சிறப்புப் பதிவர்: R கோபி
.
நீலம் புயலால் தமிழகமெங்கும் மழை. போதாத குறைக்கு எனக்கு ஜுரம் வேறு. வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல இயலாத சூழல். வாசிப்பு மட்டுமே இதுபோன்ற நேரங்களில் நல்ல துணை.
‘ஆசை என்னும் வேதம்’ நாவலை இதற்கு முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன். இம்முறை திரும்ப வாசித்தபோது புரியாத சில விஷயங்கள் புரிந்தன. நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதல் இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது.
நாவலில் மேலோட்டமாகத் தெரியும் விதவை மறுமணம், காதல் என்பனவற்றையெல்லாம் தாண்டிக் கசப்பான முதல் திருமணம், அது தந்த ரணங்கள், மனதிற்குப் பிடித்த இன்னொருவருடன் (கோபி) சேர்ந்து இருப்பது என்று முடிவானதும் நாயகி (வசுமதி) தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்ளும் அரண் ஆகியவை முக்கியமாகப் படுகின்றன.
‘ஆசை என்னும் வேதம்’ நாவலை இதற்கு முன்பே ஒருமுறை படித்திருக்கிறேன். இம்முறை திரும்ப வாசித்தபோது புரியாத சில விஷயங்கள் புரிந்தன. நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதல் இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது.
நாவலில் மேலோட்டமாகத் தெரியும் விதவை மறுமணம், காதல் என்பனவற்றையெல்லாம் தாண்டிக் கசப்பான முதல் திருமணம், அது தந்த ரணங்கள், மனதிற்குப் பிடித்த இன்னொருவருடன் (கோபி) சேர்ந்து இருப்பது என்று முடிவானதும் நாயகி (வசுமதி) தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்ளும் அரண் ஆகியவை முக்கியமாகப் படுகின்றன.
ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில். கோபியுடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவானதும் வசுமதி எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை.
நாவலில் பாசாங்குகள் இல்லை. பசி, தூக்கம் போன்று உடலுறவு என்பதும் ஒரு முக்கியமான தேவை என்பதைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே நாவல் சொல்கிறது. வசுமதியின் மேல் கோபிக்கு ஈர்ப்பு ஏற்பட அவள் அழகாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று அவன் ஒப்புக்கொள்கிறான்.
நாத்தானார் சீதாமணியின் பாத்திரப் படைப்பு பிரமாதம். நாவலைப் படிக்கும்போது ‘இப்படியும் இருப்பார்களா?’ என்று பல சமயம் நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.
பொதுவாக திரு. பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த நாவலில் அது கொஞ்சம் குறைவாகப் பட்டது. இந்த நாவல் எனக்குப் பிடித்துப் போக இதுவும் ஒரு காரணம்.
வசுமதிக்குக் கோபியின் மேல் காதல் ஏற்பட மேலும் வலுவான காரணங்களைச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
வாசகர் ஒருவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘ஆசை என்னும் வேதம் என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டிருந்தார். திரு. பாலகுமாரன் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கென்னவோ அதற்கான விடையை நாவலிலேயே தேடவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்
விசா பதிப்பகம்
விலை ரூ. 100
ஆன்லைன் மூலம் புத்தகம் பெற: உடுமலை / 600024.காம்
இந்த புத்தகத்தை பற்றி ஒரு வாசகர்..
ReplyDeleteநீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுடைய இந்த கதைக்கு பாராட்டோ, புகழோ சொல்லக்கூடாது. இதில் கதை என்பதைவிட, அதில் வரும் சம்பவங்கள்தான் மனதை நெருடியது. சம்பவங்கள் தொடர்பான சிந்தனை மிக அருமை.
@balhanuman, மிக்க நன்றி.
ReplyDeleteநல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன், மிக்க நன்றி
ReplyDeleteவைத்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.
ReplyDelete///ஒரு முறை சூடு கண்ட முறை மறுமுறை சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். 'Leaving no stone unturned' என்பார்கள் ஆங்கிலத்தில்.///
ReplyDeleteஇல்லை. Once bitten, twice shy என்பார்கள் .
@ஸ்ரீராம், அப்படியா? நாவல் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்
ReplyDelete@சரவணன், நீங்க சொல்றது கரெக்ட். ஆனால் 'leaving no stone unturned' என்பதை அதற்கடுத்த வாக்கியத்தோடு தொடர்பு படுத்திப் படிக்க வேண்டுகிறேன். கொஞ்சம் தெளிவாகவே நான் சொல்லி இருந்திருக்கலாம்.