A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

19 Apr 2013

ஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்கள்



ஹோமியோபதி மருத்துவத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஈ. பி. நாஷ் வியாசர் மாதிரி என்று சொல்லலாம். அவரது Leaders in Homeopathic Therapeutics பாரதம் மாதிரி ( கென்ட்டின் லெக்சர்ஸ் சற்றே விரிவான பிரம்மசூத்ர பாஷ்யம் என்று சொல்வது உள்நகை). எளிய இந்துக்களின் சமயம் ராமாயணம், மகாபாரதம் என்று துவங்குவதுபோல் சாமானியர்களின்  ஹோமியோபதி அறிவு  ஆலன்ஸ் கீநோட்ஸ் மற்றும் நாஷ் லீடர்ஸ் என்ற இந்த இரு நூல்களில் துவங்குகிறது, பலருக்கு இதிலேயே எல்லாம் முடிந்தும் விடுகிறது. பாட்டிகள் கைவைத்தியத்திலும் பேரன்கள் பாட்டிகளிலும் நம்பிக்கை இழந்துவிட்ட இந்நாட்களில் மக்கள் மருத்துவத்துக்கு இவ்விரண்டு புத்தகங்களே போதும், தவறில்லை. என்றாலும் என் அனுபவத்தில்  நாஷின் ரீஜனல் லீடர்ஸையும் ஒரு அவசிய நூலாகப் பரிந்துரைப்பேன்.




மக்கள் மருத்துவமாக ஹோமியோபதியை நான் அறியவர ஒரு பதட்டமான அனுபவம் காரணமாக இருந்தது. ஒரு வயதுகூட ஆகியிருக்காத என் மகனுக்கு வயிற்றுப் போக்கு கண்டது. அருகிலிருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ட்ரிப்ஸ் கொடுத்தார்கள். இரவு குழந்தை பசியால் அழ ஆரம்பித்தான். ட்யூட்டி டாக்டராக இருந்தவர் அப்போதுதான் படித்து முடித்துவிட்டு வந்திருக்க வேண்டும், வெகு கறாராக தாய்ப்பால்கூடக் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். இரவெல்லாம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அந்த வேதனையாலும் தாய்ப்பால் கட்டிக்கொண்ட வலியின் வேதனையாலும் என் மனைவியும் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தாள். அடுத்த நாள் காலையில் டாக்டர் வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டோம். வயிற்றுப் போக்கு நிற்கவில்லை. தொடர்ந்து போராடியபின் வெளியே அழைத்துச் செல்ல மாலை ஏழு மணி அளவில் அனுமதி கிடைத்தது.

அந்தப் பகுதியில் ரகு என்ற குழந்தை மருத்துவர் மிகப் பிரபலம். நேராக அவரிடம் அழைத்துச் சென்றோம். குழந்தையைப் பார்த்துவிட்டு, அப்போதே ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தை அங்கே காட்டியதும் எங்களுக்கு ராஜ மரியாதை. அவர் துறை தலைவராக இருந்தார் என்று நினைக்கிறேன். ஒரு நாலு நாள் ட்ரிப்ஸில் இருந்தபின் தாயும் சேயும் நலமாக வெளியே வந்தார்கள். டாக்டர் ரகு, தாய்ப்பாலில் இல்லாதது இல்லை, தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று எந்த மடையன் சொன்னது என்று சத்தம் போட்டதுதான் இந்த அனுபவத்தின் ஹைலைட்.

இந்த அனுபவத்தைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் ஹோமியோபதி ஒரு நல்ல கைமருத்துவமாக இருக்க முடியும் என்று அறிய வந்தேன்.  ஃபேஸ்புக்கில் Ravi's Anamnesis என்ற பக்கத்தில் நிலைத்தகவல்கள் பதிக்கும் எங்கள் மதிப்புக்குரிய மருத்துவ நல்லாசான் திரு ரவிச்சந்திரன் ஆறுமுகம் அவர்களின் வழிகாட்டுதலில் ஏறத்தாழ பத்தாண்டுகள் ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. இந்த பத்தாண்டு அனுபவத்தில் மறக்க முடியாத கேஸ்கள் இரண்டு உண்டு.

