இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடையாளங்களையும் குணாதிசியங்களையும் படிக்கும் போது மெட்டலர்ஜி பாடம் தான் நினைவுக்கு வருகின்றது.அப்போது படிக்கும் போது எல்லாமே புரியும், ஆனால் ஒரு செமஸ்டர் முழுக்க உட்கார்ந்து படித்தாலும், கடைசியில் எதுவும் மனதில் நிற்காது. வெங்கலத்திலும் பித்தளையிலும் என்னென்ன தனிமங்கள் என்னென்ன அளவுகளில் இருக்கும் என்பது கூட மனதில் நிற்காது. அது மாதிரி தான் இதுவும். புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர். எம்.வி.ராஜேந்திரன். ஆங்கில மூலத்தில் பறவைகள் வரும் இடங்களாக, பம்பாய் போன்ற இடங்களைச் சுட்டியிருந்தால், இவர் இங்கே அதற்கு இணையான வேடந்தாங்கல், திருநெல்வேலி போன்ற இடங்களைச் சுட்டுகிறார். ஆழமான மொழிபெயர்ப்பு.
பறவைகளை இனங்கண்டுபிடிப்பது சாதாரண விஷயமேயில்லை. நீர்க்காக்காய் என்று அழைக்கப்படும் ஒரு பறவையைப் பலமுறை பார்த்திருந்த போதும், அது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், முக்குளிப்பான், கூழைக்கடா, நீர்க்காகம் என்பவற்றுள் எது என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றுடைய குணாதிசயங்களும் உருவமும் அதிக வித்தியாசமில்லாதவை. அனுபவம், பயிற்சி முக்கியமாக வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே ஒரு பறவையைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும்.
பறவைகளை இனங்கண்டுபிடிப்பது சாதாரண விஷயமேயில்லை. நீர்க்காக்காய் என்று அழைக்கப்படும் ஒரு பறவையைப் பலமுறை பார்த்திருந்த போதும், அது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், முக்குளிப்பான், கூழைக்கடா, நீர்க்காகம் என்பவற்றுள் எது என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றுடைய குணாதிசயங்களும் உருவமும் அதிக வித்தியாசமில்லாதவை. அனுபவம், பயிற்சி முக்கியமாக வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே ஒரு பறவையைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும்.
ஒரு பறவையை இனஞ் சுட்ட வேண்டுமானால் நாம் பார்த்த பறவையின் பருமன், நிறம் இவை மனதில் நிற்க வேண்டும். நாம் பார்த்தது வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சிறு பறவை என்று வைத்துக் கொள்வோம். எந்தப் பாகம் வெள்ளை – தலையா? இறக்கையா? வாயா அல்லது அடிப்பாகமா? அதன் அலகின் உருவம், நிறம் இவற்றை உடனே கூர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே அதன் காலின் நீளம், வாலின் அமைப்பு, தலையில் கொண்டை அல்லது எழும்பிய சிறகுகள் இவை எல்லாம் உடன் நோக்கிப் பதிய வைத்துக் கொள்வது அவசியம். ஒரு பறவை திடீரென இலைகளுக்குள் மறைந்து பறந்து விடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அப்பறவையின் தோற்றம் பற்றிய எல்லா விவரங்களையும் நாம் கவனித்திருக்க மாட்டோம். எனவே ஒன்றிரண்டு முக்கியமான பண்புகளை மட்டுமே மனதில் பதித்துக் கொள்ள முயற்சிப்பது எப்போதும் நல்லது. சுருங்கச் சொல்லின், ஒரு பறவை கறுப்பு சிவப்பு நிறமாயிருந்தது, சற்ற மர நிறமும் கலந்திருந்தது, என்று சொல்வதைவிட, அது மைனாவில் பருமன் இருந்தது. அதன் கால் சிவப்பாக இருந்தது, என்று ஞாபகப்படுத்திக் கொள்வது அதை இலகுவில் இனஞ்சுட்ட உதவியாக இருக்கும்.Bird Watching என்றால் என்ன என்பதை மேலே உள்ள பத்தி மிகத் துல்லியமாக விளக்கிவிடுகிறது. மேலும் இந்த மாதிரி ஆராய்ச்சிகளை எதற்காகச் செய்ய வேண்டும்? உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மற்ற உயிரினத்துடன் ஏதாவது ஒரு வகையிலாவது தொடர்பு இருக்கும். ஆனால் இன்றைக்கு உலகம் மனிதர்களுடைய கையில் இருக்கிறது. சூழலில் மனிதர்கள் ஏற்படுத்தும் மாறுதல்கள், பல உயிரினங்களை பாதிக்கின்றன. உதாரணத்திற்கு வீட்டில் சுற்றிச் சுற்றி வரும் சிட்டுக் குருவிகள், மாறிவரும் கட்டடங்களால் இருப்பிடமில்லாமல் குறைந்து வருகின்றன. இன்னொருபக்கம், மனிதர்கள் உண்டாக்கும் அதிக அளவிலான கழிவுப் பொருட்களால் அவற்றைச் சார்ந்து வாழும் காகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. காகங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவை உண்ணும் சிறு பறவைகளும் பூச்சிகளும் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.
இன்றுள்ள தேவை பொருட்காட்சி சாலைகளையும் ஆய்வு சாலைகளையும் விட்டு விட்டுப் பறவைகளை அவற்றின் இருப்பிடங்களிலேயே படிப்பது தான். அதாவது அவற்றின் பழக்க வழக்கங்கள், கூடு கட்டும் முறைகள், தூண்டுதல்களுக்கு ஏற்ப அவை தரும் மாறுதல்கள், இனப்பெருக்கம், இனக் கூட்ட எண்ணிக்கைகளின் திடீர் அதிகரிப்பு, இவை போன்ற சூழல் ஆராய்ச்சியே, பறவைகளின் உணவும், உணவுப் பழக்கங்களும் எவ்வாறு மனிதனுக்கு உதவியாக அல்லது இடைஞ்சலாக இருக்கின்றன என்று காட்டும். இவ்வித ஆராய்ச்சிகளே இன்றைய இந்தியாவுக்கு உண்மையான தேவைகள். காடு நிறைந்த, ஜனத்தொகை மிகுந்த விவசாய நாடான நமது இந்தியா, அடிக்கடி உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கிறது. அத்தனைய நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் முக்கியமும் தேவையும் ஆகும்.மனித இனம் மற்ற இனங்களின் மீது தங்களுடைய கனிவான கருணையைப் பொழிய வேண்டும் என்று சொல்லவில்லை - தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.
Common Birds | Salim Ali & Laeeq Futehally | 126 Pages | National Book Trust, India | Rs. 50
கீழே கிடந்து தூக்கணாங்குருவிக்கூடை எங்கப்பா எடுத்து வந்தார். தூக்கணாங்குருவி அந்தக்கூட்டைப் பின்னியிருக்கும் விதம் நம்மை வியப்பூட்டுகிறது. உள்ளே கொஞ்சம் களிமண் இருந்தது. அதில்தான் மின்மினிப்பூச்சிகளைப் பிடித்து விளக்காக இரவுக்கு வைத்துக்கொள்ளும் என எங்கோ கேட்டது ஞாபகம் வந்தது.
ReplyDeleteஇன்றைய சூழலில் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது. ஒரு ஆலமரத்தில் ஆயிரம் பறவைகள் அடைய முடியும். ஒரு நிழற்குடையில் எதுவும் தங்காது. சிந்திக்க வேண்டும்.
நல்ல புத்தகம் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.