A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

21 May 2013

Mortality - Christopher Hitchens

Mortality என்பதை எளிமையாக சாக்காடு என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், மொழி என்பது பண்பாட்டின் சுருக்கெழுத்து என்பதால் ஹிட்சென்ஸ் போன்ற ஒரு வாழ்நாள் நாத்திகர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது அதற்கு அவ்வளவு எளிய பொருள் பொருத்தமாக இருக்காது.

மேலை இலக்கியத்தை வாசிக்கும் எவரும் கிரேக்க துன்பியல் நாடகங்கள் மற்றும் லத்தின் கவிதைகளில் தங்கள் கல்வியைத் துவங்குவது நல்லது. அந்த அளவுக்கு அவர்களது மொழியும் பண்பாடும் கிரேக்க, லத்தின் இலக்கியங்களில் தோய்ந்திருக்கின்றன.

Aeschylus, Sophocles, Euripides என்று துவங்கி பண்டை கிரேக்க நாடகங்களை வாசித்த எவருக்கும் mortality என்பதில் உள்ள mortals என்ற சொல் மனிதர்களைக் குறிக்கிறது என்பதும், இறவாமையை நாடுவது என்பது இறைத்தன்மையை நாடுவதாகும் என்பதும் சொல்லாமலே விளங்கும். Memento Mori - Remember, you too are mortal, மிகவும் புகழ் பெற்ற ஒரு லச்சினை (ஹிட்சன்ஸ் இதை மேற்கோள் காட்டுகிறார் : "Remember, you too are a mortal" - hit me at the top of my form and just as things were beginning to plateau. My two assets my pen and my voice - and it had to be the esophagus").



ஆனால் திருக்குறளில் பள்ளிக் காலத்திலேயே,
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழி்ப்பது போலும் பிறப்பு
என்று வாசித்துப் பழகிய நமக்கு சாவு அச்சம் தருவதாக இருந்தாலும் சாக்காட்டை மனிதத்தன்மை என்று வரையறுத்துக் கூறத் தோன்றாது. மனிதனாக இருப்பது என்பது சாக்காட்டுக்கு இரையாக இருப்பது என்ற உணர்வு Mortality என்று சொல்லும்போது இயல்பாகவே வந்துவிடுகிறது.  விட்டில்தன்மை என்ற சொல்லை சாக்காட்டுக்குப் பயன்படுத்தினால் இதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். மனிதர்கள் சாவதற்கு விதிக்கப்பட்டவர்கள் என்ற கவலை பெரும்பாலும் நமக்கு கிடையாது. இதைச் சொல்லும்போதே, தமிழின் நவீனத்துவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான பாரதி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
என்ற பாரதியின் பாடலில் இருப்பது முழுக்க முழுக்கவே கிரேக்க துன்பியல் நாடகங்களின் வேரில் கிளைத்த வெறும் மானிடனாய் இருந்து சாவது - mortality - குறித்த அச்சம்.

பொதுவாக இப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டில்பூச்சி வாழ்க்கை என்று சொல்வது வழக்கம். ஆனால் பாரதி 'மனிதரைப் போலே', என்று சொல்வது தனிச் சிறப்பு. பாரதியின் அமரத்துவம் குறித்த கருத்துகளிலும் கிரேக்கப் பொருளிலான சாக்காடு குறித்த கவலையை நம்மால் பார்க்க முடிகிறது. இது குறித்து விரிவாகப் பேச இடமிருக்கிறது; என்றாலும், வழக்கம் போல பாரதி இங்கும் ஒரு தனியன் என்று சொல்லி, நாம் ஹிட்சன்ஸின் சாக்காட்டைப் பார்ப்போம்.

ஒரு நாத்திகராகத் தன்னை நிறுவிக் கொண்டவர் ஹிட்சன்ஸ். ஏதோ அருவ தத்துவ விவாதங்களில் இறங்கியிருந்தால் அவரை யாரும் லட்சியம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், அன்னை தெரஸா துவங்கி கிறித்துவத்தின் புனிதர்களைக் கொஞ்சமும் மரியாதையில்லாமல் தாக்கியவர் அவர். தனக்கு ஈஸோபாகஸில் புற்றுநோய் வந்திருக்கிறது என்று தெரிந்ததும் அவர் இப்படி கவலைப்படுகிறார் : "Will I not really live ... To read - if not indeed write - the obituaries of elderly villains like Henry Kissinger and Joseph Ratzinger?"

பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லாத பகுதியில் புற்றுநோய் உள்ளது என்ற செய்தியை அறிந்தபின் வானிட்டி ஃபேர் என்ற இதழில் ஹிட்சன்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்தச் சிறிய புத்தகம் -106 பக்கங்கள். இதற்கான ஒரு அருமையான விமரிசனத்தை The Dublin Review of Booksல் படித்தேன் - The Big D. அதில் Seamus O’Mahony சில முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்கிறார். ஒரு மருத்துவராக இருப்பதால், அவர் ஹிட்சன்ஸை பாதித்த புற்றுநோய் அவ்வளவு வளர்ந்த நிலையில் துயரருக்கு சில மாத வாழ்வையே விட்டு வைக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். இதனால், அவரால் ஹிட்சன்ஸ் இப்புத்தகத்தில் நோயிலிருந்து மீள்வது குறித்து பகிர்ந்து கொள்ளும் பசுமையான எதிர்பார்ப்புகள் மூட நம்பிக்கைகளுக்கு ஒப்பானவை என்பதை விளக்கமாக எழுத முடிகிறது.

இறை நம்பிக்கையை மறுப்பது என்பது எல்லா நம்பிக்கைகளையும் மறுப்பதாகாதாது. ஆனால், நாத்திகம் மூடநம்பிக்கைக்கு எதிரானது என்பதால், ஹிட்சன்ஸ் போன்ற ஒருவர் அனைத்து சாத்தியங்களுக்கும் எதிராக அறிவியல் மற்றும் நவீன மருத்துவத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது அதுவும் மூட நம்பிக்கையின் ஒரு ஜாதியாகவே இருக்கிறது என்கிறார் விமரிசகர். அதை ஹிட்சன்ஸ் அறிந்திருக்கவில்லை என்பதை அவர் சொல்லிக் காட்டுகிறார்-
I hesitate to use the word delusional, as he admitted that he would be very lucky to survive, but he clearly steadfastly hoped, right to the end, that his particular case of advanced cancer might lie on the sparsely populated right side of the bell-shaped curve of outcome statistics. He famously mocked religious folk for their faith in supernatural entities and survival of the soul after bodily death, yet the views expressed in Mortality are just as wishful and magical.
நயமாக இருப்பதால் இந்தச் சொற்களின் கூர்முனை மழுங்கிவிடவில்லை.

ஹிட்சன்ஸ் சாகக் கிடக்கும்போதும் அவருக்கு தன் நாத்திகமே முக்கியமாக இருக்கிறது. அவரது தொண்டைப் பகுதி புற்றுநோய் ஒரு தெய்வ தண்டனை, அவர் இனி காலம் முழுவதும் நரகத்தில் இதைவிடக் கடுமையான சித்ரவதை அனுபவிக்கப் போகிறார் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடிப்படைவாத கிறித்துவர்களை ஒரு பக்கம் தாக்கினாலும், அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் கிறித்தவர்கள் குறித்தும் கவலைப்படுகிறார் ஹிட்சன்ஸ்: What if I pulled through and the pious faction contentedly claimed that their prayers had been answered? That would somehow be irritating"