நண்பர் திரு குமார் அவர்கள் உற்ற வழித்துணையாக இருந்து தொடர்ந்து பேசிப்பேசி என் ஹோமியோபதி நேசத்தை வெறியாக மாற்றியதில், ஒரு முறை இருமும்போது ரத்தமும் சளியுமாக வாந்தி எடுத்த என் மகனைப் பார்த்து பயந்து மருத்துவமனை ஒன்றில் சேர்க்கச் சென்றவன், அவனது நாக்கு எந்தப் படலமும் இல்லாமல் தூய்மையாக இருப்பதை அப்போதுதான் கவனித்து, அவசர அவசரமாக அம்மாவையும் பிள்ளையையும் அருகிலிருந்த என் தம்பி வீட்டில் விட்டுவிட்டு ஆட்டோ பிடித்து  பஹோலாவில் சினா 200  (Cina 200) வாங்கிக் கொடுத்து ஒரே டோஸில் அவன் சரியானது ஒரு மறக்க முடியாத சம்பவம். அவனது நாக்கில் எந்தப் படலமும் இல்லாததைப் பார்த்ததும் Vomiting with clean tongue, Cina, Ipec என்று நாஷ் கூறியிருப்பது நினைவுக்கு வந்ததும் சளியில் ரத்தம் இருக்கிறது என்ற பீதி காணாமல் போய் விட்டது. நாஷ் சொன்னால் சரியாக இருக்கும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை. இங்கு இபிகாக்கை விட்டுவிட்டு சினாவைத் தேர்ந்தடுக்க குழந்தை கையைவிட்டு இறங்க மறுத்தான் என்பது ஒரு காரணமாக இருக்கலாம், நினைவில்லை.


 


இன்னொரு சம்பவம். இது நண்பர் கே____ சம்பந்தப்பட்டது. அவரது தந்தைக்கு நீரிழிவு நோய் காரணமாக வாயின் அன்னத்தில் (மேற்பகுதியில்) ஒரு ஆழமான புண். ஏறத்தாழ தேங்காய் துருவியைக் கொண்டு சுரண்டியது போல் ஒரு பெரும் பள்ளம். ஓராண்டுக்கும் மேல் ஆறாத ரணம். திட உணவு எதுவும் சாப்பிட முடியாதவராக எதையும் கரைத்தே குடித்துக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு பியர் ஷ்மிட் வடிவமைத்த கேஸ் டேக்கிங்கில்  வலுவான நம்பிக்கை இருந்தது. அவர் சொன்னதுபோலவே துயரரை விசாரித்து வந்ததில் உறக்கத்தில் அவரது கடைவாயில் எச்சிலுடன் ரத்தம் ஒழுகும் என்று தெரிய வந்தது. Saliva bloody, runs out of mouth during sleep - Rhus Tox  என்று நாஷ் சொல்லியிருப்பது உடனே நினைவுக்கு வந்தது. ரெபர்ட்டரியில் அத்தனை நோய்குறிகளையும் அட்டவணை இட்டதில் (ஆம், இதிலும் நான் ஷ்மிட் வழிமுறையைத் தீவிரமாகப் பின்பற்றினேன்), வேறு மருந்துகள் வந்தாலும் நாஷ் சொன்னால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரஸ் டாக்ஸ், ஆர்னிகா இரண்டையும் ஒரு பாட்டில் தண்ணீரில் கலந்து இரண்டு மணி நேரத்துக்குக் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக அருந்தச் சொன்னேன் (வாட்டர் டோஸாம்!). அன்றைக்கே வலி குறைந்து, அவரது தந்தை திட உணவு சாப்பிட்டார் என்று சொன்னார் கே___. விரைவில் புண்ணும் ஆறிவிட்டது.

