"கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு நூலிழைகளில் யாரோ மணி கோத்துக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கமாகவும் பிசிறுகளற்றும். நகக்கணு இடைவெளி அளவே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது நூலிழையின் முனைகள். இழுத்து ஒரு முடிச்சுச் போட்டு விட இயலுமா என்பது தான் சவால். பார்வையைக் குறுக்கி, இரு கைவிரல் நுனிகளில் தாங்கிப் பற்றி இழைகளை ஒன்று சேர்ப்பதில் ஜீவன் முடிந்து விடுகிறது. வழுக்கி ஓடும் மணிகளைச் சேர்த்துத் தொடுத்து மீண்டும் மீண்டும் எப்படியாவது மாலையாகிவிடக் காத்திருக்கின்றன நூலிழைகள். முடிச்சிடப்பட இயலாத அதன் நுனியில்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ன ? "
பிறந்த எல்லோருமே தனக்கு என்று ஒரு அடையாளத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம், சில பேருக்கு இது தன்னுடைய அடையாளம் என்று தெரிகிறது. சிலருக்குத் தெரிவதில்லை. தெரியவில்லை என்பதால் என்ன போயிற்று? தேடுவதுதானே வாழ்க்கை?
வாசு , இரண்டு தடவை ஒன்பதாம் வகுப்பிலும் ,இரண்டு முறை மேல்நிலை முதல் வருடத்திலும் தவறி ,கதையின் ஆரம்பத்தில் பிளஸ் டூ முடிவை தூக்கம் வராமல் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இருபது வயது ஐயங்கார் பையன். அவனுடன் கூடப் பிறந்தவர்கள் ஏழு அண்ணன்கள், ஒரு அக்கா. சைதாப்பேட்டை ஒண்டுக் குடித்தனத்தில் அண்ணா மற்றும் மன்னி குழந்தைகளோடு வாழ்கிறான்.
எதிர்பாராவிதமாக பிளஸ் டூவில் அவன் தேறிவிடுகிறான். அவனை எப்படியாவது கல்லூரியில் சேர்த்துவிட முயற்சி நடக்கிறது. அவன் வாங்கிய மதிப்பெண்கள் அவனுக்கு உதவுவதாக இல்லை. வாசுவுக்குத் தன்னுடைய தகுதி தெரிகிறது; இந்த மதிப்பெண்ணை வைத்துக் கொண்டு கல்லூரியில் இடம் கிடைக்காது என்றும் தெரிகிறது. அந்தக் குடும்பத்திலேயே அவன்தான் முதன்முதலாக பிளஸ் டூ தேறியவன். அவனுடைய ஒரு அண்ணன் சமையல் வேலையில், ஒரு அண்ணன் எலெக்ட்ரிக் சாமான்கள் ரிப்பேர் செய்கிறான். இன்னொருவன் பெட்டிக்கடை, வரதன் - ஸ்ரீரங்கம் ஜீயரிடம் வேலை, ஒருவன் டூரிஸ்ட் கைடு, வாடகை டாக்ஸி டிரைவர் ஒருவன்.
கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியூட்டும் விதமாக வரதன் சொற்படி தன்னுடைய ஜாதியை நாடார் என மாற்றிக் கொண்டு குளித்தலையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுகிறான் வாசு.
எதிர்பாராவிதமாக பிளஸ் டூவில் அவன் தேறிவிடுகிறான். அவனை எப்படியாவது கல்லூரியில் சேர்த்துவிட முயற்சி நடக்கிறது. அவன் வாங்கிய மதிப்பெண்கள் அவனுக்கு உதவுவதாக இல்லை. வாசுவுக்குத் தன்னுடைய தகுதி தெரிகிறது; இந்த மதிப்பெண்ணை வைத்துக் கொண்டு கல்லூரியில் இடம் கிடைக்காது என்றும் தெரிகிறது. அந்தக் குடும்பத்திலேயே அவன்தான் முதன்முதலாக பிளஸ் டூ தேறியவன். அவனுடைய ஒரு அண்ணன் சமையல் வேலையில், ஒரு அண்ணன் எலெக்ட்ரிக் சாமான்கள் ரிப்பேர் செய்கிறான். இன்னொருவன் பெட்டிக்கடை, வரதன் - ஸ்ரீரங்கம் ஜீயரிடம் வேலை, ஒருவன் டூரிஸ்ட் கைடு, வாடகை டாக்ஸி டிரைவர் ஒருவன்.
கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியூட்டும் விதமாக வரதன் சொற்படி தன்னுடைய ஜாதியை நாடார் என மாற்றிக் கொண்டு குளித்தலையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து விடுகிறான் வாசு.
வரதனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. கொஞ்சமாக வாசுவுக்கும் படிப்பில் நாட்டம் வந்து முதல் வருடம் தேறிவிடுகிறான். காலேஜ் ஜெனரல் செக்ரட்டரி பதவிக்கும் போட்டியிடுகிறான். ரொம்ப நாட்களாக உறுத்திக்கொண்டு இருந்த ஜாதி மாறி வாங்கின சர்டிபிகேட் திடீரென மனதில் விஸ்வரூபம் கொண்டு அரிக்க, கல்லூரி வகுப்புகளில் நாட்டம் இல்லாமல் போய் விடுகிறது அவனுக்கு. கல்லூரி முதல்வர் கூப்பிட்டு கண்டித்து நாடார் ஜாதிப் பையன் என்பதால் பரீட்சை எழுத அனுமதிப்பதாகக் கூற, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காசும் எடுத்துக்கொள்ளாமல் ரயில் ஏறி ஒரு பயணச்சீட்டு ப் பரிசோதகர் உதவியால் டெல்லி சென்றடைகிறான்.
டெல்லியில் ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ் வீட்டில் உதவியாளாக, பேப்பர் போடும் பையனாக, பாரில் மது பரிமாறுபவனாக, ஹோட்டலில் கறிகாய் நறுக்குபவனாக என பல வேலைகள் செய்கிறான். இந்த சமயத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது. இங்கே கொஞ்சமாக மண்டல் கமிஷனின் குற்றம் குறைகளை அலசுகிறார் பாரா. இந்திரா பார்த்தசாரதியின் ஒரு நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் கம்யுனிசத்தை அலசுவார்கள். அது மாதிரி எல்லாம் இல்லாமல், ரொம்ப உணர்ச்சிவாசப்படாமல் அடுத்த கட்டத்துக்கு நாவலை நகர்த்தி விடுகிறார்.
ஹைகோர்ட் ஜட்ஜின் மருமகள் மூலம் ஒரு சிறிய வியாபாரம் பண்ண வாய்ப்பு அமைகிறது. பின்னர் ஜட்ஜிடம் சிபாரிசு கடிதம் பெற்று செய்தித்தாள், வார, மாத இதழ்களின் முகவர் ஆகிறான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நொய்டாவில் இருக்கும் ஒரு கடைக்கு உரிமையாளன் ஆகிறான். அங்கு வரும் ஒரு வாடிக்கையாளரிடம் பேசிப் பேசி, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி சிங்கப்பூரில் தனியாக ஒரு கடை வைக்கிறான். இறுதியில் வாசு தன்னுடைய மன்னிக்கு தான் விரைவில் வந்து அவர்களை சந்திப்பதாகக் கடிதம் எழுதவதுடன் கதை முடிவடைகிறது.
வாசு எப்படி தன் சில அடையாளங்களைத் தொலைத்துவிட்டாலும், கடுமையாக உழைப்பதன் மூலம், தன் சுயமரியாதையின் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்கிறான் என்பதுதான் கதையின் சாரமாக இருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் ஐயர் வீட்டுப் பெண்களை கேலி செய்து எழுதியிருந்தாலும், அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
வாசுவின் அண்ணன்கள் யாருமே சுயத்தைத் தேடவில்லை, இல்லை தேடுவதற்கான நேரம் இல்லாத அளவுக்கு வாழ்க்கையில் நெருக்குதல் உண்டாகி இருக்கலாம். ஆனால் வாசு மட்டுமே ஜாதிச் சான்றிதழ் மாற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற சில விஷயங்கள் மூலம் தன் சில அடையாளங்களை இழக்கிறான். அனைவரையும் போல அவனும் பணத்தை லட்சியமாக, தன் அடையாளமாக கருதுகிறான் என அவன் மன்னி உட்பட பலபேர் நினைக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் இல்லை, கடுமையாக உழைப்பதன் மூலம்,கிடைக்கும் சுயமரியாதை தான் நிஜ அடையாளம் என அவன் நிறுவவது அவனது தொடர்ந்த தேடலின் இறுதியில்தான் நமக்குப் புரிகிறது.
புவியிலோரிடம் - பா.ராகவன்
புவியிலோரிடம் - பா.ராகவன்
புவியிலோரிடம் குறித்து ச. திருமலை [நன்றி: பாலஹனுமான்]
ReplyDeletehttp://www.writerpara.com/paper/?page_id=15