A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

20 Nov 2012

How to Write in PLAIN ENGLISH

”என்னய்யா இது கொடுமை? புத்தக விமர்சனம் எழுதற தளத்துல இங்கிலீஷ் கத்துத் தர்றாய்ங்களே?”, என்று புருவம் உயர்த்துவோரே! கொஞ்சம் வெயிட்டீஸ்!

இணையத்தில் வெளிவரும் இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 
”இணையத்துப் பெருவெளியில் சித்தாந்தம் பலபேசி வாகைசூடியொரு கூகை என்றுவரும் மறுதெரிவு தெரியா மாண்பதனைக் கண்டுங்காணாது சென்றிடும் பலவந்தப் பிசாசெனப் பின்னிப் பிணைந்தது என் கால்களை. கிட்டவிருந்த சட்டுவத்தை விட்டெறிந்தேன், எட்டப் போய் விழுந்தும் எந்திரியாமல் ஓங்காரம் கொண்டதொரு ரீங்கார அழுகைதனை.....”

இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சரிதான்,என்னதான் சொல்லவருகிறார் மனிதர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் படிப்பதை விடுவதில்லை என்ற லட்சிய எழுச்சியுடன் நானும் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். 

திடீரென என் தோள்மீது யாரோ தலை வைக்கிறார்கள். நம் பக்கத்து வீட்டு நண்பர். 


“என்ன சார் படிக்கறீங்க?”

”வாங்க சார். வாங்க வாங்க”, கையை மானிட்டர் பக்கமாகக் காட்டி, “இதுதான் சார். கிட்டத்தட்ட இலக்கியம் மாதிரி”, என்றேன்.

நான்கு வரி வாசித்தவர் துள்ளிக்குதித்து வாசல்நோக்கி ஒரேயோட்டமாய் பின்னங்கால் பிடரியில் விழ ஓடினதுதான். அதன்பின் எங்கள் வீட்டு விசேஷத்திற்கு எதற்கு அழைத்தாலும் கூட மனிதர் எட்டிப் பார்ப்பதில்லை. மனிதர் தான்தான் வருவதில்லை என்றால், அக்கம்பக்கத்தில் மற்றவர்களிடமும் நம் புராணம் பாடிவைத்திருக்கிறார் போல. 

“அய்யய்யோ! அவரு புலவருங்க.  வீட்டுக்குப் போனா நம்ம கையில எதாவது இலக்கியப் புஸ்தகத்தைத் திணிச்சி படி படின்னு தலையை அதுவுள்ள விட்டு அழுத்திடுவாரு”

இப்போதெல்லாம் நான் போகும்/வரும் போதெல்லாம் பக்கத்து வீடுகளில் படார் படார் என்று ஜன்னல் கதவுகள் சாத்தக் காண்கிறேன்.

நம்ம தாய்மொழிக்கே இந்தக் கதி என்றால்? ஒண்ணும்புரியாத ஆங்கிலத்திற்கு?

மொபைல் ஃபோன் கனெக்‌ஷன் வாங்கும்போது, பர்சனல் லோன் எடுக்கும்போது, இன்ஷூரன்ஸ் ஃபார்ம் நிரப்பும்போது, கிரெடிட் கார்டு அப்ளிகேஷன் நிரப்பும்போதெல்லாம் “டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ்” என்று பன்னிரண்டு பதினைந்து பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதியிருக்குமே, அதையெல்லாம் என்றேனும் நீங்கள் வாசித்ததுண்டா?

நான் அறிந்தவரையில் நூற்றுக்கு நூற்றுப்பத்து பேர் அதை வாசிப்பதில்லை. அப்படியே நீங்கள் வாசிக்க முயன்றாலும் அதில் பக்கத்திற்கு பத்து டஜன் சொற்களின் அர்த்தம் அறிய உங்களுக்கு ஷேக்ஸ்பியர் டிக்‌ஷ்னரி தேவைப்படும். அத்தனை கடின ஆங்கிலத்தை உலகிலேயே இவர்கள் மட்டுந்தான் வேண்டுமென்றே எழுதுகிறார்கள். “லோன் வேணுமா? கையெழுத்து போட்டுட்டு போய்ட்டே இரு. சொம்மா பட்ச்சினு இருக்காத”, என்று மிரட்டாமல் மிரட்டும் வேலை இது

இப்படிப்பட்ட வஸ்தாது உஸ்தாதுகளுக்கு எப்படிப் பாடம் எடுப்பது என்று நல்லுள்ளம் கொண்ட சிலர் யோசித்தபோது தோன்றிய ஒரு சின்ன இயக்கம்தான் "Plain English Campaign".

"Fighting for crystal clear communication since 1979" என்று சொல்லிக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் வெளியிட்ட ஒரு சின்ன புத்தகம் “How to Write in PLAIN ENGLISH".

நீண்டகாலமாக என் புத்தக அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்த இந்தப் புத்தகத்தைத் தூசுதட்டி வாசித்துக் கொண்டிருந்த போது இடையில் கொஞ்சம் தலை திருப்பின வேளையில் இந்த ட்வீட்டைப் படிக்க நேர்ந்தது.

You appreciate space for what it suggests, for if what is revealed is all there is, there won't be much to talk about.
ய்யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! என்னய்யா சொல்ல வர்றீங்க? ஒரு வாரமா மறுபடி மறுபடி படிச்சிப் பாக்கறேன் ஒண்ணும் வெளங்கல்லே. உங்களையெல்லாம் ப்ளைன் இங்கிலீஷ் கேம்பெய்ன் ஓனர் கிட்ட புடிச்சித் தரணுமய்யா!

Plain English புத்தகத்தில் அப்படி என்னத்தைச் சொல்கிறார்கள்?

அதைப் பேசுமுன் இந்த வாக்கியத்தை எளிமைப் படுத்த முடியுமா பாருங்கள்:

We would advise that attached herewith is the entry form which has been duly completed and would further advise that we should be grateful if you would give consideration to the various different documents to which we have made reference.

புத்தகத்திலிருந்து.....

முதலில் Plain English என்றால் என்ன?

ரொம்ப சிம்பிள்: ஒரு தகவலை; அது கடிதமாக, பத்திரிக்கையாக, ஆவணமாக அல்லது என்னவாக இருந்தாலும், அந்த கடிதத்தை / ஆவணத்தை வாசிப்பவரை உங்கள் மனதில் கொண்டு எழுதுவதும், the right tone எனச் சொல்லப்படும் “சரியான தொனியில்” எழுதப்படுவதும்தான் Plain English.

சுருங்கச் சொல்லு

எதைச் சொன்னாலும் அதைச் சுருக்கமாய்ச் சொல்லுதல் நலம். 15 முதல் 20 வார்த்தைகள் கொண்டாற்போல் வாக்கியங்களை அமைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டாலேயொழிய வாக்கிய நீளம் அதைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது அறிஞர் பெருமக்கள் பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.

Activity and passiveness

செயல்வினை, செயப்பாட்டுவினை என்பார்கள் தமிழில். 

ஒரு விஷயத்தை நேராகச் சொல்வது செயல்வினை (Active sentence). வழவழ கொழகொழாவென்று தலை சொறிந்து சொல்வது செயப்பாட்டு வினை  (Passive sentence) என்கிறார்கள் English Campaign அன்பர்கள்.

A young female Tamil journalist was arrested by the Police on suspicion. 

என்றெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு?

The police arrested a young female Tamil journalist on suspicion. என்றால் ஆச்சு என்பது இவர்கள் கட்சி. Passive sentence எழுதுவது கொலைக்குற்றம் இல்லைதான். ஆனாலும் அதை எழுதிப் பழகிவிடும்போது சாதாரண சொற்றொடர்களில் பிரச்னை இல்லை. சிக்கலான சொற்றொடர்களையும் அப்படி எழுதும்போது அது படிப்பவர்களைப் படுத்தியெடுக்கிறது.

Passive ரொம்ப கெட்ட விஷயமும் இல்லை. அது ரொம்பவும் தேவையான இடங்களில் அதைத் தவிர்த்துவிடாதீர்கள். உம்: “This bill has not been paid" என்னும் செயப்பாட்டு வினை, "You have not paid this bill" என்னும் செயல்வினையை விட மென்மையானது, இல்லையா?.

தேவையில்லையா? வெட்டிடு!

பத்து வார்த்தைகளில் முடிக்க வேண்டிய வாக்கியத்தைப் பதமாய்ச் சொல்கிறேன் பேர்வழி என்று பத்து வாக்கியங்களுக்கு இழுத்துவிடாதீர்கள்.

