A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

10 Feb 2013

Non-stop India – Mark Tully



’நான் இரண்டு நாகரிகங்களின் குடிமகன்’ என்று சொல்லும் மார்க் டுல்லி, கொல்கத்தாவில் 1935ல் பிறந்த பிரித்தானியர். படிப்பு முடித்த பின் பிபிசியின் இந்தியச் செய்தியாளராய் பணியாற்றியிருக்கிறார். 2002ல் சர் பட்டமும் 2005ல் பத்ம பூஷன் பட்டமும் வாங்கியிருக்கிறார். இளம் பருவத்தை இங்கிலாந்தில் கழித்ததாலும், அங்கேயே படித்ததாலும் தன்னிடம் இருக்கும் பிரிட்டிஷ்நெஸ் ஒரு போதும் மறையாது என்கிறார் டுல்லி. இருந்தபோதும் ’இந்தியாவும் இங்கிலாந்தும் விளையாடினால் நான் இந்தியா பக்கம்’ என்கிறார். இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் ஊன்றியிருக்க விரும்புபவர் கொஞ்சம் குழப்பத்தோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், டுல்லியின் நேர்காணலைப் படிக்கும் போது அவர் ரொம்பத் தெளிவாக இருக்கிறார் என்பது புரியும். (மார்க் டுல்லி - பரத்வாஜ் ரங்கன் நேர்காணல்)

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கொஞ்சம் மலைப்பைத் தரலாம். இது போக ஆராய்ச்சிக் கட்டுரைகள், அடித்துவிடப்பட்ட கட்டுரைகள் நிறைய.  நான் பார்த்தவரை 2000த்தின் தொடக்கத்தில் இந்தியாவைப் பற்றி மிகுந்த optimism உடன் எழுதப்பட்ட கட்டுரைகள், இப்போது குறைவான optimismத்துடன் வருகின்றன. இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு எண்ணற்ற கட்டுரைகள். இவையும் கூட ஆரம்பத்தில் சீனாவுக்கு இந்தியா போட்டி என்ற ரீதியிலேயே எழுதப்பட்டு வந்து, இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான வித்தியாசத்தை கருத்தில் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்து பேசப்பட்டவை Ignigted Minds, Imagining India, A Better India A Better World, டிவி 18 ஓனரின் Superpower?, சீனாவைப் பற்றிப் பேசினாலும் இந்தியாவை ஒப்பிட்டுப் பேசும் இடங்களுக்காக பல்லவி ஐயரின் சீனா விலகும் திரை, குர்சரண் தாஸின் India Unboud, The Elephant Paradigm இன்னும் பல. மார்க் டுல்லியும் தன் பங்குக்கு No Full Stops in India, India in Slow Motion, The Heart of India (புனைவு), Amristar: Mrs Gandhi’s Last Battle, From Raj to Rajiv, India’s Unending Journey என்று எழுதித் தள்ளியிருக்கிறார். சென்ற மாத ஆழம் இதழில் வண்ணநிலவன் No Full Stops in India புத்தகத்தை பரிந்துரைத்திருக்கிறார்.

“ஒளிரும் இந்தியா” கோஷமும் ‘வல்லரசாக இந்தியா’ எனும் கனவும் இன்றைக்கு பின்னே தள்ளப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் இந்தியா தேங்கிவிட்டது என்று அர்த்தமில்லை, இந்தியாவின் உண்மையான பிரச்சனைகள் இப்போது நன்கு உணரப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஊழல்கள், 2000த்தின் தொடக்கத்தில் இருந்த optimismத்தை இன்றைக்கு மட்டுப்படுத்தியிருக்கிறது.

இந்த புத்தகத்தில் பத்து கட்டுரைகள்; பத்து பிரச்சனைகள். பெரும்பாலானவை இந்தியச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள். சாதி ஏற்றத்தாழ்வுகள், ஏழைமை, வாங்கு வங்கி அரசியல், மதவாதம் போன்றவற்றைப் பேசும் நான்கு கட்டுரைகள். மாவோயிஸம், விவசாயம், தொழில்த்துறை, அரசு நிர்வாகம், இந்திய மொழிகளில் ஆங்கிலத்தின் தாக்கம், சுற்றுச்சூழல் – இவையெல்லாவற்றையும் பற்றி தலா ஒன்று. 

இதில் எந்த கட்டுரையை எடுத்துக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட மனிதர்களின் குரலை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் டுல்லி. இரண்டு பக்கங்கள் இருக்கும் விவகாரங்களில் இரண்டு பக்கத்தின் குரலையும் ஒலிக்கச் செய்யும் டுல்லி, தன்னுடைய குரலை இவர்களுடைய குரலிலிருந்து மிகுந்த கவனத்துடன் தனித்துக் காட்டியிருக்கிறார். பத்திரிக்கைச் செய்திகளையும் பெரும்பான்மையின் கருத்தையும் அப்படியே பிரதிபலிக்காமல் ஒரு பத்திரிக்கையாளராக இந்த புத்தகத்தில் வரும் ஒவ்வொரு மனிதரையும் அவர்களுடைய இடத்திலேயே நேரடியாக சந்தித்திருக்கிறார். 

