சிறப்புப் பதிவர் - R.கோபி
பூவிடைப்படுதல் என்ற தலைப்பில் 2011 டிசம்பர் மாதக் கடைசியில் ஜெமோ சென்னையில் குறுந்தொகை குறித்து ஒரு உரை_நிகழ்த்தினார். அதைக்கேட்கும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அதுபற்றியஒரு முன்னோட்டத்தை அந்த வருடத்தின் டிசம்பர் மாத மத்தியில்அறிந்துகொள்ள முடிந்தது.
அது ஒரு மறக்க முடியாத நாள். எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு அந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்த மாலைப்பொழுது. விழா இனிதே நிறைவுற்றதும் இரவு உணவிற்குப் பின் ஜமா கூடியது. ஜெமோ தங்கியிருந்த அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
நள்ளிரவிற்கு மேல் காலாறக் கோவை சந்திப்பைச் சுற்றியிருந்த தெருக்களில் சுற்றியலைந்தோம். கவிதைகள் பற்றிப் பேச்சு திரும்பியபோது இந்த உரை குறித்துச் சில விஷயங்களை ஜெமோ பகிர்ந்துகொண்டார்.' நீர்முள்ளி' பற்றி அவர் சொன்னவை இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
எப்போதேனும் இந்த உரை புத்தக வடிவில் கிடைத்தால் வாங்கிவிடுவது என்று அப்போதே முடிவு செய்திருந்தேன். 'சொல்முகம்' என்ற தலைப்பில் நற்றிணை ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. வசீகரமான தலைப்பு. ஜெமோ ஆற்றிய சில உரைகளின் எழுத்து வடிவம். இந்த ஏப்ரல் மாதம் வாங்கினேன்.நேற்றுப் படித்து முடித்தேன். உரைகளின் எழுத்து வடிவத்தைப் புத்தகத்தில் படிப்பது ஒரு அலாதி இன்பம்.
மொத்தம் 19 உரைகள். நான்கு தலைப்புகளில் – ஆளுமைகள், ஆன்மிகம், இலக்கியம்,
சமூகம். மொத்தமாக இவற்றைப் படிக்கும்போது ஜெமோ என்கிற ஆளுமையின் ஒருசில பரிமாணங்களாவது பிடிபடாமல் போகாது. இதுவரை ஜெமோவைப் படிக்காதவர்களுக்கு இந்த நூலே கூட ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம்.
‘கீதையும் யோகமும்’
உரையில் கீதையின் அத்தியாயங்களுக்கு இடையேயான முரண் குறித்துச் சில புதிய விஷயங்களை அறியமுடிந்தது. ‘கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாயத்தின் மறுப்புதான். முந்தைய அத்தியாயத்தின் விவாதத்தின் இயல்பான நீட்சியும் கூட’ என்கிறார். இதை விஷ்ணுபுரம் நாவலில் ‘ஒவ்வொரு கிளையும் வேரை மறுத்தே வளர்கிறது. அதே நேரம் வேரைச் சார்ந்துமிருக்கிறது’
என்ற கூற்றோடு ஒப்பு நோக்கலாம்.
பஞ்சாபில் நடந்த கீதை மாநாட்டில் நடராஜ குருக்கள் பேசியதாக வரும் சம்பவங்கள் சுவையானவை.
‘நடராஜகுரு பஞ்சாபில் ஒரு கீதைமாநாட்டுக்குச் செல்ல நேர்கிறது . அங்கே ஏற்கனவே பேசியவர்கள் அர்ஜுனன் அறிவிழந்து தடுமாறும்போது கிருஷ்ணன் மெய்ஞானத்தைச் சொன்னார் என்று பேசினார்கள். தான் பேச எழுந்ததுமே நடராஜகுரு கேட்டார் ‘என் சுயநலத்துக்காக மூத்த பெரியவர்களையும் சகோதரர்களையும் கொல்ல மாட்டேன் என ஒருவன் சொன்னால் அது அறிவின்மையா என்ன?’ அங்கே உள்ளவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.’
‘குருவே விளக்கினார். கீதையின் தொடக்கத்தில் அர்ஜ்ஜுனன் சொல்லும் அந்த துயரம் மிக்க சொற்கள் அறியாமையைக் காட்டுவன அல்ல. அது ஒரு மாபெரும் விவேகம். சாதாரண மனிதனுக்கு அது வராது. என் நன்மைக்காக நான் பிறருக்கு தீங்கிழைக்கப்போவதில்லை என்று ஒருவன் சொல்வதென்பது ஒரு மன உச்சம்தான். ஓர் உண்மைஞானம்தான் அது.’
