Name : The Mist
Author : Stephen King
Publishers : Penguin Books/Signet Books
To Buy :Amazon
Photo Courtesy :Wikipedia
நாலு-அஞ்சு
வாரமா ரொம்ப சீரியஸான புத்தகங்களைப் பத்தியே எழுதிட்டோமோன்னு யோச்சிகிட்டே
இருந்தேன். இப்ப வரைக்கும் ஹாரர் நாவல் பத்தி ஆம்னிபஸ்ல யாரும் எழுதலை -
எல்லா வகை(Genre) நாவல்கள் பத்தியும் ஒரு சின்ன முன்னுரையாவது ஆம்னிபஸ்
இருக்கவேண்டும்.
அந்த
வகையில், இன்றைக்கு ஸ்டீபன் கிங் எழுதிய “தி மிஸ்ட்”(The Mist-
பனிமூட்டம்). ஸ்டீபன் கிங் பத்தி நான் தெரிஞ்சுகிட்டது சுஜாதாவின் “கணையாழி
கடைசி பக்கங்கள்” புத்தகத்தில்தான். அதில் கிங் எழுதிய ரெண்டு மூணு
நாவல்களை சுஜாதா பாராட்டி எழுதி இருந்தாரு. அதைத் தொடர்ந்து கிங்கின்
ரெண்டு நாவல்கள் ரெண்டு வருடங்கள் முன்னாடி படிச்சேன். ஆனா அது ஏனோ மனசில்
நிற்கவே இல்லை. அதில் ஒரு நாவலில் தனது கொடுமையான கணவனிடமிருந்து தப்பிச்
செல்லும் ஒரு பெண், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடித்து அடிமைப்படுத்த
வேண்டும் என்றும் அலையும் கணவன், இதில் அங்கங்கே கொஞ்சம்
சூப்பர்-நாச்சுரல் (Super-natural) மற்றும் ஹாரரை கலந்து தூவி இருப்பார்.
இன்னொரு நாவலில் ஒரு விபத்தில் பாராப்லஜிக்( Paraplegic) ஆன ஒருவர் திடீரென
ஓவியம் வரைகிறார். வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை பற்றியும்
கனவுகள் வருகிறது, அவை உண்மையாகவே நடக்கிறது.
ஹாரர்
நாவல்களில் பொதுவாக மனிதன் சிந்திக்க முடியாத, அவனால் கட்டுக்குள் கொண்டு
வரமுடியாத விலங்கோ, இல்லை நிகழ்ச்சியோ இருக்கும். அவை மனித சமூகத்தையோ
இல்லை குறிப்பிட்ட மனிதர்களையோ பாதிக்கும். முன்னர் குறிப்பிட்ட நாவலில்
ஒற்றை கொம்பு குதிரை ஒன்று ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும். இது போல
சொல்லிகிட்டே போகலாம்.
இந்த நாவலில்
கதையின் தலைப்பே, நாவலை கிட்டத்தட்ட விவரித்து விடுகிறது. இந்த நாவலை
படித்த விட்டு இணையத்தில் கொஞ்சம் நேரம் மேயும்போது, கிங் இந்த நாவல்
உருவாகுவதற்கான எண்ணம் பற்றி படிச்சேன்.
“ஒரு சமயம்
ஒரு மிக பெரிய சூறைக்காற்று, நான் குடியிருந்த வீட்டைத் தாக்கியது. அடுத்த
நாள் காலை, பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்கள் வாங்கி , பணம்
கொடுப்பதற்காக வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும்போது, இந்த நாவல்
எழுதுதற்கான எண்ணம் ஏற்பட்டது” – ஸ்டீபன் கிங்.
அமெரிக்காவின்
நியூ இங்கிலாந்த் பகுதியில் ஜூலையில் கடுமையான வெப்பக் காற்று. பின் வந்த
இரவில் கடுமையான மழையும் சூறாவளியும் தாக்குகின்றன. டேவிட்டின் வீடு மரம்
விழுந்ததால் பாதிக்கப்படுகிறது. அவரின் வீட்டின் பக்கத்தில் உள்ள ஏரியின்
மேல் சின்ன பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்த மாதிரி
நாவல்களில், அரசாங்கமும், அதன் திட்டங்களும், மக்களுக்கு எதிராக
காண்பிக்கபட்டு இருக்கும். இதில் ஆரோ ஹெட் (Arrow Head) என்னும் ரகசிய
திட்டம், இந்த ஏரியின் அருகில் நடக்கிறது. பத்து ஆண்டுகளாக நடக்கும் இந்த
திட்டம் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்]படுவதில்லை.
டேவிட்,
அவரது மகன்-பில்லி(Billy), மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்
நோர்டன்(Norton), ஆகியோர் ஊருக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு
செல்கின்றார். சிறிது நேரத்தில், இந்த பனிமூட்டம் இவர்களை தொடர்ந்து, இந்த
அங்காடியை சூழ்கிறது, வெளியே செல்லும் மக்கள் ,பனிமூட்டத்தில் காணமல்
போகின்றனர்., அவர்களது ஆடைகள் மட்டும் காற்றில் பறக்கிறது. இரத்தம் சொட்டு
சொட்டாக தரையில் விழுகிறது.
Pterosaur
போன்ற உயிர்கள், இரவில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மக்களைக் கொன்று
அவர்களது இரத்தத்தை உண்கின்றன. பனிமூட்டத்தில் இருந்து பெரிய சாட்டை,
வெளியே செல்லும் மக்களை இரண்டாக பிளக்கிறது.
ஆரோ ஹெட்
ப்ராஜெக்ட் பணியாற்றும் இரண்டு இராணுவ வீரர்கள், இந்த அங்காடியில்,
பனிமூட்டத்தின் போது மாட்டிக் கொள்கின்றனர். அவர்களும் மர்மமான முறையில்
தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை ஆரோ ஹெட் ப்ராஜெக்ட்டில் இருந்து
மர்மமான முறையில் வெளியேறிய அல்லது, அந்த ஆராய்ச்சி தவறான முறையில்
கையாளப்பட்டதால், இந்த பனிமூட்ட விலங்கு தோன்றி இருக்காலாம், என்று கருத்து
பரவல் ஆகிறது.
மக்களுக்கு
மிக அதிக துன்பம் வரும்போது மதவாதிகளும், அவர்கள் கையாட்களும் மக்களை
பொய்யாக காக்க வருவது உண்டு. இதிலும், கார்மொடி(Mrs.Carmody) என்னும் வயதான
பெண், கடையில் உள்ள மக்களை, பயமுறுத்தி தன் பக்கம் இழுக்கிறார். கடவுள்
பேரை சொல்லிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்.
கடைசியாக
டேவிட் மற்றும் சில நபர்கள், டேவிட் காரில் ஏறி தப்பிக்கின்றனர், முதலில்
டேவிட்டின் இல்லத்துக்கு செல்ல முடிவு செய்கின்றனர், ஆனால், போகும் வழி
முழுவதும் பனிமூட்டத்தில் இருந்த விலங்கு, இயற்கையையும், மக்களையும் கொன்று
குவித்திருப்பதைப் பார்த்துக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் காரில்
இருக்கும் ரேடியோவும் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், இது மிக பெரிய
பாதிப்பு என்பதை உணர்கின்றனர். அதே சமயம்,ஹர்ட்போர்ட் என்ற ஒரே ஒரு செய்தி
துணுக்கு மட்டும் ரேடியோவில் இறுதி வருவதுடன், நாவல் நிறைவுறுகிறது.
நான் சயின்ஸ்
படிச்சதாலோ என்னவோ, இல்லை இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்ற அறிவு
யோசிக்கறது, இந்த கதை படிக்கும்போது திக் திக் என்ற உணர்வு இல்லை. இந்த
கதையை “தி மிஸ்ட்” என்ற பெயரில் திரைப்படம் ஆகவும் வெளிவந்து இருக்கிறது.
காட்சிகள் வித்தியாசமா, கொஞ்சம் அதிர்ச்சியும் ,திகில் ஊட்டும் படியாக
இருந்தால் படம் இருந்தால், பிடிக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் நல்ல டைம்
பாஸ்.
சுவாரஸ்யமாக உள்ளது... நூல் அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteThanks Dhanapalan sir
ReplyDelete