இந்த புத்தகம் அயல் நாட்டு வாசகர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் இங்கே பேசப்படும் பிரச்சனைகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்துகொள்ள வேண்டியவை. பன்னா புலிகள் சரணாலயம் பற்றிய கட்டுரையில், புலிகளின் எண்ணிக்கை கடகடவெனக் குறைந்து ஒன்றுகூட இல்லையென்று தெரிந்த பிறகும் கூட அரசாங்க நிர்வாகம் ஒன்றும் செய்ய முற்படவில்லை. மேலும், இதைச் சுட்டிக் காட்டிய ஆராய்ச்சியாளரை தங்களுக்கு எதிரானவராக அரசு நிர்வாகம் கருதியது எல்லாம், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாததையே காட்டுகிறது. புலிகளை வேட்டையாடும் கும்பல் எப்படி தன் காரியத்தை செய்கிறது என்று ஒரு பத்திரிக்கையாளரால் அறிந்து கொள்ள முடிகிறது ஆனால் சகல அதிகாரமும் பெற்ற அரசாங்கத்தால் அது முடியவில்லை. இது அஜாக்கிரதையா அல்லது சோம்பேறித்தனமா?

தி இங்கிலீஷ் ராஜ் என்ற கட்டுரையில், ஆங்கிலம் எப்படி கொலைகார மொழியாக இருக்கிறது என்று பேசுகிறார். கொலைகார மொழி என்றால் மற்ற மொழிகளைக் கொல்லும் மொழி. இதையொட்டி க்ரியா ராமகிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார் டுல்லி. இன்றைக்கு பல கல்வியாளர்கள் பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் சிந்தித்து, ஆங்கில வாக்கிய அமைப்பு கொண்டு தமிழை எழுதிவிடுகிறார்கள் என்கிறார் ராமகிருஷ்ணன். Mislexic எழுதிய இந்தப் பதிவுன் கடைசி பின்னூட்டத்தில் அவர், தமிழ் என்பது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மொழி அல்ல என்கிறார். இதைப் போல ஜுனூன்  தமிழ் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் எழுதுவதே எனக்குச் சரியா தவறா என்று தெரியாது. எல்லாம் ஒரு குத்துமதிப்புதான். இதையெல்லாம் படித்த பிறகு தான் திருத்திக் கொள்ள வேண்டும் என்று உறைக்கிறது. 

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பற்றிய கட்டுரையில், இந்தத் திட்டம் வீண் என்று அவர் சொல்லவில்லை. ஊழல் இருக்கிறது ஆனாலும் பணம் மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்கிறார். ஆனால், இங்கே அவருடைய கருத்தில் ஒரு NGO-வினுடைய தாக்கம் அதிகமிருப்பதாகத் தெரிகிறது. 

Entrepreneurship Unleashed என்ற கட்டுரையில், டாடா குழுமத்தின் வரலாற்றை மிகச் சுருக்கமாக ஆனால் கச்சிதமாகத் தருகிறார். இந்தக் கட்டுரையில் டாடா குழுமத்தின் கோபாலகிருஷ்ணன், “ஒரு தெளிவான கொள்கை இல்லையென்றால், குறைந்த ஆதாரங்களான நிலம், தண்ணீர் மற்றும் ஸ்பெக்ட்ரம் போன்றவை வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு போய்விடும்” என்று எச்சரிக்கிறார். சில ஊர்களில், மக்களுக்கு பணம் கொடுத்து “எங்கள் ஊரில் மணல் அள்ளிக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”  என்று கையெழுத்து வாங்கிக் கொள்வதாகக் கூடக் கேள்விப்படுகிறோம் (இது ட்விட்டரில் படித்தது). 

நக்ஸல்கள் பற்றிய கட்டுரையும் முக்கியமானது தான். இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு நக்ஸல்கள் மீதிருக்கும் ஸாஃப்ட் கார்னர் மறையக்கூடும். 

முன்னுரையில் டுல்லி சொல்வதுபோல், ஜிடிபி-யைக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை எடைபோட முடியாது. ஏனென்றால் இன்னமும் அடிப்படை வசதிகளையோ குறைந்தபட்ச ஊதியத்தையோ அடைய முடியாமல் துன்புறும் ஏராளமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். வளர்ச்சி என்பது இவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வளர்ச்சி சமமாக இல்லாத போது அது பல விதமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இன்னொரு விஷயம், அரசாங்கம் ஏழைமையில் இருப்பவர்களுக்கு தாங்கள் உதவி செய்து, அதாவது இலவசமாக பொருட்கள் கொடுப்பது, உணவு கொடுப்பது, என்று அவர்களை எப்போதும் அரசாங்கத்தையோ பணம் கொண்டவர்களையோ அண்டியிருக்கும் படிச் செய்கிறது. அதே நேரத்தில் பயிற்சி பெற்ற வேலையாட்கள் (Skilled Labours) குறைந்து வருவதையும் நாம் யோசிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் ஒரு இலக்கை தங்களால் அடைய முடியுமா முடியாதா என்றெல்லாம் யோசிக்காமல் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்கள். இங்கே ஒரு குயவனின் மனைவி, அரசாங்கம் தங்களுக்கென்று விற்பனைக் கூடங்களை அமைத்துக் கொடுக்கவில்லை என்று புகார் செய்கிறார். அந்த இடத்தில் டுல்லி எழுதுகிறார், “They seem members of parliament and State Assemblies as facilitators not legislators..”

இந்த புத்தகத்தின் சாரம் அவர் பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த நேர்காணலில் சொல்வது தான் “People are blindly assuming that India will charge ahead, ignoring the many problems that India has to overcome.”

தற்கால இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல். 256 பக்கங்கள், பொடிசான எழுத்துக்கள், கிட்டத்தட்ட ஒரு மாதமாக வாசித்தேன், ஆனாலும் அலுப்புத்தட்டவில்லை.

Non-Stop India | Mark Tully | Allen Lane Publications | 256 Pages | Rs. 499

1 comment:

  1. என்னவோ ஒரு மாதிரி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...