‘அர்ஜுனன் அந்நிலைக்கு வந்து நின்ற காரணத்தால்தான் கீதை அவனுக்குச் சொல்லப்பட்டது. எந்த குருவும் சீடனின் அறியாமையைக் கண்டு அவனுக்கு கற்பிக்க ஆரம்பிக்க மாட்டார். அவனுடைய அறிவை கண்டபின் மேலும் அறிவை அளிப்பதற்காகவே கற்பிக்க ஆரம்பிப்பார். அர்ஜுனனின் அந்த மனசஞ்சலம் ஒரு பெரிய விவேகம். ஆகவேதான் கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உள்வாங்கும் பக்குவமிருப்பதாகச் சொன்னார்.’
‘கிருஷ்ணன் ‘ நீ ஞானியரின் சொற்களைச் சொல்கிறாய்’ என்று அர்ஜுனனிடம் சொல்வது கிண்டலாகத்தான் என்று பலரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது தவறு. அது ஞானியரின் சொல்லேதான். ஆகவேதான் அந்த அத்தியாயமும் அர்ஜுன விஷாத யோகம் என்று சொல்லப்ப்ட்டுள்ளது. அதுவும் ஒரு யோகமே. அது கேள்வி மட்டும் உள்ள அத்தியாயம் அல்ல,அது ஒரு பதில்தான். முதற்கட்ட பதில்.’
‘பளிக்கறைப் பிம்பங்கள்’
மிக நுட்பமானதோர் உரை. எவ்வளவு எழுதினாலும் / பேசினாலும் இன்னமும் பேசப்படவிருக்கும் பேசுபொருள் பற்றிய கட்டுரை – ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நுட்பமான அகந்தை விளையாட்டு. லாசராவின் சிறுகதைக்கான திறப்பை எல்லோரா சிற்பத்தில் கண்டடைதலும், தண்மையான
காதல் versus வெம்மையான காமத்தை வண்ணதாசனின் சிறுகதை ஒன்றில் கண்டடைதலும் அபாரம். வேறொரு கட்டுரையில் (பூவிடைப்படுதல்) ஏணிப்படிகள் நாவலில் கேசவன் பிள்ளை நாகம்மா,
கார்த்தியாயினி இருவரிடமும் கொண்டுள்ள உறவையும் இந்த இடத்தில் நினைவு கூரலாம்.
ஜெமோவின் சங்கச் சித்திரங்கள் வாசித்தால் ஒரு விஷயம் புலப்படும். சங்கப் பாடல்கள் முழுதுமே கவிஞர்கள் தங்கள் மனஓட்டத்தை இயற்கையின் மீது ஏற்றிப் பாடி வைத்திருக்கின்றனர் என்பதே அது. அதையொட்டியே ஏ கே ராமனுஜம் அவர்களும் சங்கப் பாடல்களை அகநிலக் காட்சி (Interior Landscape) என்று குறிப்பிடுகிறார் என்பதுவும் அந்த நூலில் வரும்.
ஒரு உதாரணம். சங்க சித்திரங்களில் குன்றின் மேல் படர்வதற்குப் பதில் குன்று என்று யானை மேல் படர்ந்த கொடி என்ற பொருளில் ஒரு பாடல் வருகிறது. ஒரு மாபெரும் நம்பிக்கைச் சிதைவைச் சுட்ட யானையும் குன்றும் இங்கே பயன்படுகின்றன. குன்று நிலையானது. யானை நகர்ந்து சென்றுவிடக் கூடியது. குன்றெண்ணி யானையின் மீது படர்ந்த கொடி யானை நகர்ந்ததும் பட்டுப்போய் விடும்.
‘பூவிடைபடுதல்’ உரையை சங்க சித்திரங்களின் நீட்சியாகவே நாம் கொள்ளலாம். பூவிடைப்படுதல் உரை முழுதையும் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘அறிதலுக்கும் உணர்வதற்குமான வேறுபாடு. அதை நிறுவனங்கள் சொல்லித் தர முடியாது. சொந்த அனுபவத்தாலும் ரசனையுணர்வாலும் மட்டுமே அந்த நுண்மை கைகூடும்.’
தொகுப்பு முழுதும் நிறைய ஜென் கதைகள் காணக் கிடைக்கின்றன. கோணங்கியின் மாயாண்டிக் கொத்தன்,
அசோகமித்திரனின் திருப்பம், ஜெமோவின் திசைகளின் நடுவே கதைகளின் சாரமும் கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. அதிலும் ‘ஈரம்’ என்ற உரையில் இடம்பெறும் மாயாண்டிக் கொத்தன் பற்றிய சில பத்திகள் அபாரம்.
‘ஒருநாள் அவனுக்கு அந்த ரகசியம் பிடிகிடைக்கிறது. பிரச்சினை அவனுடைய ரசமட்டத்தில்தான். அதன் கணக்குகள் நகரத்தில் சரியாக வரவில்லை. அது கிராமத்தில் ஈரம் நிறைந்த செம்மண்ணால் ஆன சுவர்களை அளந்து அளந்து அமைந்த ரசமட்டம். நகரத்துச் சுவர்களுக்குள் ஈரமே இல்லை. ஈரமற்ற சிமிண்ட் சுவர்களை அளக்கும்போது ரசமட்டம் அலைபாய்கிறது. தப்பாக காட்டுகிறது. மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டத்தில் நகரமே ஆகாயத்தில் கோணலாக தொங்கிக்கிடக்கிறது.’
‘தன் ரசமட்டத்தை தூக்கி வீச எண்ணுகிறான் மாயாண்டிக்கொத்தன். ஆனால் அவனால் முடியவில்லை. அப்பனும் பாட்டனும் செய்த கணக்குகள் கொண்ட ரசமட்டம் அல்லவா? அதை மார்போடணைத்துக்கொண்டு நகரத்தை விட்டு ஓடுகிறான் மாயாண்டிக்கொத்தன்.’
‘தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளின் ஒருவராகிய கோணங்கி எழுதிய‘மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டம்’ என்ற கதை இது. இந்தக்கதைக்குள் புகுந்து எதையுமே நான் விளக்கப்போவதில்லை. ரசம் என்ற சொல்லுக்கு சாரம் என்ற பொருள் உண்டு என்பதை மட்டும் கவனப்படுத்த விரும்புகிறேன். நமது ரசமட்டங்களை செல்லாதவையாக ஆக்கும் ஒரு பிரம்மாண்டபுது உலகம் நம் கண்முன் உருவாகி வந்து கொண்டிருக்கிறதா என்ன? ஈரமற்ற உலகம். ஈரத்தின் கணக்குகள் அனைத்துமே தவறாக ஆகும் உலகம்?’
ஜெமோவின் முன்னுரையில் இருந்தே ஒரு பத்தியைக் கடன் வாங்கிக் கட்டுரையை முடிக்கிறேன்.
‘இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளை கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்’
பூவிடைப்படுதல் உரையின் காணொளியை கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கிக் காணலாம்.
சொல்முகம் | ஜெயமோகன் |..நற்றிணை பதிப்பகம் |..விலை ரூ.170/- |..பக்கங்கள் 208
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி
இதுவரை விஷ்ணுபுரம் படிக்கவில்லை. ஜெமோவும் இரண்டு கதைகளுக்கு மேல் படித்ததில்லை. உங்கள் ஜெமோ ஆர்வமும் பிடிப்பும் வியக்க வைக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி அப்பாதுரை.
Deleteஇந்தப் புத்தகத்தைப் பற்றியது அல்ல, என்றாலும் ஒரு கேள்வி. ஒருவகையில் இந்த இடுகை ஜெயமோகன் பற்றிய பொதுவான இடுகையாக உள்ளதால் அவர் அபிமானியான கோபிக்கு.
ReplyDeleteஅதாவது, ஜெ எழுதியிருந்தார், மணிப்பூர் (சுற்றுலா?) சென்று வந்த ஒரு மலையாளக் கவிஞரின் அனுபவங்களைக் கேட்டதிலேயே தனக்கு மணிப்பூர் பிரச்சினை பற்றி முழுவதும் புரிந்துவிட்டது என்றும், இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும் என்று அந்த மாநில மக்களே விரும்ப மாட்டார்கள் (!) என்றும், இரோம் ஷர்மிளாவுக்கு இது புரியவில்லை என்றும். அது எப்படி, வேறொருவர் அனுபவத்தைக் காதால் கேட்ட தனக்கே புரிந்த விஷயங்கள், அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மொழியைத் தாய் மொழியாகப் பேசிவரும் ஷர்மிளாவுக்குப் புரியவில்லை என்று ஒருவர் சொல்ல முடியும்? இதை ஜெ. யிடம் கேட்பீர்களா கோபி? உங்களை அவர் ஃபில்டரில் போட்டுவிட மாட்டார்தானே?!
