக்கலாம்.... இப்படி பல சாய்ஸ்கள் உள்ள விஷயத்தை....
//ஜெ தனது லிங்கில் அந்த ஒரு பதிவை மட்டும் சாய்ஸில் விட, //
அப்படின்னு நீங்க கிண்டலடிக்கலாம்.
என்னா நியாயம் சார் இந்த நியாயம்....???
அன்புள்ள கிரி,
Deleteவிட மாட்டேன்றிங்களே :)
/// முதல் ரெண்டு கேள்வியை, உங்ககிட்ட பதில் இல்லாததால, “அப்பட்டமா” கடந்து போயிட்டா அது சரி.... ///
பதிவுக்கு சற்று நேரடித்தொடர்பற்ற பின்னூட்டம் என்பதால் 'பாயிண்ட் பை பாயிண்ட்' பதில்சொல்லி மல்லுக்கட்ட விருப்பம் இன்றியே முதன்மையான விஷயத்தைத் தொட்டு சுருக்கமாக எழுதியிருந்தேன்.
ஜெயமோகன், இரோம் ஷரிமிளா முதல் அண்ணாதுரை, பெரியார் (மன்னிக்கவும், ஈ'வே'ரா), பகத் சிங், நேதாஜி வரை, பாரதியார் உட்பட்ட ஆளுமைகள் மேல் தீர்ப்பெழுத எப்போதும் தயாராக இருப்பவர்; அதேவேளை அவரிடம் மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களை 'மத நம்பிக்கைகளுடன் விவாதிக்க முடியாது' என்று சொல்லி, மெயில் ஃபில்டரில் போட்டுக் கடந்து செல்பவதும், வட்டத்தை விட்டு வெளியேற்றுவதுமே அவர் வழிமுறை. அவரைப் பற்றிய சங்கடமான கேள்விகளை எழுப்புவது நம் சூழலில் அவசியமான ஒன்று என்பதே என் கருத்து.
அதுசரி, அதே பதிலில் 'இரோம் ஷர்மிளாவுக்கு மணிப்பூர் இனக்குழு அரசியல் தெரியாது' என்று ஒரு தமிழரோ, மலையாளியோ சொல்வது, ஜெ. யிடம் சினிமாப்பாட்டுக்கு அருஞ்சொற்பொருள் தருவதற்கு ஒப்பான மொண்ணைத்தனம் என்று சொல்லியிருந்தேன். அதற்கு உங்களிடம் மறுப்பில்லை. என் கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் மகிழ்ச்சி!
/// ஜெயமோகன் சொல்முகம் பதிவைப் படிச்சிருக்கலாம், படிக்காம போயிருக்கலாம், ///
நீங்க வேணா, அவர் இரண்டு பதிவுகளுக்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து, கூடவே வட்ட உறுப்பினர் ஒருவரே எழுதிய சொல்முகம் பதிவு விடுபட்டு விட்டதைச் சுட்டிக்காட்டி, அதையும் படித்து, முடிந்தால் லிங்க் கொடுத்து வாசகர்களிடம் அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளுங்களேன்! (நிஜமா செஞ்சுடாதீங்க... ஆம்னிபஸ் தளத்தையே பிளாக் லிஸ்ட் பண்ணிடுவார்!)