Norwegian Wood
Haruki Murakami
Novel
Photo Courtesy/To Buy: Flipkart
ஆம்னிபஸ்
குழும விவாதம் ஒன்றில் நடராஜன் ஹருகி முராகமி மற்றும் சிலரைப் பற்றி
குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய நூலக வரிசை
அட்டையில் குறித்து வைத்திருந்தேன்.
இதற்கு
முன் வேறு சில புத்தகங்கள் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தபோதும்
இந்த புத்தகம்தான் வந்தது. சரி, வந்ததுதான் வந்தது, இதையே படிப்போம், என்று
படிக்க ஆரம்பித்தேன்.
நாவலின்
அட்டையில் ‘Murakami must already rank among the world’s greatest living
novelists’- Guardian, என்றொரு வாசகம். இந்த புத்தகம் ஜே ரூபின் என்பவரால்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது சிறப்பான மொழிபெயர்ப்பா என்று என்னால்
சொல்ல முடியாது, ஜப்பானிய, ஆங்கில மொழி தெரிந்த + இந்த நாவலை இரண்டு
மொழிகளிலும் வாசித்தவர்களால்தான் சொல்ல முடியும், சரியா ?
இந்த
நாவல் படிக்க ஆரம்பிக்கும்போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்தான்
படிக்க ஆரம்பித்தேன். ஹருகி முரகாமி பெயர்கூட கேள்விப்பட்டிராத பெயர். ஒரு
சில மாதங்கள் ஜப்பானீஸ் மொழி கற்றுக் கொண்டதுதான் எனக்கும் ஜப்பானுக்கும்
உள்ள தொடர்பு (அதுவும் அரைகுறைதான்).
இது
ஒரு முக்கோண காதல் கதை. வாதானபே (Toru Watanabe), நா-ஒ-கா (Naoka), மிதோரி
(Midori). இங்கே கதையைக் கொஞ்சம் எழுதினால் போதும் என்று நினைக்கிறேன்.
அதனூடே கதையைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
கதை
நடக்கும் காலம் 1969-1970 ஆம் ஆண்டு. 1969-70 ஆண்டுகளில் ஜப்பானைக்
கலக்கிய மாணவர் போராட்டங்கள், ஆங்கில பாப் பாடல்கள் நாவலின் பின்னணி.
இதனூடே இந்த கதைமாந்தர்களின் மனக்குழப்பம், அவர்களின் Sexuality
ஆகியவற்றைப் பேசுகிறது. மரணம் என்பது இந்நாவலின் இன்னொரு முக்கியமான திரி.
Naoka மற்றும் வாதானபே நண்பன் கிசுகியின் மரணம் இருவரையும் வெகுவாக,
அதேசமயம் இருவேறு விதமாக பாதிக்கிறது. வதானபேயை அது வாழ்க்கையில் பற்று
இழக்கச் செய்து பெண்களையும், மதுவையும் நாடச் செய்த அதே வேளையில், அது
naokaவின் மனநலனையும் பாதிக்கிறது. noaka மனநலம் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சில மாதங்கள் கழித்து தற்கொலை
செய்து கொள்கிறார்.
மிதோரி
என்ற பெண் இந்த சமயத்தில் வாதானபே வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். இவர்
வாதானபே உடன் படிப்பவர். இவரின் குணநலன்கள் அப்படியே Naokaவுக்கு எதிரானவை.
இவர் ரொம்ப குதூகலமானவர்.
இந்தக்
கதை மாந்தரை தவிர நகசவா(Nagasawa)- ஹட்சுமி(Hatsumi) என்று இருவேறு துருவ
கதாபாத்திரங்கள் அறிமுகபடுத்துகிறார். இந்த நாவலில் செக்ஸ் என்பது
இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. நகசவா
பெண்களைத் தேடி அலையும் மிக புத்திசாலியான கதாபாத்திரம். ஹட்சுமி அவனுடைய
பெண் நண்பர்((Girl Friend). Hatsumiயை தன பெண் நண்பர் என்று சொல்லும் அதே
வேளையில், அவளைத் திருமணம் செய்யும் எண்ணம் சிறிது கூட இல்லாதவர். இவர்
வாதானபே படிக்கும் புத்தகம் பார்த்து நண்பர் ஆகிறார். வாதானபேக்கு நகசவா
செய்யும் சில காரியங்கள் பிடிக்காமல் போனாலும், அவரை நோக்கி
இழுக்கப்படுகிறார். கடைசியில் ஹட்சுமியும் தற்கொலை செய்துகொண்டு இறந்து
போகிறார்.
Naoka
மேல் தீவிர காதல் கொண்டு இருக்கும் வாதானபே, அவள் குணமான பின் அவளை
திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அவளின் மனநலம் சில சமயம் மேலும்
சீர்கேடு அடைகிறது, வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த
சமயத்தில் மிதோரி தன்னுடைய காதலை வாதானபேயிடம் தெரிவிக்கிறார். வாதானபே
அதனை அங்கீகரிக்கிறார். திடீரென naokaயின் மரணம் வாதானபேயை நிலைகுலையச்
செய்கிறது, யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சுற்றுகிறார். கடைசியில்
naokaவின் மருத்துவமனை நண்பர் இஷிடா அறிவரை பேரில் மிதோரிக்கு தொலைப்பேசி
செய்வதுடன் நாவல் முடிகிறது.
நாவலின்
(மொழிபெயர்க்கப்பட்ட) சிறப்பு, எளிமையான மொழிநடை, தேவைக்கு அதிகமாக ஒரு
வார்த்தை கிடையாது. தொலைந்து போன இருபது வயது adolescent வாழ்க்கையை
உன்னிப்பாக பதிவு செய்து இருக்கிறார். நாவல் முழுவதும் வாதானபே சொல்வது போல
வருகிறது, மொத்த நாவலும் வாதானபே ஒரு விமானத்திலிருந்து இறங்கும்போதும்,
Beatles குழுவின் “Norwegian wood” பாடலைக் கேட்கும்போதும் மனம் அழுத்தம்
ஏற்பட்டு நினைத்துப் பார்ப்பதாக வருகிறது.
இந்த
பாடல் Naokaக்கு மிக பிடித்த பாடல். அதுவே நாவலின் தலைப்பு. முன்னமே சொன்ன
மாதிரி ரொம்ப நிறைய செக்ஸ் சீன்கள், நிறைய சோகம், அதை நாமும் உணர்கிற
மாதிரி எழுத்து. நாவல் முழுவதும் மிகச் சில சம்பவங்களால் ஆனது என்று
தோன்றினாலும், 1969-70 ஜப்பான் எப்படி இருந்தது என்று கண் முன்
நிறுத்துகிறார்.
No comments:
Post a Comment