A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

25 Nov 2012

What do you care what other people think? - Richard Feynman




ரிச்சர்ட் ஃபெயின்மன் பற்றி சேதுபதி அருணாசலம் எழுதிய இந்தக் கட்டுரையின் மூலம் தான் தெரியவந்தது. அவருடைய இரண்டு புத்தகங்களையும் படித்தபின், மிகத் தாமதமாக அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதற்கு நொந்து கொண்டேன். ஃபெயின்மனுடைய புத்தகங்களை சில வருடங்களுக்கு முன் படித்திருந்தேன் என்றால், என்னுடைய கல்வியை நான் அணுகிய முறை முழுதும் மாறுபட்டிருக்கக் கூடும். ஒரு அறிவியலாளரின் சரிதை எப்படியிருக்க வேண்டும்? அல்லது ஒரு பெரிய மனிதருடைய, சாதனையாளருடைய சரிதை எப்படியிருக்க வேண்டும்? அவர் இதைச் செய்தார், அதைச் செய்தார், அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார்; யாராலுமே செய்ய முடியாதசைச் செய்தார்; மற்றவர்களைவிட புத்திசாலித்தனமாக யோசித்தார்; இப்படித் தான் பல சரிதைகள் புகழ் பாமாலைகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. அக்கினிச் சிறகுகளை எடுத்துக் கொண்டால், அதைப் படிப்பவர்களுக்கு தானும் உழைத்து ஒரு விஞ்ஞானி ஆகி தேசத்திற்கும் சமூகத்திற்கும் உதவ வேண்டும் என்றொரு எண்ணம் வரச் செய்யும். அந்த புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஆனால், அந்தப் புத்தகம் ஒரு ஆசையை விதைக்கிறது, அதற்காக பெரிய உழைப்பை கோருகிறது. ஆனால் எப்படி உழைக்க வேண்டும்? அறிவியலாளனுடைய குணங்கள் என்ன? என்பதைப் பற்றி அக்கினிச் சிறகுகளில் தெரிந்து கொள்ள முடியாது. 
ரிச்சர்ட் ஃபெயின்மன் ஒரு அறிவியலாளர்; அமெரிக்காவுக்காக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்; நோபல் பரிசு வாங்கியவர். மேலே சொன்னவை அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை விளக்கிவிடக்கூடும். ஆனால், அவருடைய புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பதற்குக் காரணம், அவருடைய சாதனைகள் அல்ல. அறிவியலை எப்படி அணுகுவது என்பதை ஃபெயின்மன் இந்த புத்தகங்களில் சொல்லிக்கொடுப்பது போல் யாரும் சொல்லிக்கொடுத்ததில்லை.


இன்று நம்மிடையே நிறைய பொறியாளர்கள் இருக்கிறார்கள். ஒருவரிடம் போய், “Are you a science student?” என்று கேட்டுப்பாருங்களேன். அவர், “No. I am an Engineer/Engineering student” என்று தான் சொல்வார் (மூத்த பொறியாளர்கள் யாராவது நேர்முகத் தேர்வுகளில் இக்கேள்வியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்). அறிவியலும் பொறியியலும் வேறு வேறு என்று பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்; இன்றைக்கு சமூகத்தில் பொறியாளனுக்கு கிடைக்கும் மதிப்பினால் கூட அப்படி இருக்கலாம். பொறியியல் மாணவர்களுக்கு communication skills இல்லை என்று கவலைப்படுவதற்கு முன், அவர்களுக்கு அறிவியல் நோக்கு இல்லை என்று நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு அறிவியலாளனின் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

அறிவியலுக்கு அடிப்படை கேள்விகள். ஒரு விஷயம் முழுமையாகப் புரியும் வரை, கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவியலில் யூகங்களுக்கு இடமில்லை. யூகங்கள் எல்லாம் அறிவியல் ஆகாது. The Making of a Scientistல் தன்னுடைய தந்தை தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிக் கூறுகிறார். I learned very early the difference between knowing the name of something and knowing something (பக். 14). இங்கேயே, பொறமண்டையில் ஒரு அடி. 

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதி முழுக்க முழுக்க, நாசாவின் சாலஞ்சர் விண்கல விபத்தைப் பற்றியது. விபத்துக்கான காரணங்களை ஆராயும் குழுவில் ஃபெயின்மனும் ஆய்வாளராக இருந்தார். அந்த அனுபவங்கள் தான், Feynman Goes to Washington என்ற இரண்டாவது பகுதி. இந்த சாலஞ்சர் விண்கல விபத்து எங்களுக்கும் கல்லூரியில் பாடமாக இருந்தது. Professional Ethics and Human Values என்ற பாடத்தில் வரும். Challenger disaster is one of the well documented accident in the recent past என்று தொடங்கும். பேசாமல் Professional Ethics and Human Values பாடத்திற்கு பதிலாக இந்த புத்தகத்தை பாடத்திட்டமாக ஆக்கிவிடலாம். (சமீபத்திய பிரபஞ்சக்குடில் பதிவைப் படித்த பின் இதைச் செயல்படுத்த வேண்டுமா என்று எண்ணம்.)

