நன்றி: ஃபேஸ்புக்கில் இதைப் பகிர்ந்த நண்பருக்கு...
அமெரிக்காவில் ஜூலை 2009’ல் சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் நடைபெற்ற Marriage - a melody எனும் செமினாரின் நிகழ்வுகள் மற்றும் அந்த செமினாரில் கலந்து கொண்டவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பினை சின்மயா மிஷன் இந்தப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த செமினாரில் கலந்து கொண்டவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இருந்தவர்கள் அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ள இருந்தவர்கள் என்று அறிகிறேன். இந்நேரம் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையை நிறைவு செய்த அந்தத் தம்பதியினர் மேரேஜ் எனும் மெலடியை ரசித்து ருசித்துப் பரவச நிலையை அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
சரி, புத்தகத்தை விட்டு கொஞ்சம் வெளியே உலாத்திவிட்டு வருவோம்.
அதே 2009’க்கு ஒரு வருடம் முன்னே 2008 ஆகஸ்டில் நான் எழுதிய பதிவு இது. வரலாறில் இடம்பிடிக்கத்தக்க வகையில் இதுவே நான் இணையத்தில் எழுதிய முதல் பதிவு:
நாம் விரும்பும் மாற்றம்....
கதை ஒன்று உண்டு. ஒரு கிறிஸ்துவ பெண் ஒரு வேற்று மதம் சார்ந்த ஒருவனை காதலித்தாள். வீட்டில் அவள் அப்பா வழக்கமான அப்பாவாய் இதனை எதிர்த்தார். காரணமாக அவர் சொன்னது, “வேற்று மதத்தவனை என் மருமகனாய் என்னால் ஏற்க இயலாது, நீ அவனை மதம் மாறச்சொல் நான் சம்மதிக்கிறேன்” என்றார். இவள் இதனை காதலனிடம் சொல்ல, அவன் காதலின் மிகுதியில் மதம் மாற சம்மதித்தான். இவளுடன் அவன் தேவாலயம் செல்லத் தொடங்கினான்.
சில நாட்கள் சென்ற பின் அப்பெண் அழுது கொண்டே அப்பாவிடம் வந்தாள்."என்னம்மா, என்ன ஆச்சு?","அப்பா, அவர் வந்து.......""என்னம்மா ஆச்சு, மதம் மாற மாட்டேன்னு இப்போ சொல்றனா...?""இல்லப்பா....வந்து....""என்ன சொல்லு, உன்ன மதம் மாற சொல்றனா?"இல்லப்பா, வந்து......""என்னன்னு சொல்லி தொலையேன்.....""அவர் பாதிரியாரா போயிட்டருப்பா...."
பொதுவாக நாம் மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர் பார்க்கிறோம். ஆனால் அந்த மாற்றத்திற்கும் ஒரு வரையறை வைக்கிறோம். நீ இந்த அளவுக்கு மாறினா போதும், அதுக்கு மேலே மாறாதே என்று....
இதை நம் விஷயத்தில் compare செய்ய வேண்டுமென்றால் நம் matrimonial வெப்சைட்-கள் பக்கம் சென்று பார்த்தால் தெரியும். "I expect a girl with a blend of modern & our traditional values" என்று எல்லாம் இருக்கும். எது எந்த விகிதத்தில் வேண்டும் என்பது அவனவனுக்கே வெளிச்சம்..
சரி புத்தகத்திற்குப் போவோம்.
புத்தகத்தில் வெகு ஸ்ட்ராங்காகச் சொல்லப்படும் விஷயம், “Make it Happen".
There are some people who ' make things happen', others 'talk of things that have happened', and yet others just wonder, 'what happened'.
You must belong to the first category - என்பதே ஸ்வாமிஜி சொல்வது.
"Knowing is not doing, doing is doing", என்கிறார் ஸ்வாமி சின்மயானந்தா. அதையே தேஜோமயானந்தாவும் குறிப்பிடுகிறார். ஏட்டுச் சுரைக்காயை கறி சமைக்கும் பக்குவம் பழகச் சொல்கிறார். எல்லாம் தெரிந்துதான் இங்கே உலாத்துகிறீர்கள். அந்த ‘தெரிந்ததை’ வாழ்க்கைக்குக் கொண்டு வரக் காட்டும் தயக்கத்தைக் கைவிட்டாலே பாதி ப்ரச்னை தீர்ந்துவிடுமாம்.
அடுத்தது.... லவ் & அட்டாச்மெண்ட்...
காதலிப்பவர்கள் சிலர் மிகத் தாமதமாகவே கல்யாணம் வேறு காதல் வேறு என்று அறிகிறார்கள். ஒரு அனுபவம் சுகமாக இருக்கிறது என்பதால் அது ஆசை காட்டும் இன்னொரு அனுபவமும் சுகமாக இருக்க வேண்டியதில்லை....இப்படித் தன் பதிவொன்றில் குறிப்பிடுகிறார் என்.ஆர்.அனுமந்தன்.
