Name: To Kill a Mockingbird
Type : Novel
Author: Harper Lee
மூணு வருடம் முன்னாடி கொஞ்சம் தீவிரமா புத்தகம் படிச்சுட்டு இருந்தபோது, இதைப் படித்தேன், அப்போது படித்தபோது கொஞ்சம் மேலெழுந்தவாரியாகவே புரிஞ்சுது. ஆனா இப்ப வாரம் ஒரு புத்தகம் பத்தி எழுதறதுனால இந்த புத்தகத்தை திரும்பவும் வாசித்தேன்.
கதைகளம் நமக்குக் கொஞ்சம் அந்நியப்பட்டது, ஆனால் படிக்க ஆரம்பித்த நிமிடம் முதல் கதைக்குள் இழுக்கப்பட்டு விட்டேன். Jean Louise Finch (scout) என்னும் பெண் குழந்தையின் மூன்று வருட காலத்தில் (ஆறு வயது முதல் ஒன்பது வயது) நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் கதை. முழுக்க முழுக்க scoutயின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது கதை. கதை ஒரே இடத்தில்தான் நடக்குது : Maycomb county, Alabama. அமெரிக்கா
கதைய ரொம்ப எளிமையா சொல்லணும்னா, உலகின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி (1930- 1940) நடந்த காலத்தில், Atticus Finch , டாம் ராபின்சன்(கறுப்பர் இனம்) என்பவருக்கு வழக்கறிஞராக அரசால் நியமிக்கப்படுகிறார். ஒரு வெள்ளையின பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளையின ஜூரிக்களால் மரண தண்டனையும் ராபின்சனுக்குக் கொடுக்கப்படுகிறது.
Atticus finchக்கு, இரண்டு குழந்தைகள் Scout மற்றும் Jem. Atticus, மனைவி காலமாகிவிட்டார், ஒரு கறுப்பருக்காக வாதிடுவதால் வெள்ளையின மக்களால் வெறுக்கபடுகிறார், அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெறுகிறது. Atticusயின் பக்கத்து வீட்டில் Arthur "boo" Radley என்பவர் வசித்து வருகிறார், இவர் பல வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. இவரை எப்படியாவது வெளியே வரவழைத்துவிட வேண்டும் என Scout மற்றும் Jem முயற்சி செய்கின்றனர். இந்த நிகழ்வுகள் மாறி மாறி வந்து, கதையின் இறுதியில் நிறைவு பெறும்..
கதையை மொத்தம் இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். முதல் பாதி முழுவதும் Maycomb county பற்றி scoutஇன் எண்ணங்கள், jem உடன் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், ஸ்கூட் பள்ளிக்கு செல்லுதல், இதற்கு நடுவே Atticus, டாம்க்கு வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார். இரண்டாம் பகுதியில், Atticus ஏற்று நடத்தும் வழக்கு, அதன் தீர்ப்பு, "Boo" Radley ஏன் வீட்டுக்கு உள்ளேயே அடைபட்டு கிடைக்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது.
கதை மொத்தமும் Scoutஇன் பார்வையில் சொல்லப்படுவதால், Scout மற்றும் Jem எப்படி இந்த நிகழ்வுகளை எதிர் கொள்கிறார்கள் என்பதே கதை. குழந்தைகள் உள்ளம் எப்போதும் கள்ளம், கபடம் அறியாதது, வளர்ந்த மனிதர்களே அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். குழந்தைகள் சில சமயம் உண்மையைப் பேசும்போது பெரியவர்களிடம் பதில் இருப்பதே இல்லை.Atticus ஒரு கறுப்பருக்காக வாதிடுவதால் அவரது நண்பர்களின் மனநிலை, அவரது சகோதரியின் மனநிலை, இவர்களின் கருத்துகள் Scout மற்றும் Jemஐ எப்படி பாதிக்கின்றன, இதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதெல்லாம் மிக அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
Scoutஇன் ஆசிரியர் வகுப்பில் வரலாறு பாடம் எடுக்கும்போது யூதர்களைக் கொன்ற ஹிட்லரை வெறுக்கிறார். இரவு வீட்டில் Jem உடன் உரையாடும் Scout, Tom Robinsonக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என வற்புறுத்திய ஆசிரியர் , ஹிட்லரை ஏன் வெறுக்கிறார் ? என கேட்டு நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறார்.
Scoutஇன் ஆசிரியர் வகுப்பில் வரலாறு பாடம் எடுக்கும்போது யூதர்களைக் கொன்ற ஹிட்லரை வெறுக்கிறார். இரவு வீட்டில் Jem உடன் உரையாடும் Scout, Tom Robinsonக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என வற்புறுத்திய ஆசிரியர் , ஹிட்லரை ஏன் வெறுக்கிறார் ? என கேட்டு நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறார்.
கடைசியாக "Boo" Radley பற்றிய உண்மையும், அவரை பற்றி Scout சொல்லும் கருத்துகளும் எக்காலத்துக்கும் பொருந்தும்.நாவல் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடியபடி இருக்கிறது. நாவலில் வரும் அனைத்து மாந்தர்களும், அவர்கள் செய்யும் அபத்தங்களும், அவை சொல்லப்படும் விதமும் மிகப் பிரமாதம்..
Harper Lee எழுதிய முதல் மற்றும் கடைசி நாவல் இது, அவருக்கு இந்தப் புத்தகம் Pulitzer பரிசையும் பெற்று தந்தது. சில கறுப்பின மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட புத்தகம். அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment