சிறப்பு பதிவர் : வானதி நடனம்
நம் பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, பழக்கங்களை சேமித்துவைப்பதற்காக மூளையில் தனியாக இடமேதும் இருக்கிறதா, தேவையில்லாத பழக்கங்களை மாற்றுவது எப்படி, 30 நொடிகளுக்கும் மேல் எதையுமே ஞாபகம் வைத்திருக்க முடியாத ஒருவருக்கு பழக்கங்கள் எந்தவிதத்தில் உதவுகின்றன என்பதையெல்லாம் விரிவாகப் பேசுகிறது இப்புத்தகம். தனிமனித பழக்கங்கள், நிறுவன பழக்கங்கள் மற்றும் சமூக பழக்கங்கள் என புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து பழக்கங்களின் அ முதல் ஃ வரை அலசுகிறார் ஆசிரியர்.
காய்ச்சலோடு உடலினுள் வந்த வைரஸ் ஒன்று, ஒருவரின் மூளையின் ஒரு பகுதியை சாப்பிட்டுவிட, அதனால் அவரால் எதையுமே 30 நொடிகளுக்கு மேல் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. இந்த நிகழ்வுக்குப்பின், அவர் மனைவி தினமும் வீட்டைச் சுற்றி அவரை வாக்கிங் கூட்டிச் சென்றிருக்கிறார். வழிமாறிச் சென்றுவிட்டால் வீட்டின் முகவரிகூட சொல்லத் தெரியாத அவர், ஒரு நாள் மனைவியின் துணையில்லாமல் வாக்கிங் சென்று கரெக்ட்டாக திரும்பியிருக்கிறார். மருத்துவர்களின் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது இது - மூளையில் ஞாபகங்கள் சேமித்து வைக்கப்படுவது ஒரு தனி இடத்தில், பழக்கங்கள் சேமித்து வைக்கப்படுவது வேறொரு தனி இடத்தில். அதனால்தான் தன் வீட்டில் கிச்சன் எங்கே இருக்கிறது என்று சொல்லத் தெரியாத அவர், கரெக்ட்டாக கிச்சனுக்கு வந்து சாப்பிட்டுச் செல்வதும், சரியான பாதையில் வாக்கிங் சென்று திரும்பி வந்ததும்.
பழக்கங்கள் இப்படி தனியிடத்தில் சேமிக்கப்படுவதற்கான காரணம், மூளையின் வேலைப்பளுவைக் குறைக்கவே. காலில் எந்த செருப்பை முதலில் அணிகின்றோம் என்பதில் துவங்கி, எந்த ரூட்டில் ஆபீஸ் செல்கிறோம் என்பதுவரை, நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் பழக்கங்களாக சேமிக்கப்படுகின்றன.
மூன்று ஸ்டெப்களில் ஒரு பழக்கம் உருவாவது எப்படி?
- ஒரு செயலைச் செய்யத் தூண்டுதலாய் இருப்பது எது?
- குறிப்பிட்ட அந்தச் செயல்
- அதனால் நமக்குக் கிடைக்கும் ரிவார்ட்
உதாரணத்திற்கு, தினமும் காலை நேரத்தை ஃபில்டர் காஃபியுடன் மட்டுமே துவங்கும் ஃபில்டர் காஃபி பிரியர்களை எடுத்துக் கொள்வோம்.
- காஃபி அருந்தச் சொல்லி தூண்டுவது எது? கிடைக்கும் புத்துணர்ச்சி
- காஃபி கிடைத்துவிடுகிறது.
- புத்துணர்ச்சிதான் ரிவார்ட்
ஒரு வேளை இந்தப்பழக்கத்தை மாற்ற விரும்பினால், அந்தப் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய வேறொரு செயலை “2” ஸ்டெப்பில் செய்ய வேண்டும். ஒரு சின்ன நடைபயிற்சி, க்ரீன் டீ என பிடித்தமான ஒன்று. ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு புதுப்பழக்கத்தை மறக்காமல் கடைபிடிக்க ஒரு ரிமைண்டர் தேவைப்படும். சில வாரங்களில் மூளை, இப்பழக்கத்தை தன் மெமரியில் ஏற்றியவுடன் அந்த ரிமைண்டரைத் தானாக மறந்துவிடுவோம்.