இதையே,"Love and Attachment" எனும் தலைப்பில் குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேஜோமயானந்தா. When you love someone, you want to make the other person happy. You serve selflessly and tirelessly and take joy in loving and giving. In attachment you want to make yourself happy. Love gets polluted by demands and expectations, possessiveness, jealousy and insecurity.
புத்தகத்தில் விஷயம் எதுவும் புதிதாய் இல்லை. நமக்குத் தெரியாத ஒன்றினையும் ஸ்வாமிஜி நமக்குப் புகட்ட முயல்வதில்லை. நாம் சிலப்பல போர்வைகளைப் போட்டு மறைத்து வைத்திருக்கும் நமக்கே தெரிந்த விஷயங்களை ‘ஜஸ்ட்’ ஒரு சின்ன ஊசி வைத்துக் குத்துகிறார்.
இந்த லவ் & அட்டாச்மெண்ட் எனும் டாபிக்கே என்னைப் பொருத்தமட்டில் மிகப்பெரிய ஊசி. கல்யாணமான புதிதில் எல்லாருமே, எல்லாமுமே அப்படித்தான் இருக்கிறார்கள், இருக்கிறது. ஐ டூ ஐ டூ என்ற நிலை யூ டூ யூ டூ எனும்போதுதான் கசப்பின் சுவை தட்டத் தொடங்குகிறது.
ஆனால் பாருங்கள் இந்தப் புத்தகத்தின் சாரம் அனுபவஸ்தர்களுக்கே நன்கு விளங்கக் கூடியது. எங்கள் வேலை சார்ந்த உலகில் ஒரு ப்ராஜக்ட் ஓடத் துவங்கிய ஆறுமாதத்திற்குப் பிறகே என்னத்தைச் செய்கிறோம், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற புரிதல் எங்களுக்குக் கிடைக்கிறது. ப்ராஸஸுக்குள் நுழையுமுன் தரப்படும் கைடுலைன், ப்ரீப்ராஸஸ் ட்ரெயினிங் எல்லாம் ஏதோ மயக்க நிலையில் இருந்தபோது நடந்ததாகவே தோன்றும். அப்படித்தான் அந்த செமினார் இருந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். அதனால்தான்.... //ரசித்து ருசித்துப் பரவச நிலையை // என்ற வேடிக்கை வார்த்தைகளையெல்லாம் முதலில் சேர்த்தேன்.
ஒருவரை ’அவராக... அப்படியே...’ (as it is.... as he/she is) ஏற்கும் பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. “இவன் ஏன் இப்படிப் பேசறான். இவன் ஏன் இப்படி இருக்கான்”, என்ற கேள்வியும் குழப்பமுமே, கல்யாண வாழ்க்கை என்றில்லாமல், எல்லா இடங்களிலுமே ப்ரச்னை ஆகிறது. அந்த அவளை / அவனை / அவரை நாம் மாற்றியே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்குகையில்தான் எல்லா ப்ரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுகிறது.
புத்தகத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து ஒரு பத்து பக்கங்கள் உண்டு. கேள்வி பதில் பகுதிக்கென்று ஒரு ஐந்து பக்கங்கள் உண்டு.
Q: What is the reason for divorce?
A: Marriage
என்பதான லாலுயாதவ்’தனமான (அது நிஜந்தான் எனினும்) ஸ்டுபிட் கேள்வி பதில்களாய் இல்லாமல் நல்ல ஆன்மீக கேள்வி-பதில்கள் நிறைந்த பகுதி.
ஐம்பத்தி நான்கே பக்கமுள்ள புத்தகம். கல்யாணம் ஆகி சிலப்பல வருடங்கள் நிறைவு செய்தவர்கள் வாங்கி வாசிக்கலாம் என்று ரெகமெண்ட் செய்கிறேன். ஒரு 55/- ரூபாய் செலவு செய்து வாங்கிப் படித்தீர்களேயானால் அடுத்த ஒருவாரத்தை ஒரு யோக நிலையில் உங்கள் மணாளன் / மணவாட்டியுடன் தள்ளுவதற்கு உதவிகரமாயிருக்கும். அதன்பிறகு இருக்கவேயிருக்கிறது வழக்கமான குடுமிப்பிடி.
பை தி வே, இந்தப் புத்தகத்தை இன்று கையில் எடுத்து உங்களுக்கு நான் பாடம் புகட்டிக் கொண்டிருக்கும் காரணம், இன்று (23/04) எங்கள் மணநாள் என்பதுவும் :)
Marriage - a melody: Swami Tejomayananda
Central Chinmaya Mission Trust, 54 pages, Price: INR 55.
No comments:
Post a Comment