சாப்பாட்டுப் புராணம் - சமஸ்
தான் பிரசுரம்
செப்’2009 பதிப்பு ரூ. 60/-
112 பக்கங்கள்
இணையத்தில் வாங்க: உடுமலை
தம்ரோட் ஹல்வா நம்மில் பலர் அறிந்த ஒரு இனிப்பு வகை. நமக்கு ரவா உப்புமா தெரியும், ரவா கேசரி தெரியும், ரவா தோசையும் தெரியும். ரவா ஹல்வா தெரியுமா? ரவை கொண்டு கிளறப்படும் ஒருவகை ஹல்வாதான் இந்த தம்ரோட் ஹல்வா.
சென்னை - திருவல்லிக்கேணி - எல்லீஸ் ரோடு - பாஷா ஸ்வீட்ஸில் இந்த தம்ரோட் ஹல்வா ரொம்பப் பிரசித்தம். எல்லீஸ் ரோடில்* பாஷா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இரண்டோ மூன்றோ கடைகள் உண்டு. எல்லாக் கடைகளிலும் தம்ரோட் கிடைக்கும், ஆனால் சரியான பாஷா, தேவி தியேட்டருக்கு நேர் பின்னே இருப்பார், அவரிடம்தான் ’நச்’ சுவையில் தம்ரோட் ஹல்வா கிடைக்கும்.
* (சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடிய திசையிலிருந்து வாலாஜா ரோடு பிடித்து மவுண்ட் ரோடு வந்தீர்கள் என்றால் அண்ணா சிலை சுரங்க நடைபாதைக்கு முன்னதாக வரும் இடது திருப்பம்தான் எல்லீஸ் ரோடு. தேவி தியேட்டருக்குப் பின் சந்து எனவும் கொள்ளலாம்)
சென்னையிலிருந்து திருச்சி ட்ரங்க் ரோடு பிடித்து எந்த வெளியூருக்குப் போவதானாலும் அச்சரப்பாக்கத்தைக் கடந்து போனீர்களானால் அங்கே இருக்கும் கணேஷ்பவனில் டிபன் காப்பி சாப்பிடாமல் போகக்கூடாது என்று இணைய அன்பர்கள் மாயவரத்தானும், ஆர்.கோகுலும் சொல்வார்கள். அச்சரப்பாக்கம் போனால் பாஷா கணக்காய் அங்கேயும் ஐந்தாறு கணேஷபவனங்கள். இந்த அனுபவத்தை முன்னமே பேசுகிறேன் தளத்தில் எழுதியுள்ளேன். பாரம்பரிய கணேஷ் பவன் “பழைய” என்னும் போர்டு தாங்கி நிற்பாராம். அதுதான் அடையாளம்.
என்னத்த பெரிய ஹல்வா, என்னத்த பெரிய டிபன்-காபி? அதை எங்கே தின்னா என்ன என்று விட்டுவிடுவதில்லை நாம். ஒரு குறிப்பிட்ட பண்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடம்தான் சரி என்று குறித்து வைக்கிறோம். அங்கே தின்றால்தான் திருப்தி என்று கொள்கிறோம்.
ஸ்ரீரங்கம் போனால் தரிசனம் முடித்து ராஜகோபுரம் தாண்டி வெளியே வந்ததும் திருவானைக்காவலுக்குத் திரும்பும் திருப்பத்தைக் கடந்தவுடன் இடக்கைப் பக்கம் இரண்டாவதாக இருக்கும் ஒரு சின்ன காப்பிக் கடையின் :”ஃபில்டர்” காப்பி சுவைதான் நாவின் சுவைமொட்டுக்களை உசுப்பும் நமக்கு.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் போய்வந்த போது ”திருவானக்கா நெய் தோசை” சாப்டீங்களா என்று கேட்டார் அலுவலக நண்பர் சதீஷ்.
“ஙே! இல்லைபா. நான் அந்த ஃபில்டர் காப்பி மட்டுந்தான் குறிச்சி வெச்சுக் குடிக்கறது”, என்றவனிடம், “ச்சே! நானும் சொல்லி அனுப்பலை பாருங்க”, என்று சுய அலுப்பு அலுத்துக்கொண்டார் சதீஷ். அப்புறம் அந்த ஃபில்டர் காப்பி முகவரியும் நம்மிடம் வாங்கிக் கொண்டார்.