தனி மனிதர்கள் மட்டுமல்லாமல், நிறுவனங்கள் (ஸ்டார்பக்ஸ் துவங்கி மெக்டொனால்ட்ஸ் வரை), ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் எப்படி உருவாக்குகின்றன, நெருக்கடியான நேரங்களிலோ, ஒரு கோபமான கஸ்டமரை சந்திக்கும்போதோ ஊழியர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் என்னென்ன, என்பது பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் ஆசிரியர்.
சமூகத்தில் நாம் கடைபிடிக்கும் பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, அவற்றை எப்படி எதிர் கொள்கிறோம் என்பது மூன்றாவது பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள ஒருவர் தன்னையறியாமல் மனைவியைக் கொலை செய்துவிட, அதற்கு காரணம் அவரில்லை என விடுதலை செய்கிறார் நீதிபதி.
சூதாட்டத்தைப் பழக்கமாகக் கொண்ட பெண் ஒருவர் தன் மொத்த சொத்தையும் கேசினோ ஒன்றில் சூதாடித் தொலைத்துவிட்டு, கடனும் சொல்கிறார். பணம் திரும்பி வராததால் கேசினோ அவர் மேல் வழக்கு தொடுக்கிறது. "கேசினோவிற்குள் நுழைந்தவுடன் நான் என் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறேன், என் பழக்கங்கள் என்னை மொத்தமாக ஆட்கொண்டு விடுகின்றன, தூக்கத்தில் நடப்பது போலதான் இதுவும்," என அவர் வாதிட, தவறு உன்மேல்தான் என தீர்ப்பளிக்கிறார் நீதிபதி.
காரணம், தூக்கத்தில் நடப்பது மாற்றிக் கொள்ள முடியாத ஒரு வியாதி. ஆனால் கேசினோவில் சூதாட்டத்தில் பணத்தைத் தொலைப்பதென்பது நம்மால் மாற்றிக் கொள்ள முடிந்த ஒரு பழக்கம்.
கடைசியாக, ஏதேனும் பழக்கத்தை நாம் மாற்ற விரும்பினால், என்ன/ எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் ஒரு சிறு உதாரணத்துடன் சொல்லி முடித்திருக்கிறார்.
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் புத்தகமிது. கஷ்டமான அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
The Power Of Habit
Author: Charles Duhigg
To Buy: Flipkart

மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் எது கிடைத்தாலும் கொரிக்கும் பழக்கமிருப்பவர்கள் அதை மாற்ற விரும்பினால், முதலில் எதனால் ஸ்னாக்ஸ் தேடுகிறோமென்று கண்டுபிடிக்க வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது?? ஸ்னாக்ஸ் சாப்பிட்டு முடித்தவுடன் என்ன தோன்றுகிறது நமக்கு என்பதையும், எந்த நேரத்தில், என்ன காரணத்திற்காக சாப்பிடுகிறோம் என்பதையும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நோட்டில் குறித்துவரவும். ஒரு வாரத்திற்குப்பின் கவனித்தால், நொறுக்குத்தீனி தேடுவதற்கான காரணம் புலப்படும். பசியாக இருந்தால் ரீப்ளேஸ் நொறுக்குத்தீனி வித் பழங்கள். தூக்கம் காரணமாக இருந்தால், ஒரு சின்ன வாக் போய்ட்டு வரலாம். போரடிப்பது/தனிமை காரணமாக இருந்தால் பக்கத்து சீட்டில் இருப்பவரிடமோ ட்விட்டரிலோ 10 நிமிஷம் மொக்கைபோடலாம். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் அலாரம் வைத்து நொறுக்குத்தீனி பக்கம் போகாமலிருந்தால் சில வாரங்களில் தானாக மாறிவிடும் அப்பழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் புத்தகமிது. கஷ்டமான அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
The Power Of Habit
Author: Charles Duhigg
To Buy: Flipkart
No comments:
Post a Comment