Name: Strong Medicine
Author: Arthur Hailey
தாலிடோமைட் மருந்து தயாரிப்பாளர்
பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார், என்ற தகவல் இந்த வாரம், இதை எழுதும்
நேரத்தில்கூட, எல்லா ஆங்கில பத்திரிகைகளிலும் செய்தியாக வந்து
கொண்டிருக்கிறது, மன்னிப்பின் முழு வடிவம் இங்கே.
இந்த மன்னிப்பு போதாதென்ற கண்டனங்கள் அவரது அறிக்கையைத் தொடர்கின்றன.
இந்த செய்தியைப் படிக்கும்போது ஆர்தர் ஹைலி எழுதிய "Strong Medicine" என்ற
நாவலை சில காலம் முன்பு படித்தது ஞாபகம் வந்தது, அதுவே இந்த வாரத்திற்கான
புத்தக விமர்சனம்.
முதலில் "thalidomide" பற்றி சிறு அறிமுகம்,
கர்ப்பமான பெண்களுக்கு காலை எழுந்தவுடன் அல்லது அந்த தினத்தில் எப்போதாவது
அல்லது அடிக்கடி வாயிலெடுப்பது அல்லது எடுக்க வேண்டும் என்ற உணர்வு
இருக்கும், அந்த குமட்டலைக் குறைப்பதற்கு, (1957ஆம் ஆண்டு முதல் - 1961ஆம்
ஆண்டு வரை) இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதை உட்கொண்ட
பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன, அதைத் தொடர்ந்து இந்த
மருந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மிகுந்த கண்காணிப்புடன்
பரிந்துரைக்கப்படுகிறது.
1957-85 வரையிலான ஆண்டுகள் கதையின் காலம். இந்தக்
காலத்திற்குள் உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள், அமெரிக்க அரசியலில்
ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், மிக
முக்கியமாக மருந்து தயாரிப்பாளர்கள் வரலாறு- இவையனைத்தும் கதை மாந்தரின்
வாழ்வோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. ஒரு டாக்டர் -அவரின் மனைவி,முதலில்
மருந்து விற்பனை பிரதிநிதியாக அறிமுகப்படுத்தப்பட்டு, நாவலின் இறுதியில்
அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று, கடைசியாக, அந்த
நிறுவத்தின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றம்
செல்வதுடன் நாவல் முடிவடைகிறது. Andrew Jordan - Celia de Grey இவர்கள்தான்
முக்கியமான கதை மாந்தர்கள், டாக்டர் மற்றும் அவரது மனைவி, Andrew டாக்டராக
பணிபுரியும் மருத்துவமனைக்கு, Fleding- Roth நிறுவனத்தின் மருந்து விற்பனை
பிரதிநிதியாகயாக வந்து அறிமுகமாகிறாள் Celia, தான் வேலை செய்யும் நிறுவனம்
கண்டுபிடித்த மருந்தை,உயிரிழக்க இருக்கும் ஒரு நோயாளிக்கு Andrewவின்
மூலம் பரிந்துரைக்க , அவர் உயிர் பிழைக்கிறார், Andrewவும் -Celiaவும் மணம்
செய்து கொள்கின்றனர்.
மருந்து தயாரிப்பாளர்கள், ஒரு மருந்தை கண்டுபிடிக்க
படும் கஷ்டங்களும், அதை எப்படியாவது விற்பனை செய்து லாபம் சம்பாதித்து
விடவேண்டும் என்ற பணவெறி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதையும்
நாவலின் மூலம் சொல்கிறார் ஹெய்லி. .அதே போல், விற்பனை பிரதிநிதிகள், தங்கள்
நிறுவனத்தின் மருந்தைதான் டாக்டர்கள் அதிக அளவில் பரிந்துரைக்க வேண்டும்
என்பதற்காக, அவர்களுக்குக் கையூட்டாக , இலவச சுற்றுலா, வெகுமதிகள் போன்ற
இலவசங்களைக் கொடுத்து அவர்களைச் சீரழிக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
சளி பிடித்தால் மார்பில் தேய்க்கும் மருந்து, இருமல் சிரப் போன்றவை நோயை
குணப்படுத்தாத போதும் ,மருந்து கம்பெனிகள் எப்படி விளம்பரத்தின்
மூலம்,அவற்றை மக்கள் வாங்க வைத்து ஏமாற்றுகின்றன/அதிக அளவில் லாபம்
சம்பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
சாதாரண மருந்து விற்பனை பிரதிநிதியாக வரும் celia ,
ஒவ்வொரு தடையாகத் தாண்டி தன் துறையில் முன்னேறுகிறார், தான் வேலை செய்த
நிறுவனமே ஆனபோதிலும் ,அவர்கள் செய்யும் தவறுகளை நேர்மையாகச்
சுட்டிக்காட்டுகிறார், Thalidomide மருந்தைப் பெரிய அளவில் விளம்பரம்
செய்வதைத் தடுக்கிறார் அவர். இதனால் அவர் வேலை இழக்கிறார். பின்னர் அந்த
நிறுவனமே தன் தவறுகளை உணர்ந்து அவரைத் திரும்பவும் வேலையில் அமர்த்துகிறது.