இந்தத் தகவலில் கிடைத்த சந்தோஷம் கலப்படமற்றதன்று - ரஸ் டாக்ஸோடு ஆர்னிகாவைக் கலந்து சாப்பிடச் சொன்னது தவறு  என்ற குற்ற உணர்ச்சியை என்னால் தப்ப முடியவில்லை. ஆம், அது நாஷ் மீதான என் அவநம்பிக்கையும் வெளிப்பட்ட கணமாகும். "Finally to express, after nearly forty years of conscientious experimentation, my firm and confirmed belief in the Simillimum, the single remedy and the minimum dose," என்று லீடர்ஸின் முன்னுரையில் நாஷ் எழுதியது சத்திய வாக்கல்லவா?

இன்று என் மகன் வளர்ந்து விட்டான். குழந்தைப் பருவத்தில் அவனை அச்சுறுத்திய பிரான்சிட்டிஸ் சம்பந்தப்பட்ட  வீஸிங் பிரச்சினை இப்போது இல்லை - ஆறாவதோ என்னவோ வந்தபோதே இனி அவனைக் குறித்து கவலையில்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஏறத்தாழ நூறு புத்தகங்களாவது ஹோமியோபதி குறித்து வாங்கி வைத்திருந்தேன், அத்தனையையும் இப்போது நண்பர்களுக்குத் தந்து விட்டேன். கோப்பிக்கர் சொன்னார் என்று நிறைய க்ராஸ் ரெஃபரன்ஸ்களைக் குறித்து வைத்திருந்த நாஷின் லீடர்ஸ் இப்போது என்னிடம் இல்லை, நாஷின் இரு புத்தகங்களிலும் உள்ள அத்தனையையும் சின்னச் சின்ன எழுத்துகளில் அப்டேட் செய்து வைத்திருந்த ஆலனின் கீநோட்ஸும் இல்லை - இரண்டும் என் இருவேறு நண்பர்களுக்குச் சென்று விட்டன.

சென்ற வாரம் என் மகன் கீழே விழுந்து முட்டியில் பலத்த வீக்கத்தோடும் வலியோடும் பள்ளி விட்டு வந்தான். அருகிலிருந்த சற்றே பிரசித்தமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்த ஆர்த்தோ எக்ஸ் ரே எடுத்துவிட்டு எலும்பு முறிவு இல்லை, லிகமெண்ட் கிழிந்திருக்கலாம் என்று சொல்லி சில மருந்துகளைத் தந்தார். மூன்று நாட்களில் வலி குறையாவிட்டால் பிளாஸ்டர் போட அழைத்து வரச் சொன்னார். அடுத்த நாள் காலை அவனது பீடியாட்ரிஷியனிடம் அழைத்துச் சென்றேன். அவர், லிகமெண்ட் கிழிந்திருந்தால் எம்ஆர்ஐ எடுத்துதான் கண்டுபிடிக்க முடியும், அதெல்லாம் ஒன்றும் இருக்காது என்று சொல்லி, இந்த மருந்துகள் பெரியவர்களுக்கானவை, குழந்தைகளுக்கு நல்லதல்ல, வேறு சில எழுதித் தருகிறேன் என்றார். ஒரு பிரச்சினையும் இல்லாமல் சில நாட்களில் சரியாகி விட்டான்.

கடந்த காலத்து ஹோமியோபதி மருத்துவ சாகசங்கள் குறித்த பெருமைகளும் இல்லை, இன்று ஆங்கில மருத்துவரிடம் பார்த்துக் கொள்வதில் வருத்தமும் இல்லை. குழந்தைக்கான கை மருத்துவமாக ஹோமியோபதியின் தேவை என்னளவில் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்.



நண்பர் சுநீல் கிருஷ்ணன் நேற்று மருத்துவப் புத்தகம் ஒன்றைப் பற்றி மிக அருமையான கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆயுர்வேத மருத்துவம் சம்பந்தமாக அவர் எழுதியிருந்ததன் தொடர்ச்சியாக இந்தப் பதிவை வாசிக்கலாம்.

இந்த இரண்டு பதிவுகளுக்குமிடையே இரு முக்கியமான வேறுபாடுகள். அது ஆயுர்வேதம், இது ஹோமியோபதி. சுநீல் கிருஷ்ணன் முறையான பயிற்சி பெற்ற மருத்துவர். நான் மருத்துவனில்லை. ஆனால் ஒரு ஒற்றுமை - ஆயுர்வேதம், ஹோமியோபதி இவ்விரண்டும் அலோபதி என்று அழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறைக்கு மாற்று மருத்துவங்களாகக் கருதப்படுகின்றன. எனது பத்தாண்டு கால அவதானிப்பில், இவற்றை மாற்று மருத்துவம் என்பதைவிட துணை மருத்துவம் என்று சொல்வது சரியாக இருக்கும். மாற்று மருத்துவம் என்பது இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமில்லாத லட்சியமாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு மாற்று மருத்துவ முறைக்கான அவசியமே உண்டா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.

சுநீல் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவர் என்பதால் அவருக்கு ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைகள் தெரியாமலில்லை. ஆங்கில மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் போலவே இவர்களுக்கும், சித்தா மற்றும் ஹோமியோபதி மாணவர்களுக்கும், உடலமைப்பு, நோய்க்குறிகள் போன்ற மருத்துவக்கூறுகளின் அடிப்படை நூல்கள் பொதுவானவை. பண்டைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், இன்றைய ஆயுர்வேத மருத்துவர்கள் சர்ஜரி செய்ய முடியாது. பொதுவாகவே, மாற்று மருத்துவர் எவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதியில்லை ( 25.4.2013 அன்று திருத்தப்பட்டது. இது தவறான தகவல். "முக்கிய வழக்கொன்றில், சென்னை உயர் நீதி மன்றம், இத்தாழ்வு நிலையை மாற்றி,ஹோமியோபதி மருத்துவர்கள்,(BHMS, MD) அறுவை சிகிச்சை செய்ய சட்ட அனுமதி வழங்கியிருக்கிறது; இதற்கான கருத்துலக நியாயங்களையும் கூறியிருக்கிறது." என்ற தகவலை வழங்கிய திரு ரவிச்சந்திரன் ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறேன்). தங்கள் முறை சார்ந்த மருந்துகளைதான் பரிந்துரைக்க வேண்டும். ஏனைய மருத்துவ விஷயங்கள் பொதுவானவை.

இந்த மாற்று மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கல்வியின் தரம் குறித்து கேள்விகள் இருக்கலாம். எனக்கும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவம் பயின்றவர்களில் சிலருக்கேனும் புத்தகக் கல்வியும் அனுபவக் கல்வியும் உதவியாயில்லை என்று நினைக்கிறேன். குறைகள் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன, மருத்துவ முறைமைகளில் அல்ல. தொடர்ந்து தன் கல்வியைத் தொடரும் மருத்துவர் எந்த மருத்துவ முறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் சாதனைகள் படைப்பது உறுதி. ஆங்கில மருத்துவம் பயின்று ஹோமியோ மருத்துவர்களாகச் செயல்பட்டு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ராஜன் சங்கரன், ஏ யூ ராமகிருஷ்ணன் முதலானோர் இன்றும் நம்மோடுள்ளனர். ஆங்கில மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், ஹோமியோ மருத்துவர்கள் என்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எளியோருக்கும் நோயற்ற வாழ்க்கை தரமும் தக்க மருத்துவ உதவியும் கிடைக்கும்.