Professional Ethics என்ற பாடம், தொழில்முறையில் இருப்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும், லஞ்சம் என்றால் என்ன, வேலையில் நீங்கள் ஒரு தவறு செய்தால் அதை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும், மற்றவர்கள் தவறு செய்யும் போதோ திருட்டுத்தனம் செய்யும் போதோ அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும், சமரசமில்லாமல் எப்படி நடந்து கொள்வது போன்றவை பாடங்களாக இருக்கும். இதைத்தான் ஃபெயின்மன் இந்த புத்தகத்தில் சொல்கிறார். 

சாலஞ்சர் விபத்துக்கான காரணம் ஒரு ஓ-ரிங் என்று அழைக்கப்படும் சீல். ரப்பரால் ஆன இந்த சீல் தான் பிரச்சனைக்குரிய விஷயம். இந்த ரப்பர் குளிரில் தன்னுடைய தேவையான தன்மையை இழந்துவிடும் என்பது அதைத் தயாரித்த நிறுவனத்திற்குத் தெரியும். அவர்கள், சுற்றுப்புற வெப்பம் குறைவாக இருந்தால் விண்கலத்தை செலுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியும் நாசா (நாசா என்றால் நாசாவில் ஒரு அதிகாரி) விண்கலத்தைச் செலுத்திவிட்டது. வெப்பம் குறைவாக இருந்ததால் ஓ-ரிங்கள் வேலை செய்யாமல் போக, என்னென்னமோ நடந்து விண்கலம் வெடித்துவிட்டது. உள்ளே இருந்தவர்கள் அத்தனை பேரும் இறந்துபோனார்கள். 

ஃபெயின்மன் அப்படி என்ன தான் சொல்கிறார்?

இன்றைக்கு பொறியியல் துறையில் மென்பொருள் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், அதிலிருக்கும் ஆபத்து பலருக்குத் தெரியவில்லை. 
“It was some kind of computer model with various assumptions that were not necessarily right. You know the danger of computers, it’s called GIGO: garbage in, garbage out!” (பக்.138)

ஒரு அறிவியலாளன் எப்படி யோசிப்பான் என்று தான் புத்தகம் தொடங்குகிறது,

I have a friend who’s an artist and has sometimes taken a view which I don’t agree with very well. He’ll hold up a flower and say “look how beautiful it is,” and I’ll agree. Then he says “I as an artist can see how beautiful this is but you as a scientist take this all apart and it becomes a dull thing,” and I think that he’s kind of nutty. First of all, the beauty that he sees is available to other people and to me too, I believe…

I can appreciate the beauty of a flower. At the same time, I see much more about the flower than he sees. I could imagine the cells in there, the complicated actions inside, which also have a beauty. I mean it’s not just beauty at this dimension, at one centimeter; there’s also beauty at smaller dimensions, the inner structure, also the processes. The fact that the colors in the flower evolved in order to attract insects to pollinate it is interesting; it means that insects can see the color. It adds a question: does this aesthetic sense also exist in the lower forms? Why is it aesthetic? All kinds of interesting questions which the science knowledge only adds to the excitement, the mystery and the awe of a flower. It only adds. I don’t understand how it subtracts. (பக். 11)

அறிவியலாளனின் பண்பு,
The only way to have real success in science, the field I’m familiar with, is to describe the evidence very carefully without regard to the way you feel it should be. If you have a theory, you must try to explain what’s good and what’s bad about it equally. In science, you learn a kind of standard integrity and honesty. (பக். 217)

அறிவியலாளனுக்கு தேவை நேர்மை. அவனுக்கு முன்முடிவுகளிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும். அவனுடைய நம்பிக்கைகள், அவனுடைய ஆய்வு முடிவுகளை தீர்மானிக்கக் கூடாது. 

நாசாவுக்கான ஆய்வரிக்கையை இப்படி முடிக்கிறார், 

For a successful technology, reality must take precedence over public relations, for nature cannot be fooled.


What do you care what other people think? - Richard Feynman, 255 pages, Rs.302, Flipkart.com

1 comment:

  1. இந்த புத்தக அறிமுகத்திலிருந்த தவறை ட்விட்டரில் கவிராஜன் சுட்டிக்காட்டியிருந்தார் (https://twitter.com/kavi_rt/status/272763871889068032). அதைச் சரி செய்துவிட்டோம். அவருக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...