உம்: We would advise that attached என்று ஆரம்பித்து நாம் மேலே கேட்ட கேள்வி. அதன் விடை இதோ: "We attach the entry form which we have filled in. Please consider the various documents we have referred to"

நேர்படப் பேசு

படிப்பவரை மனதில் நிறுத்திப் பேசுதல் என்பது இதுதான். யாரோ ஒருவருடன் பேசுவது போல, “வாடிக்கையாளர்களுக்கு நமது நிறுவனம் எப்போதும் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் நிறுவனமாக விளங்கும்”, என்று எழுதுவதைக் காட்டிலும், ஒருவரிடம் நேரில் பேசுவதைப் போல  ”நாங்கள் உங்களுக்குத் தகவல்களை எப்போதும் முன்கூட்டியே தெரிவிப்போம்”, என்பதில் “நாங்களும் நீங்களும்” என்ற பந்தம் இருக்கிறது இல்லையா?

புத்தகத்தில் இப்படி இன்னமும் நிறைய Plain English'ல் எழுதுவதற்கான டிப்ஸ்கள் நிறைந்திருக்கின்றன. 

இந்தப் புத்தகத்தின்  சில பத்திகள் (gist) இணையத்தில் இங்கே கிடைக்கிறது. எனினும் இந்தப் புத்தகமானது இப்போது கடைகளிலோ இணையத்திலோ கிடைப்பதாகத் தகவல் இல்லை. இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உள்ளதாக அறிகிறேன். எனவே இந்தப் புத்தகம் மீது தப்பித்தவறி உங்களுக்குப் பிரேமை ஏற்பட்டால் Plain English இணையதளம் மூலமாக அவர்களது மின்னஞ்சல் முகவரிதனை அறிந்து அவர்தம்மைத் தொடர்பு கொண்டு புத்தகம் கிடைக்கும் மேலதிகத் தகவல்தனைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். :)


7 comments:

  1. பலருக்கும் உதவும் தகவல்... இணைப்பில் பார்க்கிறேன்...

    பகிர்கிறேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. >>இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உள்ளதாக அறிகிறேன். :-))

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு. விக்கிபீடியாவில் கூட சிம்பிள் இங்கிலிஸில் தனி பக்கங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டுமில்லை தமிழில் கூட எளியத் தமிழ் பயன்பாட்டு வரவேண்டும்.

    ReplyDelete
  4. @ தனபாலன்

    ரொம்பவும் நன்றி

    @பால்ஹனுமான்
    :)))

    @இக்பால் செல்வன்
    நிச்சயமாக. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. //இந்தியாவிலேயே இந்தப் புத்தகம் என்னிடம் மட்டுமே உள்ளதாக அறிகிறேன்//

    உங்களுக்கு மட்டும்தேன் எளிமையான ஆங்கிலம் தெரியாது எனும் தாழ்வுமனப்பான்மையை விட்டுவிடுங்கள் கிரி..உங்களால் முடியும்..ஆங்கிலம் தெளிவுற ஜெயா டிவி ராஜகோபாலனையும், ராபிடக்ஸ் புகழ் கபில் தேவையும் மனமாற வேண்டிக்கொள்ளுங்கள்..

    என்றும் உங்கள் சேவகன்,
    பைராகி
    ஓம்!ஓம்!ஓம்!

    ReplyDelete
  6. "அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதிகமாகத் துள்ளுவான்" இது யாரோ அறிஞர் சொன்னது.
    அதுபோல, பெரும்பாலான பிரிட்டிஷ், அமெரிக்க மீடியாக்கள் பிளைன் ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றன. ஆனால், நம்மூரில் உள்ள "இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற புலிவேஷம் போட்ட பத்திரிகைகள்தாம், தாத்தா காலத்து ஆங்கிலத்தை எழுதுகின்றன.

    ReplyDelete
  7. "அசல் புலியை விட, புலி வேஷம் போட்டவன்தான் அதிகமாகத் துள்ளுவான்" இது யாரோ அறிஞர் சொன்னது.
    அதுபோல, பெரும்பாலான பிரிட்டிஷ், அமெரிக்க மீடியாக்கள் பிளைன் ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றன. ஆனால், நம்மூரில் உள்ள "இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற புலிவேஷம் போட்ட பத்திரிகைகள்தாம், தாத்தா காலத்து ஆங்கிலத்தை எழுதுகின்றன.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...