இன்று இது ஒரு கனவுதான். ஆனால், மருத்துவம் தெரியாத எனக்கே சில விஷயங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன. மாற்று மருத்துவர்களேனும் பரஸ்பரம் புரிந்துணர்வும் தகவல் பரிமாற்றமும் உள்ளவர்களாக இணைந்து செயல்பட்டால் மக்கள் நலத்திலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையிலும் உலகுக்கே முன்னோடியான ஒரு முன்னணி தேசமாக இந்தியா இருக்கும்.
  • Keynotes And Characteristics With Comparisons of some of the Leading Remedies of the Materia Medica, by Henry Clay Allen, M. D.
  • Leaders In Homoeopathic Therapeutics, by E. B. NASH
  • Regional Leaders, by E. B. Nash, M. D.
  • The Art of Case Taking, by Pierre Schmidt

Image credit : Narayana Publishers

8 comments:

  1. நன்றி திரு தனபாலன்.

    தங்கள் தொடர்ந்த ஆதரவு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete
  2. ஹோமியோபதி குறித்து மேலும் அறியத்தூண்டும் கட்டுரை....

    ReplyDelete
  3. நன்றி எழுத்தாளர் திரு ரகு.

    தங்கள் தளம் பிரமாதமாக இருக்கிறது. பதிவோடையை இணைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  4. எழுத்தாளர் அவர்களுக்கு

    இது ஏதோ என் சுய சரிதை மாதிரி இருக்கிறது. நீங்கள் கூறிய அனைத்து புத்தகங்களும் நான் அகமகிழ்ந்து படித்தவை மற்றும் ஆமோதித்தவை. நினைவுகளைத் தூண்டியமைக்கு நன்றி. நாஷும், கெண்டும் இன்னும் புதியவர்களை வசீகரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது ராடார் எல்லாம் வந்து விட்டன. உள்ளேயே நாம் அன்று அச்சில் படித்தவை எல்லாம் வந்தி விட்டன. புத்தகங்களை பூச்சி பிடிக்காமல் பாதுகாத்து வருகிறேன்.

    என் மகன்களுக்கு இப்போது பெல்லடோனா வும், பல்சாடில்லாவும் மறந்து விட்டன. காரணம் இப்போது அவர்களை இன்னொரு மருத்துவரிடம் விட்டு விட்டேன். எனக்கிருந்த இரண்டே இரண்டு 'கேஸ்' களும் இப்போது இல்லை.


    ஹோமியோபதி என்றும் முதன்மை மருத்துவமாக ஆகாது, ஆகவும் முடியாது. அதை அப்படி ஆக விடாமல் செய்ய பெரும் கும்பல்கள் உலகெங்கும் இயங்குகின்றன. (கலி காலம்னா , தர்மம் ஜெயிக்கப்படாது கேட்டேளா ?)

    ReplyDelete
    Replies
    1. :)

      சரியாகச் சொன்னீர்கள். ஆனால், முதன்மை மருத்துவமாக இருப்பதைவிட மக்கள் மருத்துவமாக இருப்பதையே நான் விரும்புகிறேன் :)

      பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி திரு வேங்கடசுப்ரமணியன்.

      Delete
  5. ஆமோதிக்கிறேன். ஆனால் அதிலும் பல நடைமுறை சிக்கலகள். அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் ஹோமியோபதி மக்கள் மருத்துவமாக மாற யத்தனித்தது. அப்போது தான் அதன் வீழ்ச்சியே ஆரம்பித்தது எனலாம்.

    வெகுசனங்களுக்கு எப்படியோ ஹோமியோபதி சற்று அறிமுகம் ஆனாலும் அவர்களால் அதன் நுட்பமான தனிப்படுத்தும் பயிற்சியை பெற்றிருக்க இயலவில்லை. காரணம், நோய்க்குறியியல் (pathology ) அறிவு இல்லாதது.மேலும் நம்முடைய மருத்துவ குண சிந்தாமணிகளை (materia medica ) படிக்கும் என் போன்ற பாமரர்கள் நோயாளர் வெளிப்படுத்தும் குறிகளையே (symptomatology ) நம்பி களத்தில் இறங்குகின்றோம். புத்தகத்தில் உள்ள டைபாய்ட் சுரமும் , என் நண்பருக்கு வந்த சுரமும் எப்படி வேறுபடுகின்றன என்பதை அறிய தேவையான் அறிவு இல்லாமல் போவதே நாம் தோற்கக் காரணம்.