@சரவணன், நீங்களே இதை ஜெமொவிடம் கேட்கலாம்
Deleteநான் கேட்டா அவர் ஃபில்டர் பண்ணி காபி குடிச்சிட்டு அடுத்த கேள்விக்குப் போய்விடுவார்...!
Deleteதிரு சரவணன்,
Deleteஜெயமோகன் ஒருத்தர்தான் இலக்கியவாதியா, அவர் மட்டும்தான் சிந்தனையாளரா, அவர் ஒருத்தர்தான் கருத்து சொல்றாரா?
ஏன் அவர் சொல்வதை மட்டும் கவனித்து எதிரிவினையாற்றுகிறீர்கள்?
மற்றவர்கள் யாருமே ஒரு பொருட்டில்லையா?
எத்தனை பேரைப் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறோம். கொஞ்சம் அதையும் பாருங்களேன், எவ்வளவோ அபத்தம் இருக்கு. அதையெல்லாம் சுட்டிக் காட்டினால் எங்களுக்குப் பயன்படும் அல்லவா?
நீங்கள்லாம் அவ்வளவு ஒர்த் இல்லை என்கிறீர்களா? :)
நன்றி.
தங்கள் வருகைக்கு முதலில் நன்றி சரவணன்.
Deleteஇந்த மணிப்பூர் பற்றின ஜெமோ’வின் பார்வையை நான் வாசித்ததில்லை. எங்கே, எப்போ சொன்னார்? லின்க் கிடைக்குமா?
படித்துவிட்டு வேண்டுமானால் என் கருத்தை சொல்கிறேன்.
நன்றி! சுட்டி; http://www.jeyamohan.in/?p=16714
Delete@சரவணன்
Deleteநீங்கள் சொல்வது:
1) மணிப்பூர் (சுற்றுலா?) சென்று வந்த...
2) ஒரு மலையாளக் கவிஞரின் அனுபவங்களைக் கேட்டதிலேயே
3) அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும்,
ஜெமோ எழுதியது
1) //சமீபத்தில் பாடபேதம் என்ற கேரள இடதுசாரி இதழ் சார்பில் ஐரோம் ஷர்மிளாவை சந்திக்க சென்ற குழுவில் இருந்த மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் //
ஐயா.... அந்தக் குழு ஷர்மிளாவை சந்திக்கப் போச்சாம் ஐயா.
2) இப்படித்தான் தொடங்குகிறார் ஜெமோ
//சமீபத்தில் பாடபேதம் என்ற கேரள இடதுசாரி இதழ் சார்பில் ஐரோம் ஷர்மிளாவை சந்திக்க சென்ற குழுவில் இருந்த மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் இங்கே கோதாவரிக்கு வந்தபோது மணிப்பூர் சிக்க்லைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் எண்ணிய சித்திரமே அவராலும் அளிக்கப்பட்டது. மணிப்பூரின் அரசியல் வரலாறு குறித்து நான் தனியாகவே எழுதவேண்டும். அதைப்பற்றி ஓரளவு ஆராய்ந்திருக்கிறேன். இங்கே ஒரு கோட்டுச்சித்திரம்//
தான் தீவிரமாக நம்பும் ஓர் கருத்துக்குப் பக்கப்பலம்தான் அந்த மலையாளக் கவிஞர் கொண்டு வந்த கருத்து என்றுதானே தொனிக்கிறது?
3) அப்போ நான் சென்னை அனகாபுத்தூர் தாண்டி ஏதும் கருத்து சொல்லா ஏலாதுங்க. ஏன் எங்க வீட்டு வாசப்படிக்கு வெளியே எந்த கருத்தும் சொல்ல முடியாதே....
கிரி, ஜெ. தானே மணிப்பூர் 10 ஆண்டுகளுக்கு முன் சென்று வந்திருப்பதாகக் கூட சொல்லியிருக்கிறார்தான். நான் கேட்பது,
Delete**** இந்த எளிய உண்மையை ஐரோம் ஷர்மிளா புரிந்துகொண்டிருக்கவில்லை. அவருக்குப் பின்னணியில் உள்ளவர்களும் புரிந்துகொள்ளவில்லை. ஐரோம் ஷர்மிளா உயிரைப்பணயம் வைத்து முன்வைக்கும் கோரிக்கை என்பது மக்கள் கோரிக்கை அல்ல. அது மக்கள் நாடும் தீர்வு அல்ல. *****
என்று நாம் எப்படிச் சொல்ல முடியும், இவருக்கே இருக்கும் புரிதல் இரோம் ஷர்மிளாவுக்கு இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
@சரவணன்
Deleteநான் மறுபடி சொல்றேன்...
