I am Vidya
ஆசிரியர்: லிவிங் ஸ்மைல் வித்யா
பக்கங்கள்: 143
விலை: ரூ.100
Oxygen Books
***
ஆண்கள் ஆண்களாகவும், பெண்கள் பெண்களாகவும், நாய்கள் நாய்களாகவும் இருக்க முடிகிறபோது, நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? ஏன் நாங்களாகவே இருக்க முடியவில்லை? - புத்தகம் முழுக்க வித்யாவின் பல சுளீர் கேள்விகள். எதற்கும் நம்மிடம் பதில் இருக்குமா என்று தெரியவில்லை.

வித்யா. திருநங்கை. முன்பு சரவணன். சிறு வயது முதலே தான் ஆண் இல்லை, பெண் என்று தீர்மானித்து, பலரின் அறிவுரைக்குப் பிறகும் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை இந்தப் புத்தகத்தை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
பால் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. பின்னர் இவர் செய்து கொண்டது? அனுமதி பெறாத மருத்துவமனை போன்ற ஒரு இடத்தில். அந்த மருத்துவமனை, சிகிச்சை, சிகிச்சைக்குப் பிறகான இரண்டு மாத கால கட்டங்களில் அவர் பட்ட அவஸ்தை ஆகியவற்றை விவரிக்கும் அத்தியாயம் (இதுவே முதல் அத்தியாமும் கூட) மிகக் கொடூரமானது. படிக்கும்போதே மனம் பதறுகிறது. இவை அனைத்தும் இவருக்கு முன்னரே தெரிந்திருந்தாலும், ஆண் உடலில் ஒரு பெண்ணாக இருக்கமுடியாது என்று தீர்மானத்துடன் இருந்ததால், இந்த சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டுள்ளார்.
சமுதாயத்தில் ஒன்றுபட்டு வாழமுடியாத திருநங்கைகள் ஒரு அமைப்பாக சேர்ந்து வாழ்வதை விளக்கியிருக்கிறார். அவர்களுக்குள் பல பதவிகள், அறிவிக்கப்படாத விதிகள் உள்ளன என்று தெரிந்து கொள்கிறோம். இவர்களின் வருங்காலத்திற்கு பணம் எப்படி சேர்க்கிறார்கள்? படிப்பதற்கே கஷ்டமாக இருப்பதை சொல்கிறார் வித்யா. கடைகளில் (அல்லது புகைவண்டிகளில்) கையேந்துவது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவது.
வித்யாவை பொறுத்தவரை பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறவே விரும்பாததால், தன் சிகிச்சைக்கான பணத்திற்காக கடைகளில் /
புகைவண்டிகளில் கையேந்துவதையும், சின்னச்சின்ன பொருட்களை விற்பது போன்ற முயற்சிகளையும் செய்திருக்கிறார். இந்த சமயங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
திருநங்கைகளை உறவினர்களே கைவிட்டு விடும்படியான சூழலில், நன்றாக படித்துள்ள இவர் (மொழியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; மற்றும் முனைவர் பட்டத்திற்கு படிக்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது) ஒரு சொந்த வேலையில் அமர்ந்து ஜெயித்துக் காட்ட வேண்டுமென்ற முனைப்போடு இருந்தவர். பல்கலைக்கழக நண்பர்கள் சிலரின் உதவியோடு அதை நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.
ஆணாக பிறக்கும் ஒருவர், எப்படி பெண்ணாக நினைத்து அப்படியே மாற முயற்சிக்கிறார். இந்த பாதையில் அவருக்கு கிடைக்கும் அவமானங்கள், வசைகள், அவர் முழுவதும் பெண்ணாக மாறியபின் முடிந்து விடுகிறதா, என்றால் இல்லை; பிறகும் அவை வேறு வகைகளில் தொடர்கிறது. இவை அனைத்தும் வெளியிலிருந்து நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது என்பது வித்யாவின் புத்தகத்தை படித்தால்தான் புரியும்.
நான் (என் போன்ற மக்களுக்காக) சொர்க்கத்தை கேட்கவில்லை. எங்களை நரகத்திலிருந்து விடுவியுங்கள் என வேண்டுகோள் வைக்கும் வித்யாவின் கதையை படித்தால், திருநங்கைகள் பற்றிய பார்வை கண்டிப்பாக மாறும். அவர் விரும்பும் மாற்றமும் இதுவே.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தற்போது பாடுபட்டுக் கொண்டிருக்கும் வித்யா பல நல்ல யோசனைகளை முன்வைக்கிறார். அவற்றில் சில:
* பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இவர்களைப் பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும்.
* வேலைகளில் இடஒதுக்கீடு கொடுக்கலாம்.
* திரைப்பட தணிக்கைத் துறையினர் இன்னும் கண்டிப்பாக இருந்து திருநங்கைகளைப் பற்றிய காட்சிகளை கவனத்துடன் கையாள வேண்டும்.
ஆணாக பிறக்கும் ஒருவர், எப்படி பெண்ணாக நினைத்து அப்படியே மாற முயற்சிக்கிறார். இந்த பாதையில் அவருக்கு கிடைக்கும் அவமானங்கள், வசைகள், அவர் முழுவதும் பெண்ணாக மாறியபின் முடிந்து விடுகிறதா, என்றால் இல்லை; பிறகும் அவை வேறு வகைகளில் தொடர்கிறது. இவை அனைத்தும் வெளியிலிருந்து நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது என்பது வித்யாவின் புத்தகத்தை படித்தால்தான் புரியும்.
நான் (என் போன்ற மக்களுக்காக) சொர்க்கத்தை கேட்கவில்லை. எங்களை நரகத்திலிருந்து விடுவியுங்கள் என வேண்டுகோள் வைக்கும் வித்யாவின் கதையை படித்தால், திருநங்கைகள் பற்றிய பார்வை கண்டிப்பாக மாறும். அவர் விரும்பும் மாற்றமும் இதுவே.
***
No comments:
Post a Comment