அவருக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது.
இதனூடே Celia விற்பனை பிரதிநிதியாக இருக்கும்போது
தனக்கு மேலாளராக இருக்கும் Samஐ குருவாக ஏற்றுக் கொள்கிறார். Sam
படிப்படியாக முன்னேறி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆகிறார். அதைத்
தொடர்ந்து, நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி கூடத்தை லண்டனில் அமைக்க முடிவு
செய்கிறார். வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட (Montayne) மருந்தை, இங்கே
விநியோகம் செய்ய முடிவு செய்கிறார். லண்டனில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படுத்த
செய்யப்பட்ட முடிவு, பல வருடங்கள் கழித்து , மிக நல்ல பலன் தருகிறது,
நிறுவனம் மிகப்பெரும் லாபம் அடைகிறது. ஆனால் புதிய மருந்து விற்பனை செய்ய
எடுத்த முடிவு , நிறுவனத்தை பலமாகத் தாக்குகிறது, அதை உட்கொண்ட கர்ப்பிணிப்
பெண்களுக்கு, ஊனமான குழந்தைகள் பிறக்கவே, மருந்து தடை செய்யப்படுகிறது.
Montayne மருந்தை Sam பெற்றுக் காலத்தில் இருக்கும் தன் மகளுக்கு
தருகிறார், அவளுக்கு ஊனமான குழந்தை பிறக்கவே, குற்றவுணர்ச்சி மிகுதியால்
Sam தற்கொலை செய்து கொள்கிறார்.
டாக்டர்களுக்குக் கொடுக்கப்படும் இலவச மருந்துகள்
எப்படி, அவர்களையே அழிக்கின்றன, அந்த மருந்துகளுக்கு அவர்கள் எப்படி அடிமை
ஆகிறார்கள் என்பதை, Andrewவின் ஆசிரியராக வரும் Noah Townsend மூலம்
சொல்கிறார் ஹெய்லி. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி
Peat smithஐ பெரும் பிரயத்தனம் செய்து , ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமையை
அவர் ஏற்கச் செய்கிறார் Celia. இன்ன நோய்க்கு என்று Peat Smith ஆராய்ச்சி
செய்து கண்டுபிடித்த மருந்து, எதிர்பாராவிதமாக உடலைப் புத்துணர்ச்சியாக
வைத்துக் கொள்ளவும், தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கவும் பயன்படுகிறது.
இந்த ஆராய்ச்சி முடிவுக்காக அவருக்கு knighthood வழங்கப்படுகிறது, அதைத்
தொடர்ந்து அவர் மீண்டும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கே
சென்று விடுகிறார்.
Fleding-Rothஇன் அமெரிக்க ஆராய்ச்சிக்கூடத்தின் தலைமை
ஆராய்ச்சியாளர் Dr. Vincent Lordஉம் இதே சமயம் தனது வாழ்நாள் கண்டுபிடிப்பாக ஒரு
மருந்தை வெளிக்கொணர்கிறார். அந்த மருந்து கிளினிக்கல் trialsயின் போது
வெளிக்காட்டும் சில குளறுபடிகளை மறைத்து விடுகிறார். இந்த சமயம் Celia,
Fleding-rothஇன் தலைமை அதிகாரி ஆகிறார். Lord கண்டுபிடித்த மருந்து,
டாக்டர்கள் மூலமாக மக்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது, ஆறு மாதங்கள்
கழித்து அதன் பக்க விளைவுகள் வெளிவரவே , நிறுவனத்தின் மீது வழக்கு
தொடரப்படுகிறது, Celia அதை எதிர்கொள்வதுடன் கதை முடிவடைகிறது.
மொத்த நாவலும் படித்து முடிக்கும்போது, ஒரு
நிறுவனத்தின் முப்பது வருட கால மாற்றங்கள், அதில்பணியாற்றுபவர்கள்
எடுக்கும் முடிவுகள், அவை எப்படி பொது மக்களை பாதிக்கின்றன என்பது,போன்ற
தகவல்களை நாம் நெருங்கி அறிய முடிகிறது.
This novel can be read here
ஆர்தர் ஹெய்லியின் கதையில் போழுதுபோக்கையும் தாண்டி விஷயம் இருக்கும் போல.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.
நன்றி சார், அடுத்த பதிவில் இருந்து குறைத்துக் கொள்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி சார்... அறிந்து கொண்டேன்...
ReplyDelete(உங்கள் தளம் dashboard-ல் வரவில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்... அதனால் email subscribe செய்து விட்டேன்...)
தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தனபாலன் ஸார்.
Delete