இது ஒரு விபரீதமான கவலையாக இருக்கிறது. மரணப்படுக்கையில் இருக்கும்போதும் தான் பிழைத்தால் அது ஆத்திகர்களின் வெற்றியாக அமைந்து விடக்கூடாது என்ற கவலை! இதுவாவது பரவாயில்லை. அமெரிக்க மருத்துவமனைகளின் அறைகள் ஒவ்வொன்றிலும் கட்டிலில் படுத்திருக்கும் நோயாளியின் கண்ணில் படும்வகையில் சிலுவை ஒன்று சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்கும்போது ஹிட்சன்ஸின் நினைவுகள் ஆத்திகர்களால் உயிருடன் எரியூட்டப்பட்டவர்களிடம் செல்கின்றன:
"In some of the fervent paintings of the grand autos-da-fe, or "acts of faith," not I think excluding some of the burnings alive captured by Goya on the Plaza Mayor, we see the flame and the smoke arising from the vicinity of the victim, and then the cross itself held grimly aloft before his closing eyes. 
கடைசிவரை ஹிட்சன்ஸ் ஆத்திகர்களை மன்னிப்பதில்லை.

Mortality உண்மையில் மிக முக்கியமான ஒரு புத்தகம். மரணத்தின் நிழலில் வலியின் தொடர் தாக்குதலில் உடலின் அழிவையும் அகத்தின் நசிவையும் மிகப் பிரமாதமாக, அபூர்வமான மொழியில், கூர்மையான நுண்ணுணர்வோடு எழுதப்பட்ட புத்தகம். ஆனால் இது போன்ற ஒரு சிறு அறிமுகத்தில் ஏதோ ஒரு திரியைத்தான் எடுத்துப் பேச முடியும். மரணத்தை ஒரு நாத்திகராக அவர் அணுகுவதை இந்தப் பதிவில் தொட்டுக் காட்டியிருக்கிறேன், ஆனால் இதுவும்கூட புத்தகத்தின் மையமல்ல.

"Always prided myself on my reasoning faculty and my stoic materialism. I don't have a body, I am a body" என்று எழுதுகிறார் ஹிட்சன்ஸ். "Whatever view one takes of the outcome being affected by morale, it seems certain that the realm of illusion must be escaped before anything else," என்றும். ஹிட்சன்ஸ் தன் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார் என்பதில் இங்கு சந்தேகமில்லை. ஆனால், அனைவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீரமும் நிதர்சனமும் வாய்ப்பதில்லை. அவரது மனைவி, முடிவுரையில் எழுதுவது இது:
"Piles of his papers and notes lie on surfaces all around the apartment, some of which were taken from his suitcase that I brought back from Houston. At any time I can peruse our library or his notes and rediscover and recover him".
இல்லாமைக்கும் ஒரு இருப்புண்டு, அதை அன்பால் அறிகிறோம், அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. கடவுள் இல்லை என்று சொல்வது எதையும் இல்லாமல் செய்து விடுவதில்லை. மனிதனே எல்லாம் என்று சொல்வதால் அவனது மறைவோடு அனைத்தும் அழிந்துவிடுவதில்லை.

வாழ்வோடு சாவும், இருப்போடு இழப்பும் மனிதனுக்கே விதிக்கப்பட்டிருக்கின்றன.  அறிவால் மட்டுமல்ல, அன்பின் தர்க்கத்தால் அறிவதும் மானுட நியாயம். மரணம் மட்டுமல்ல, நினைவும் மானுட விதி. எல்லாம் போன பின்னும் நினைவுகளிலும் நினைவுச் சின்னங்களிலும் தொடர்வது மானுட வாழ்க்கை. நினைவைப் போற்றுவதற்கும் நம்பிக்கைகளை வழிபடுவதற்கும் நூலிழைதான் வேறுபாடு - எத்தனை பேசினாலும், ஏதோ ஒரு வடிவில் முன்னது பின்னதுக்கு இடம் கொடுத்து விடுகிறது.

Mortality,
Christopher Hitchens (2012),
Atlantic Books,
Amazon, Flipkart



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...