இப்படி நாவழிச் செவிவழிக் கேட்டறிந்த தகவல்கள் அங்கங்கே தெரிந்தும் பலநேரங்களில் இப்படித் தெரியாமல் போகின்றன. என்னத்துக்கு குறை உங்களுக்கு என்று அதற்காக சின்னதாக நமக்கு ஒரு தொகுப்பு தந்திருக்கிறார் சமஸ், “சாப்பாட்டுப் புராணம்” புத்தகமாக.
தினமணி நாளிதழில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ”ஈட்டிங் கார்னர்” பக்கங்களின் 100 பக்க சின்னஞ்சிறு தொகுப்பே இந்த சாப்பாட்டுப் புராணம் புத்தகம். நாளிதழ் வாசகர்களை டார்கெட் வைத்து எழுதப்பட்டதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் நச் என்று இரண்டே பக்கங்களில்., சில பதார்த்தங்கள் மட்டும் நான்கு பக்கங்கள் நீள்கின்றன. படிக்க எடுத்தால் இரண்டு நிமிடத்தில் ஒரு உணவுக் குறிப்பைப் படித்துவிடலாம்.
”தமிழர் உணவைக் கொண்டாடும் தமிழின் முதல்நூல்” என்று முகப்பில் குறிப்பிடுகிறார்கள். எனினும், ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவுவகைகளையும் 100 பக்கங்களில் சொல்லிவிட முடியுமா என்ன? இந்தப் புத்தகம் பெரும்பாலும் தஞ்சை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளின் ஸ்பெஷல் உணவு வகைகள், அவை கிடைக்கும் ஊர்கள், குறிப்பிட்ட இடங்கள், அந்த இடங்களின் சிறப்புகளைச் சுருக்கமாகக் கூறுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியத்துச் சாப்பாட்டுப் புராணம் நிஜமாகவே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு கவள பதம்.
திருவையாறு அசோகா, குணங்குடிதாசன் சர்பத், விருத்தாசலம் தவலைவடை, சிதம்பரம் கொத்சு என்று வளைத்து வளைத்து ஒவ்வொரு ஊருக்கும் பிரசித்தி பெற்ற அந்தக் கடைகளுக்கு விசிட் அடித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சமஸ்.
”விசேஷ நாட்களில் வீட்டுக்கே வந்து வீட்டுப் பணியாரம் செய்து தருபவர்கள் ’வீட்டுப் பணியார ஆத்தாக்கள்’. இவர்களின் கதையை அடுத்த தலைமுறைக்கே தெரியாமல் போகும்படி செய்ததாம் கூத்தாநல்லூர் தம்ரூட் அல்வா’வின் வருகை”, என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சின்ன வரலாற்றைச் சொல்கிறார் சமஸ்.
பொங்கலுக்குச் சின்னம்மா; உப்புமாவுக்குப் பெரியம்மா, அது என்ன? அதுதான் ரவா பொங்கல் என்று ஒரு உணவின் பதத்தை எளிமையாகப் புரிய வைக்கவும் செய்கிறார்.

முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சி உண்டு. மழைக்கு ராதாவின் குடிசை வீட்டில் ஒதுங்கும் சிவாஜி கணேசன் ராதா சமைத்த மீன் குழம்புச் சோறு தின்னும் காட்சி.
அடிப்படையில் நான் ஒரு சைவபட்சினி. அக்கம்பக்கத்தில் யார்வீட்டிலும் மீன்வாசம் தூக்க சமையல் என்றால் வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் அடித்துச் சாத்திவிட்டு வீட்டைச் சுற்றி ரூம்ஸ்ப்ரே அடித்துக் கொள்பவன். ஆனால் அந்த “முதல் மரியாதை” மீன்குழம்புக் காட்சியை ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் தளும்பப் பார்ப்பேன். ஏதோ நானே சிவாஜியாக அந்த மீன்குழம்பை ருசித்துத் தின்பதாய் உணர்வேன்.
“மூங்கில் தட்டிலிருந்து நேராகச் சாப்பிடுவோர் தட்டுக்குப் போகின்றன பூப்போன்ற இடியாப்பங்கள்; பற்களை, “வா, வா” என்று வம்புக்கு இழுக்கின்றன ஆட்டுக்கால்கள்” என்று தஞ்சாவூர் பாவா கடை இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா அத்தியாயத்தை அப்படித்தான் பக்குவமாக எழுதியிருக்கிறார் சமஸ்.
அணிந்துரையில் “க்ரியா ஆசை” குறிப்பிடுவது போல், அசைவ சாப்பாட்டுப் பிரியர்களையும் விளிம்புநிலைக்குத் தள்ளாமல் “மொஹல் பிரியாணி, சிம்மக்கல் கறி தோசை, புத்தூர் அசைவச் சாப்பாடு” ஆகியவற்றைக் கவர் செய்திருக்கிறார் சமஸ்.
மேலும் கும்பகோணம் பூரி-பாஸந்தி, தலைவாழை இலைச் சாப்பாடு, பஞ்சாப் சப்பாத்தி-செட்டிநாடு கறிப்பிரட்டல், நீடாமங்கலம் பால்திரட்டு, வெள்ளை அப்பம்-கார சட்னி, தஞ்சாவூர் காபி என்று நீண்டு நிற்கிறது பட்டியல்.
சரி, இவ்வளவு பார்த்தோம். ஒரேயொரு உணவுவகையின் ரெசிபியும் பார்ப்போமே. நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட ஒரு காலை உணவுதான். பொங்கல்! எல்லோர் வீட்டிலும் அவ்வப்போது செய்வதுதான் என்றாலும் 80 வருடங்களைக் கடந்த பாரம்பரியம் மிக்க “மாயவரம் லாட்ஜ்” சென்றால் கிடைக்கும் தேவாம்ருதப் பொங்கலின் பக்குவம் இதோ...

ஏழு பங்கு பச்சரிசி, ஒரு பங்கு பாசிப்பருப்பு, அரைப்பங்கு மிளகு-சீரகம், ஒரு பங்கு நெய், அரைப்பங்கு முந்திரி. அரிசியைக் குழைய விட்டு, வேகவைத்த பாசிப்பருப்பை அதில் கொட்டி, நன்கு பொங்கிய பின், பொரித்த மிளகு, சீரகம், முந்திரி, காயத் தூள், கறிவேப்பிலையை அதில் கலந்தால் பொங்கல்.அவ்வளவே!
குறிப்பிட்ட உணவைத் தயாரிக்கும் நிறுவனம் அந்த உணவைத் தயாரிப்பதில் சிறந்தவர்களாக, தனித்தன்மை கொண்ட உணவகத்தினராக இருக்கவேண்டும்; நம் கலாசாரத்தில் வேறூன்றிய, பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வு கொண்ட, தரமான, நியாயவிலையில் கிடைக்கும் உணவாக அந்த உணவு இருக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட வரையறைகளுடன் உணவுவகைகளின் குறிப்புகளைத் தருகிறார் சமஸ்.
எனவே, இது ஒரு தனிநபரின் விருப்பக் குறிப்பாக நின்றுவிடாமல், கிட்டத்தட்ட ஒரு ஆய்வறிக்கையாகவே நமக்குத் தெரிகிறது. ஆக, உணவு ரசிகர்கள் நம்பிக் களமிறங்கலாம் என்ற உத்தரவாதம் கிடைக்கிறது இந்தப் புத்தகத்தை வாசித்தால்.
வெறும் இட்லி, தோசை, பொங்கல் புராணங்களோடு மட்டும் நின்று விடாமல், ”நம் மக்கள் என்றேனும் ஒருநாள் பழைய பாதைக்குத் திரும்பக்கூடும். அப்போது அவர்களுக்குக் கொடுப்பதற்கு மிட்டாய் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டு கும்பகோணத்தில் “கமர்கட், கடலை மிட்டாய், பொரி உருண்டை” தயாரித்துக் கொண்டிருக்கும் “ரோஜா மார்க் மிட்டாய்” நிறுவன அதிபர் பாலாஜி சொல்வதை சமஸ் பதிவு செய்கையில்தான் இந்தச் சாப்பாட்டுப் புராணம் முழுமை பெறுவதாக நான் நினைக்கிறேன்.
.

திருவையாறு அசொகாவும் காராசேவும் சாப்பிடுருக்கேன்..
ReplyDeleteஅதேப்போல் திருவானைக்காவல்- பார்த்தசாரதி பவன் பட்டர் ரோஸ்ட் , வாழ்க்கைல தவற விடகூடாத அனுபவம். ஸ்ரீவில்லிபுத்தூர்ல பல பால்கோவா கடை இருக்கு ஆனா அசல் கடை ஆண்டாள் சந்நிஹ்டிக்கு போகும் பொது இடது பக்கம் இருக்கும். அங்க பால் அல்வா சாப்பிடனும். அட்டகாசம்.