3) அப்போ நான் சென்னை அனகாபுத்தூர் தாண்டி ஏதும் கருத்து சொல்லா ஏலாதுங்க. ஏன் எங்க வீட்டு வாசப்படிக்கு வெளியே எந்த கருத்தும் சொல்ல முடியாதே....
....இங்க இருந்துக்கிட்டு நீ எப்படி அப்படிப் பேசலாமுன்னு கேக்கறதுல நியாயம் இல்லைன்னு நான் நினைக்கிறேன். ஜெயமோகன் சொல்வது, அவர் கருத்து, அவர் முன் வைக்கும் வாதம் நூறு சதம் சரியா இருக்கணும்னு அவசியம் இல்லை. அவர் முழுக்க முழுக்க தப்பாக் கூட பேசலாம். ஆனா, பேச அனுமதி உண்டுன்னு நான் நினைக்கிறேனு சொல்ல வர்றேன்.
நீங்க ஏன் ஷர்மிளாவின் புரிதலும், அவரைப் பின் தொடர்பவர்களின் புரிதலும் சரின்னு சொல்லுங்களேன்.
இந்த மறுமொழியுடன் முடித்துக்கொள்கிறேன்!
Delete-ராகுல் திராவிடுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுப்பதும்
-இசைஞானியிடம் 'இந்தப் பாட்டு மோகனம்தானே?' என்று கேட்பதும்
-ஜெயமோகனிடம் சினிமாப்பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா என்பதும்
எப்படி மொண்ணைத்தனமோ, அதுபோல
-இங்கிருந்துகொண்டு இரோம் ஷர்மிளாவுக்கு மணிப்பூர் பழங்குடி இனக்குழு அரசியல் தெரியாது என்பதும்
-மொண்ணைத்தனமே!
/// நீங்க ஏன் ஷர்மிளாவின் புரிதலும், அவரைப் பின் தொடர்பவர்களின் புரிதலும் சரின்னு சொல்லுங்களேன்.///
ரொம்ப சிம்பிள்! அவர் அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர். அவருக்குமேல் மணிப்பூரின் 'கிரௌண்ட் ரியாலிட்டியை' எப்போதோ ஒருமுறை சென்று வந்தோ, பத்திரிகைச் செய்தி, செவி வழிச்செய்தி மூலமோ ஒரு தமிழரோ, மலையாளியோ புரிந்துகொள்வது இயலாத விஷயம். அருந்ததி ராய்க்கு பழங்குடிகளின் பிரச்சினை புரியவில்லை என்று சொல்வது வேறு; இரோம் ஷர்மிளாவுக்கு அது புரியவில்லை என்று சொல்வது வேறு!
ஜெயமோகனுக்குப் பேச அனுமதி உண்டுதான். தவளைகளுக்குக் கூச்சல்போட அனுமதி உண்டு என்பது போல!
ஜெமோ அறத்துடன் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்! இந்தப் புத்தகத்தையும் குறித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
DeleteMr.Gopi, please avoid refering jeymo always. Its not giving good flow of reading.
ReplyDeletePlease click this link and let us have your comment. I think,the lady is right!!.
http://charuonline.com/blog/?p=402
Your friend & regular reader of your super friendly blog.
S.Ravi
Kuwait
Dear Mr.Ravi,
DeleteSorry for the delayed response. Just happened to see your views.
Glad to know that you are a regular reader of my blog and thanks for the compliments about my blog. Thanks a lot for reading regularly.
Coming to your first view, this blog post is about a book written by JeMo. It is imperative to make references to the author. If you are referring to my blog posts in general, I believe I give reference to JeMo only when it is necessary. I don't think I always refer him as you pointed out above.
Moving on to the link you provided, I read the post you referred above. I have nothing to say about that.
Regards
Gopi
ஜெமொ எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசும்போது எழுதிய எழுத்தாளரைப் பற்றி பேசாமல், அவரை refer செய்யாமல் எப்படி பேசுவது...புரியவில்லை...
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி
Thanks Gopi on your 'swift' response.
ReplyDeleteI respect your views.
But I must say here that it irritates and stop the flow.
S.Ravi
kuwait