www.jnd.com |
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் ஒரு வடிவமைப்புக் கதை இருக்கிறது. ஒரு பொருளை ‘வடிவமைப்பது’ என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், சாதாரண விஷயங்களை, விட்டுவிட்டு ஒரு நல்ல வடிவமைப்பைப் பெற முடியாது. வடிவமைப்பு என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதைக் காட்டிலும், பழகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும். பழகிக் கொள்ள கடினமாக பொருட்கள், சந்தையில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தப் படத்தில் மூன்று ஸ்விட்சுகள் இருக்கின்றன. ஒரு மின்விசிறியும், இரண்டு விளக்குகளும் உள்ளன. இப்போது, மின்விசிறியை நீங்கள் இயக்க வேண்டும். எந்த ஸ்விட்சைப் போடுவீர்கள்? இயற்கையாக நாம் முதலில் 1ம் எண் ஸ்விட்சைத்தான் போடுவோம். இரண்டாம் அறைக்கான விளக்கைப் போட மூன்றாம் எண் ஸ்விட்சைத்தான் போடுவோம். இயற்க்கையான mapping படி இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், நான் இப்போது குடியிருக்கும் வீட்டில், 1ம் எண் ஸ்விட்ச் – இரண்டாம் அறைக்கான விளக்குக்கும், 3ம் எண் ஸ்விட்ச் மின்விசிறிக்கும் என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்.
ஊரில் எங்கள் வீட்டில், வேலை செய்த எலக்ட்ரீஷியன் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் ஸ்விட்ச் போர்டில் முதல் ஸ்விட்ச் டியூப் லைட்டுக்கு, இரண்டாவது ஸ்விட்ச் மின்விசிறிக்கு, மூன்றாவது ஸ்விட்ச் அந்த அறையில் இருக்கும் சிறிய மின்விளக்குக்கு, நான்காவது ஸ்விட்ச் சாக்கெட்டுக்கு என்று இணைப்பு கொடுத்திருப்பார். நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் எளிது.
இன்னொரு உதாரணம் எங்கள் வண்டி. அதில், இருக்கைக்குக் கீழே பொருட்களை வைத்துக்கொள்ள இடம் உண்டு. இருக்கையை உயர்த்தி பொருட்களை வைத்துவிட்டு, பின் இருக்கையை ஒரு அழுத்து அழுத்தினால் ‘டிக்’ (check sound) என்ற மெல்லிய சத்தம் கேட்கும். சத்தம் கேட்டால் இருக்கை சரியான இடத்தில் பொருந்திவிட்டது என்று பொருள். இது நல்ல வடிவமைப்பு. ஆனால், அதே வண்டியில் எரிபொருள் கொள்கலனுக்கான மூடியில் இது போன்ற எந்தவொரு சப்தமும் வராது. நாம் சரியாகத்தான் மூடியிருக்கிறோமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இது மோசமான வடிவமைப்பு. ஒவ்வொரு முறையும் இரண்டொரு முறை, நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
டொனால்ட் நார்மென் இந்த விஷயங்களில் முன்னோடி. இந்தப் பேராசிரியர், மோசமான வடிவமைப்புகளை சாடுபவர். இவற்றைப் பற்றி புத்தகங்களும் கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார். இந்த புத்தகம் முதலில் The Psychology of Everyday Things என்ற தலைப்பில் தான் வெளியிடப்பட்டது. பின்னர், விற்பனைக் காரணங்களுக்காக The Design of Everyday Things என்று மாற்றிவிட்டார்கள். ஆனால், The Psychology of Everyday Things தான் சரியோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவர் பேசும் விஷயங்கள் அப்படி.
வடிவமைப்பு ஏன் பழகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும்? நமக்கு இரண்டுவிதமான மனம் உண்டு. ஒன்று பிரக்ஞைப்பூர்வ மனம், மற்றொன்று ஆழ்மனம். நாம் திரும்பத் திரும்பச் செய்யும் காரியத்துக்கெல்லாம் பிரக்ஞைப்பூர்வ மனம் அலட்டிக் கொள்ளாது; அதையெல்லாம் ஆழ்மனம் பார்த்துக் கொள்ளும். ஒரு உதாரணம், நாம் போனில் பேசிக் கொண்டே, கதைவைத் திறக்க முடியும். போனில் பேசிக் கொண்டே கார் ஓட்ட முடியும். எதிர்பாராத வேளையில் இடையில் எருமைமாடு வந்துவிட்டால் மட்டும் சிக்கல். இந்த ஆழ்மனம் கருவிகளை எளிதாக இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது கற்றுக் கொள்ள எளிதாக வடிவமைக்கப்பட வேண்டும். மேலே சொன்ன ஸ்விட்சுகள் போல் இஷ்டத்துக்கு இணைப்பு கொடுத்தால் ஆழ்மனம் கற்றுக் கொள்ள சிரமப்படும். கருவிகளுக்கு மட்டுமல்ல, இணையதளங்கள், மொபைல் அப்ளிகேஷன்கள் என்று அகலமும் இதை மனதில் கொண்டு தான் வடிவமைக்கப்பட வேண்டும். ஒரு சமீபத்திய உதாரணம்…
கூகுள் ரீடர் பயன்படுத்துபவர்கள், ஒரு இடுகையைப் படித்து முடிக்கும் போது, அதைப் மீண்டும் படிக்கவேண்டும் என்று நினைத்தால், இடுகையின் இறுதியில் இருக்கும் Keep Unreadஐ க்ளிக் செய்தால் போதும். இப்போது கூகுள் ரீடருக்கு மாற்றாக வந்திருக்கும் feedlyயில் இதே போல் Keep Unread செய்ய வேண்டுமென்றால், (பதிவை முழுவதும் படித்துவிட்டு), திரும்ப மேல் வரை scroll செய்து, தலைப்புக்கு கீழே இருக்கும் Keep Unreadஐ க்ளிக் செய்ய வேண்டும். இது சின்ன விஷயம் தான், ஆனால் தினம் தினம் அதே எரிச்சல், feedlyஐ விட்டு வாசகர்கள் ஓடிவிடக்கூடும். Feedlyயில் Logout கூட வழக்கத்துக்கு மாறாக இடதுபுறம் இருக்கும்.