    மக்கள் மட்டத்துக்கு சென்றதும் ஒரு பெரிய எளிமைப் படுத்தல் வேறு தோன்றியது. இதற்கு இது, அதற்கு அது என்று. வயித்துப், போக்குக்கு ஆர்சநிக்கம், காய்ச்சலுக்கு அக்கோனைட் , தலை வலிக்கு பெல்லடோனா , மலக் கட்டுக்கு நக்ஸ் வாமிகா என்ற அளவில் அமெரிக்காவில் போனதே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என காலம் சென்ற என் இணைய நண்பரும் ஹோமியோபதி வரலாற்று ஆய்வாளருமான ஜூலியன் வின்ஸ்டன் கூறி வந்தார்.இந்தக் காரணங்களாலேயே ஹோமியோபதி மக்கள் மருத்துவமாக மாற முடியவில்லை.

    இன்றைய இணைய அறிவு சற்று இதற்கு உதவலாம். இன்னொரு வேதனை , ஐந்தாண்டு இளநிலைக் கல்வி ஹோமியோபதி படித்த மருத்துவர்களில் எண்பது சதவிகிதம் தடம் மாறுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல். பலர் அலோபதி மருத்துவமனைகளில் உதவி மருத்துவராகப் பணி புரிய செல்கின்றனர். பலர் தொழிலை மாற்றுகின்றனர். பல பெண்களுக்கு இது ஒரு அடைமொழி.மிஞ்சியவர்கள் சிறிது வைத்தியம் பார்க்கிறார்கள். அதிலும் கலவை மருத்துவம். மிஞ்சியுள்ள சிலரே நம் செல்வங்கள்.
    தங்களைப் பற்றி அறிய ஆவல். என்னுடைய மின்னஞ்சல் < apexpreci@eth.net>

    ReplyDelete
    Replies
    1. ஹோமியோபதியை மக்கள் மருத்துவம் என்று சொல்லும்போது இரு தன்னார்வ அமைப்புகள் நினைவுக்கு வருகின்றன.

      அம்பத்தூரில் தொழிற்சங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் வார இறுதியில் ஞாயிறு காலை அங்குள்ள மக்களுக்கு ஹோமியோ மருத்துவம் செய்கிறார்கள். குறைந்தது நூறு பேராவது வருவார்கள். விபரமான கேஸ் டேக்கிங், ஒரு மருந்து ஒரு டோஸ். நான் அந்த கேஸ் ஹிஸ்டரிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் அணுகலையும் நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன்.

      இன்னொன்று நெல்லூரைச் சேர்ந்த ஒரு ஆன்மிக அமைப்பு. இவர்களும் தூய ஹோமியோதான். நான் நெல்லூருக்கே சென்று பார்த்தேன். அங்குள்ள சாயிபாபா கோயிலில் மருத்துவ முகாம். நல்ல கூட்டம்.

      ஆளாளுக்கு மருந்து வாங்கிச் சாப்பிடுவது என்றல்ல, இது போன்ற அமைப்புகளால் அளிக்கப்படும் மருத்துவம் என்ற பொருளில் மக்கள் மருத்துவம் என்று சொல்கிறேன். Doctor patient என்ற உறவு இல்லாமல், அந்தந்த community சார்ந்த உறவாக இது இருக்கும்போது சுகாதாரமும் மக்கள் நலமும் மேம்படுகிறது.

      வாழும் வகை, மனப்பாங்கு போன்ற sustaining causes இவர்கள் சொல்லும்போது சுலபமாக மாறும். மேலும் நம் ஆரோக்கியம் நம் பொறுப்பு என்றாகும்.

      இன்று medicine has become institutionalised. அதன் மீதான எதிர்மறை விமரிசனங்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுதான் காரணம் என்று தோன்றுகிறது.

      தொடர்பு கொள்கிறேன். நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...