நம்மில் பலர், ஒரு கருவியை பயன்படுத்தும் போது தவறு செய்துவிட்டால், நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைப்போம். ஆனால், நார்மன், மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் மோசமான வடிவமைப்பே என்கிறார். நல்ல வடிவமைப்பைப் பெற நார்மன் சொல்லும்
ஏழு விஷயங்கள்,
1. Use both the knowledge in the world and the knowledge in the head
மனிதர்களுக்கு ஏற்கெனவே சில விஷயங்கள் தெரியும்,
2. Simplify the structure of tasks.
3. Make things visible.
4. Get the mappings right.
மேலே பார்த்த ஸ்விட்ச் தான் இதற்கு உதாரணம்.
5. Exploit the power of constraints
இதற்கு உதாரணம் floppy disk. டிரைவரில் இடும் போது இந்த டிஸ்கை ஒரே வழியில் மட்டுமே உள்ளிட முடியும். வேறுமாதிரி இட்டால் உள்ளே நுழையாது.
6. Design for Error
மனிதர்கள் தவறு செய்யாமல் இருக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் தவறு செய்யும் போது, அதைச் சரி செய்து கொள்ளும் படி வடிவமைப்பு இருக்க வேண்டும். கிட்டதட்ட Undo.
7. When all else fails, Standardise.
qwerty keyboard, ஒரே மாதிரியான கடிகாரங்கள் போன்றவை.
புத்தகத்தை முடிக்கும் போது, நார்மன் இப்படி முடிக்கிறார்...
5. Exploit the power of constraints
இதற்கு உதாரணம் floppy disk. டிரைவரில் இடும் போது இந்த டிஸ்கை ஒரே வழியில் மட்டுமே உள்ளிட முடியும். வேறுமாதிரி இட்டால் உள்ளே நுழையாது.
6. Design for Error
மனிதர்கள் தவறு செய்யாமல் இருக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் தவறு செய்யும் போது, அதைச் சரி செய்து கொள்ளும் படி வடிவமைப்பு இருக்க வேண்டும். கிட்டதட்ட Undo.
7. When all else fails, Standardise.
qwerty keyboard, ஒரே மாதிரியான கடிகாரங்கள் போன்றவை.
புத்தகத்தை முடிக்கும் போது, நார்மன் இப்படி முடிக்கிறார்...
...மோசமான வடிவமைப்பை புறக்கணியுங்கள். நன்கு வடிவமைக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம் ஆதரியுங்கள் - அவை உங்களுக்கு அதிகம் செலவு வைத்தாலும் கூட வாங்குங்கள். உங்களுடைய ஆற்றாமையை அந்தப் பொருட்களை விற்கும் கடைக்காரருக்குத் தெரிவியுங்கள்; வாடிக்கையார்களின் பேச்சை தயாரிப்பார்கள் நிச்சயம் கேட்பார்கள்.
....உங்களுக்கு உதவும் சிறிய விஷயங்களுக்கு பெருமைப்படுங்கள்; அவற்றை நல்யோசனையுடன் வடிவமைத்தவரை கனிவோடு நினைத்துப்பாருங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு அம்சத்தைச் சேர்க்க, வடிவமைப்பாளர் சண்டை கூடப் போட்டிருக்கக் கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நல்ல வடிவமைப்பைக் கொடுத்தவருக்கு மலர்களை அனுப்புங்கள்; மோசமான வடிவமைப்புக்கு குப்பைகளை (weeds) அனுப்புங்கள்.
00000
00000
The Design of Everyday Things | Donald Norman | 242 Pages | Rs. 731 | இணையத்தில் வாங்க
அறிமுகத்திற்கு நன்றி - ஆர்வத்தைத் தூண்டுகிறது, புத்தகம், அதைப்பற்றிய இந்தக் கட்டுரை.
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
நன்றி சிவா!
Delete